5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Washing Machine Care Tips: வாஷிங் மெஷினை இப்படி பராமரித்து கொள்ளுங்கள்.. ரிப்பேர் ஆகாது..!

Washing Machine: மனிதனின் தேவையாக இருக்கும் இயந்திரங்களை பற்றி பெரும்பாலும் கண்டுகொள்வது கிடையாது. நீங்கள் இயந்திரத்தை சரியான நேரத்தில் கவனிக்கவில்லை என்றால், சிக்கல் அதிகரிக்கும். சாதனம் விரைவில் செயலிழந்தால், செலவு அதிகமாகும். இந்தநிலையில் இன்று வாஷிங் மெஷினை பராமரிக்க என்னென்ன செய்யலாம், செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உங்களுக்கு சொல்கிறோம்.

Washing Machine Care Tips: வாஷிங் மெஷினை இப்படி பராமரித்து கொள்ளுங்கள்.. ரிப்பேர் ஆகாது..!
கோப்பு புகைப்படம்
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 28 Jul 2024 12:40 PM

வாஷிங் மெஷின் பராமரிப்பு: குளிர்சாதனப் பெட்டி, ஏசி, வாஷிங் மெஷின் போன்றவை இன்றைய நவீன வாழ்க்கையில் மக்களின் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. மனிதனுக்கு எப்படி கை, கால்கள் இல்லாமல் வாழ முடியாதோ, அதுபோல் செல்போன் உள்ளிட்ட சாதனங்கள் இல்லாமல் மனிதனால் ஒரு நாளை கூட கழிக்க முடியாது. இப்படியான சூழ்நிலையில், மனிதன் தனது ஆரோக்கியத்தை பராமரிக்க உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செய்கின்றன. மனிதனின் தேவையாக இருக்கும் இயந்திரங்களை பற்றி பெரும்பாலும் கண்டுகொள்வது கிடையாது. நீங்கள் இயந்திரத்தை சரியான நேரத்தில் கவனிக்கவில்லை என்றால், சிக்கல் அதிகரிக்கும். சாதனம் விரைவில் செயலிழந்தால், செலவு அதிகமாகும். இந்தநிலையில் இன்று வாஷிங் மெஷினை பராமரிக்க என்னென்ன செய்யலாம், செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உங்களுக்கு சொல்கிறோம்.

Also read: Bathroom Cleaning: பாத்ரூம் உப்புக்கரையை ஈசியா போக்கலாம்.. இதோ எளிதான சில வழிகள்!

வாஷிங் மெஷினில் அதிக துணிகளை போடாதீர்கள்:

உங்கள் வீட்டில் நீண்ட நாட்கள் துவைக்காமல் துணிகள் இருந்தால், அதை ஒட்டுமொத்தமாக வாஷிங் மெஷினில் போடக்கூடாது. அதிக துணிகள் இருந்தால், அதை இரண்டு அல்லது மூன்றாக பிரித்து வாஷிங் மெஷினில் துவைக்க போடுங்கள். துணிகளை அளவுக்கேற்ப இயந்திரத்தில் பயன்படுத்துவதே நல்லது. இல்லையெனில், இயந்திரத்தின் சமநிலை இழந்து, இயந்திரக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

சலவை தூள்கள்:

வாஷிங் மெஷினில் சலவை தூள் அல்லது லீகுய்ட் போன்றவற்றை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் இயந்திரத்தில் போடும் துணிகளின் அளவிற்கு ஏற்ப சலவை பொருட்களை பயன்படுத்துவது நல்லது. அதிக சலவை பொருட்களை பயன்படுத்தினால், இயந்திரத்தின் அடியில் தங்கி கோளாறுகள் ஏற்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம்.

கவனித்து துணிகளை போடுங்கள்:

துணிகளை இயந்திரத்தில் போடும் முன் பணம், நாணயங்கள், உலோகப் பொருள்கள் உள்ளதா என சரிபார்த்து போடுங்கள். இயந்திரத்தில் உலோகப் பொருள்கள் அல்லது கூர்மையான பொருட்கள் இருந்தால் இயந்திரம் இயங்கும்போது சிக்கி மாட்டிக்கொள்ளும். இதனால் வாஷிங் மெஷின் பழுதாக வாய்ப்புகள் அதிகம்.

சுத்தம்:

ஒவ்வொரு முறை வாஷிங் மெஷின் பயன்படுத்திய பிறகு, உட்புறத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில், துணி நூல்கள், அழுக்கு போன்றவை சேர்ந்து இயந்திரம் பழுதடைய வாய்ப்புகள் அதிகம். இயந்திரத்தை சுத்தம் செய்யும்போது வினிகர், பேக்கிங் சோடா தண்ணீரில் கரைத்து இயந்திரத்தை சுத்தம் செய்வது நல்லது.

கேஸ்கெட் என்பது வாஷிங் மெஷினில் வெவ்வேறு பாகங்கள் இணைக்கப்பட்டுள்ள ரப்பர் அல்லது சிலிகான் ரப்பர்களை குறிக்கிறது. ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும்போது இவற்றில் அழுக்குகள் சேர்வதோடு, நீரின் உப்புத் தன்மையும் சேருகிறது. இதனால் சில நாட்களில் வாஷிங் மெஷினின் கதவு சரியாக மூடப்படாமல் கேஸ்கட்களும் மிகவும் லூசாகிவிடும். அத்தகைய சூழ்நிலையில், வாஷிங் மெஷின் பழுது ஏற்படுகிறது. பழுது ஏற்படாமல் இருக்க ஒரு மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்தால், இந்த பிரச்சனைகள் ஏற்படாது.

Also read: Children Care: குழந்தைகள் செல்போன் யூஸ் பண்ணுதா? உஷார்.. இவ்வளவு பிரச்னை தேடி வரும்!

சரிபார்த்தல்:

வாஷிங் மெஷின் இயந்திரத்தின் உட்புறம் துருப்பிடிக்கிறதா இல்லையா என்பதை அடிக்கடி சரிபார்ப்பது நல்லது. ஒருவேளை துருப்பிடித்தால், இரண்டு கப் சுண்ணாம்புச் சாற்றை வெந்நீரில் கலந்து, ஒரு முறை இயந்திரத்தை ஆன் செய்து இயக்கலாம். துருப்பிடிக்கவில்லை என்றால், எப்போதும் போல பயன்படுத்தலாம்.

Latest News