Sore Throat: மழைக்காலத்தில் தொண்டை புண் தொல்லையா..? இதை செய்து குணப்படுத்தலாம்!
Health Tips: தொண்டை புண் மிக நீண்ட நாட்களாக இருந்தால், இது ஸ்ட்ரெப்டோக்காக்கால் பிரச்சனையை வழிவகுக்கும். அதாவது, ஸ்ட்ரெப் தொண்டை புண்ணை ஏற்படுத்தும் பாக்டீரியா தொற்று ஆகும். இதை தொடர்ந்து அலட்சியப்படுத்தும்போது முடக்கு வாதம், நெஃப்ரிடிஸ் போன்ற அபாயத்தை விளைவிக்கும்.
மழை மற்றும் குளிர்காலத்தில் சளி அல்லது காய்ச்சல் போன்ற பிரச்சனைகளால் தொண்டை புண் ஏற்படுகிறது. இந்த பருவகாலத்தில் தொண்டை புண் ஒரு பொதுவான நோயாக கருதப்படுகிறது. ஆனால், இதற்கு பின்னால், பல முக்கிய காரணங்கள் இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, இதை அலட்சியம் செய்வது ஆபத்தானது. தொண்டை புண் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை தொடர்புகொள்வது நல்லது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வெளியிட்ட தகவலின்படி, தொண்டை புண், விழுங்குவதில் சிரமம், மூக்கு சிரமம், மூக்கு ஒழுகுதல், காய்ச்சல், இருமல் மற்றும் வெண்படல அழற்ஜி போன்ற அறிகுறிகளும் பல ஆபத்தான நோய்களை குறிக்கலாம்.
ALSO READ: Health Tips: உள்ளாடை இல்லாமல் இரவில் தூங்கி பாருங்க.. உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்!
புற்றுநோய்:
தொண்டைப்புண் பிரச்சனை நீண்ட நாட்களாக உங்களுக்கு நீடித்தால், அது புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். இது குரல்வளை அல்லது டான்சில்ஸிலிருந்து தொடங்குகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
ஒவ்வாமை:
சில நேரங்களில் ஒவ்வாமை தொண்டை புண், வீக்கம் ஏற்படுகிறது. இது தூசி, மண் அல்லது உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்படலாம். இந்த சூழ்நிலையில், நிலைமை மோசமடையக்கூடும். இத்தகைய சூழ்நிலையில் மருத்துவரை அணுகுவது நல்லது.
பாக்டீரியா தொற்று:
தொண்டை புண் மிக நீண்ட நாட்களாக இருந்தால், இது ஸ்ட்ரெப்டோக்காக்கால் பிரச்சனையை வழிவகுக்கும். அதாவது, ஸ்ட்ரெப் தொண்டை புண்ணை ஏற்படுத்தும் பாக்டீரியா தொற்று ஆகும். இதை தொடர்ந்து அலட்சியப்படுத்தும்போது முடக்கு வாதம், நெஃப்ரிடிஸ் போன்ற அபாயத்தை விளைவிக்கும். இதையடுத்து, உடனடியாக மருத்துவரை தொடர்புகொண்டு பரிசோதனைகளை செய்து, அதன் சிகிச்சையை உடனடியாக மேற்கொள்வது நல்லது.
வயிற்று பிரச்சனை:
நீண்ட நாட்களாக இருக்கும் வயிற்று பிரச்சனைகள் அமில ரிஃப்ளக்ஸ் அல்லது இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோயுடன் வருகின்றன. இது வயிற்று அமிலத்தால் தொண்டை புண் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் ஆட்டோ இம்யூன் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியை ஏற்படுத்துகிறது.
சளியால் ஏற்பட்ட தொண்டை புண் சரி செய்வது எப்படி..?
தொண்டை வலி மற்றும் தொண்டை புண் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற கஷாயம் அல்லது மூலிகை டீ குடிப்பது நல்லது. தொண்டை வலியை போக்க துளசி டீ, இஞ்சி டீ, மஞ்சள் டீ, இலவங்கப்பட்டை டீ போன்றவற்றை உட்கொள்ளலாம். தினமும் 1 முதல் 2 கப் மூலிகை டீ குடிப்பது தொண்டைக்கு நிவாரணம் தரும். அதேபோல், தொண்டை வீக்கம் பிரச்சனை நீக்கும்.
ஓய்வு கொடுங்கள்:
தொண்டை வலியை போக்க அதிகம் போச ட்ரை பண்ணாமல் இருப்பது நல்லது. நீங்கள் தொண்டைக்கு எவ்வளவு ஓய்வெடுக்கிறீர்களோ, அவ்வளவு விரைவில் தொற்று நீங்கும். இதனுடன் தொடர்ந்து சுடுதண்ணீர் எடுத்துகொள்வது தொண்டை நோய்த்தொற்றை அகற்றும்.
உப்பு நீரில் வாய் கொப்பளித்தல்:
தொண்டை வலி அல்லது தொண்டை புண் ஏற்பட்டால் உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. உப்பு நீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழியும். மேலும், உப்பு நீர் சளியை கரைக்கவும் உதவி செய்யும். தினமும் உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது தொண்டை புண் மற்றும் வீக்கத்தை குறைக்கும். வேப்பம் பூவை போட்டு வெந்நீரில் ஆவி பிடிப்பது தொண்டை புண் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணத்தை தரும்.
துளசி:
தொண்டையில் வலி இருந்தால் தினமும் துளசியை சாப்பிடலாம். துளசியில் பூஞ்சை எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பண்புகள் உள்ளன. தண்ணீரில் துளசி போட்டு கொதிக்க வைத்து தேன் மற்றும் மிளகு சேர்த்து குடிப்பது சிறந்த பலனை தரும்.
ALSO READ: Silk Saree Care Tips: நீங்கள் வாங்கியது உண்மையான பட்டுப் புடவையா..? இவற்றை எப்படி பராமரிப்பது..?
இஞ்சி:
தொண்டை வலி மற்றும் புண்களை சரிசெய்ய இஞ்சியை பயன்படுத்தலாம். இஞ்சியில் அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இதனை உட்கொள்வதால் தொண்டை புண்ணில் இருந்து நிவாரணம் தரும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)