Cavity Home Remedy: சொத்தை பற்களால் அவதியா..? இவற்றை செய்து நிவாரணம் பெறுங்கள்!
Teeth Cavity: சொத்தை பற்களானது பற்களின் மேற்பரப்பில் உள்ள பாக்டீரியாக்களால் ஏற்படுகின்றன. உங்கள் பற்களில் சொத்தை பற்கள் ஏற்பட்டால் அதை வீட்டிலேயே குணப்படுத்த முடியாது. அதற்கான சிகிச்சையை ஒரு மருத்துவரால் மட்டுமே சரி செய்ய முடியும். ஆனால், சொத்த பற்கள் மேலும் அதிகரிக்காமலும், அதன் வலியை குறைக்கவும் சில வழிமுறைகள் உள்ளன. அந்தவகையில் இன்று நமது பற்கள் மற்றும் ஈறுகளை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்று தெரிந்து கொள்வோம்.
சொத்தை பல் எனப்படும் பல் சிதைவு, நமது வாய் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். பற்கள் அழுக ஆரம்பித்தால் உங்களால் எதுவும் சாப்பிட முடியாது, அது அதிக வலியை ஏற்படுத்தும், துர்நாற்றத்தையும் தரும். இந்த பல் வலி காரணமாக அன்றாட வாழ்க்கையின் இயல்பான செயல்களை செய்வதில் பல சிரமங்கள் ஏற்படும். சொத்தை பல்கள் ஏற்படுவதற்கு நாம்தான் முக்கிய காரணம். சில விஷயங்களை சரி செய்வதன்மூலம் பற்களை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம். அந்தவகையில் இன்று நமது பற்கள் மற்றும் ஈறுகளை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்று தெரிந்து கொள்வோம்.
சொத்தை பற்களானது பற்களின் மேற்பரப்பில் உள்ள பாக்டீரியாக்களால் ஏற்படுகின்றன. உங்கள் பற்களில் சொத்தை பற்கள் ஏற்பட்டால் அதை வீட்டிலேயே குணப்படுத்த முடியாது. அதற்கான சிகிச்சையை ஒரு மருத்துவரால் மட்டுமே சரி செய்ய முடியும். ஆனால், சொத்த பற்கள் மேலும் அதிகரிக்காமலும், அதன் வலியை குறைக்கவும் சில வழிமுறைகள் உள்ளன.
ALSO READ: Health Tips: நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமா..? இந்த விஷயத்தை பாலோ பண்ணாலே போதும்!
கிராம்பு எண்ணெய்:
பாதிக்கப்பட்ட பற்களில் கிராம்பு எண்ணெயை தடவினால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம். கிராம்புகளில் யூனெனோல் என்ற பண்பு உள்ளது. இது ஒரு இயற்கையான வலி நிவாரணி மற்றும் உணர்வின்மையை தரும். இது வலியை குறைத்து, நிவாரணம் அளிக்கிறது. கிராம்பு எண்ணெயை தவிர கிராம்பு பொடியையும் வலியுள்ள பல்லில் வைத்து வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
தேங்காய் எண்ணெய்:
சுமார் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி, நன்றாக கொப்பளித்து வெளியே துப்பி விடுங்கள். தினமும் இதை செய்வதன்மூலம், பற்களில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, வலியிலிருந்து நிவாரணம் தரும்.
பூண்டு:
பூண்டு பல வகையில் நம் உடலுக்கு நன்மை பயக்கும். பூண்டில் உள்ள ஆன்டிமைக்ரோபியல், ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் பண்புகள் நிறைந்துள்ளன. இதை சாப்பிடுவது ஒன்றல்ல பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. பல் வலியை போக்கவும் பூண்டை பயன்படுத்தலாம். ஒரு பல் பூண்டை நசுக்கி அதனுடன் லேசான உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்டை வலியுள்ள பல்லில் தடவவும். பூண்டு வலியை குறைக்க பெரிதும் உதவும்.
தேன் மற்றும் இலவங்கப்பட்டை:
பல்வலியை குறைக்க தேன் மற்றும் இலவங்கப்பட்டை தூள் செய்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்டை பற்களில் தடவுவதன் மூலம், பல் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இந்த பேஸ்ட் பல் வலியை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
உப்பு மற்றும் மிளகு:
உப்பு மற்றும் கருப்பு மிளகு சம அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை வலியுள்ள பல்லில் தடவி சிறிது நேரம் விடுங்கள். இது வலியிலிருந்து நிவாரணம் அளிக்கவும், பல்வலியை குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் சில டிப்ஸ் இங்கே
வாயை கழுவுங்கள்:
சொத்தை பற்கள் உள்ளவர்கள் எதையும் சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக வாயை கொப்பளிக்க வேண்டும். நீங்கள் எந்த உணவை சாப்பிட்டாலும் அது உங்கள் பற்களுக்கு இடையில் சிக்கி கொள்ளும். உங்கள் வாயை தண்ணீரில் கழுவுவதன் மூலம் பல துலக்கவும், குறிப்பாக சர்க்கரை உங்களுக்கு பற்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் மற்றும் சிதைவை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் எதை சாப்பிடாலும் வாயை கொப்பளிப்பது நல்லதாக இருக்கும்.
இரண்டு முறை பல துலக்குங்கள்:
ஒவ்வொரு பல் மருத்துவரும் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குதல் நல்லது என்று கூறுகின்றனர். இதை செய்வது மேலும் சிதைவை ஏற்படுவதை தடுப்பது மட்டுமல்லாமல், முழு வாயையும் சுத்தப்படுத்தும். காலையில் எழுந்ததும் இரவு தூங்கும் முன்பும் பல் துலக்குவது நல்லது.
பல் டாக்டரை தொடர்பு கொள்ளுங்கள்:
சொத்தை பற்கள் இருப்பவர்கள் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் பல் மருத்துவரிடம் சென்று சுத்தம் செய்து வழக்கமான சோதனைகளை மேற்கொள்ளுங்கள். ஏற்கனவே உங்கள் சிக்கல்களை கண்டறிந்து, தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள்.