5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Throat Infection: தொண்டை பிரச்சினைகளிலிருந்து விடுபடும் வீட்டு வைத்தியங்கள்..!

குளிர்காலம், மழைக்காலம் வந்து வந்து விட்டாலே பலருக்கும் பலருக்கும் காய்ச்சல் சளி போன்ற பல்வேறு நோய்க்கிருமிகளின் தாக்குதல் அதிகரித்து காணப்படும். அதுவும் காய்ச்சலுடன் சளியும் சேர்ந்தால் நமது தொண்டைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொற்று நோயின் தாக்குதல் அதிக அளவில் காணப்படும் பொழுது தொண்டை கட்டுதல் தொண்டை கரகரப்பு தொண்டை கமறல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதை எவ்வாறு இயற்கை வைத்தியம் மூலம் சரி செய்வது என்பது குறித்து காணலாம்.

Throat Infection: தொண்டை பிரச்சினைகளிலிருந்து விடுபடும் வீட்டு வைத்தியங்கள்..!
மாதிரி புகைப்படம்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 26 Jul 2024 22:16 PM

சளி இருமல் காய்ச்சல் போன்றவற்றினால் பல பிரச்சினைகள் ஏற்பட்டாலும் தொல்லை சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் நம்மை வாட்டி வதைக்கின்றன. சரியான நேரத்திற்கு உணவு எடுக்க முடியாமலும், சாப்பிட முடியாமலும் பலர் கஷ்டப்படுவதை நாம் பார்த்திருப்போம். பாக்டீரியா தொற்று சுவாச நோய் பாதிப்பு ஒன்று பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதால் அதுபோன்ற நேரங்களில் பலருக்கும் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு அதனை சரி செய்வது குறித்து காணலாம். சளி, காய்ச்சல் போன்று தொண்டைப்புண், தொண்டை பகுதியில் வீக்கம், தொண்டையில் கரகரப்பு, தொண்டையில் வலி போன்றவை உண்டாகி தொண்டைப்புண் ஏற்படுகிறது.

Also Read:உணவு பொருட்களின் தன்மையும்.. அதன் நலன்களும்…!

தொண்டை கரகரப்பு

சைனஸ் தொற்று போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் மாசுபாடுகளாலும் தொண்டை சார்ந்த பிரச்சினைகள் அதிக அளவில் நம்மை தாக்குகிறது. இது போன்ற நேரங்களில் தொண்டை வலி தொண்டை கரகரப்பு போன்றவை அதிக அளவில் ஏற்படுகிறது. தொண்டை கரகரப்பு உள்ளவர்கள் சுடு தண்ணீரில் உப்பினை போட்டு நன்றாக கொப்பளிப்பதன் மூலம் கரகரப்பு நீக்கப்படுகிறது. மேலும் சுக்கு, மிளகு திப்பிலி ஏலக்காய் சேர்த்த பாலினை தேன் கலந்து சாப்பிட்டு வருவதன் மூலமும் தொண்டை கரகரப்பு சரியாகும்.

தொண்டை வலி

காய்ச்சல் சளி போன்ற நேரங்களில் தொண்டை வலி மிகவும் அதிகமாக காணப்படுவதால் சிலருக்கு பேச முடியாத சூழலும் ஏற்படும். இது போன்ற நேரங்களில் சுண்ணாம்பும் விளக்கெண்ணையும் சூடு செய்து தொண்டுகள் தடவி வருவதன் மூலம் வலி படிப்படியாக குறையும்.

Also Read:நடிகை அஞ்சலி பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுகோங்க!

தொண்டை புண்

சளி இருமல் போன்று தொடர்ந்து இருக்கும் பொழுது அது போன்ற தொற்று நோய்கள் மூலமாக தொண்டை புண் ஏற்படுகிறது. தொண்டை புண் லேசான எரிச்சல் போன்றவை அதிகரித்தால், வேப்பம்பூவை சுடு தண்ணீரில் போட்டு ஆவி பிடிப்பதன் மூலம் தொண்டை புண் விரைவில் ஆறும். மேலும் கிராம்பை நன்றாக தீயில் வாட்டி அதனை சாப்பிட்டு வருவதன் மூலமும் தொண்டைப்புண் படிப்படியாக குணமாகும். தொடர்ந்து தொண்டிப்புண் அதிகரித்து காணப்பட்டால் உடனே மருத்துவரை நாடி மருந்துகளை உட்கொள்வது சிறந்தது.

Latest News