Home Tips: துணியின் ஓரத்தில் விடாப்பிடி அழுக்கா..? ஒரு நிமிடத்தில் காணாமல் செய்யும் டிப்ஸ்..!
Lifestyle: உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு உடையில் படிந்த கறையை போக்க நீங்கள் எவ்வளவோ முறை முயற்சித்து இருப்பீர்கள். துணிகளை கையாலும், வாஷிங் மெஷினை பயன்படுத்தி துவைத்து அந்த கறை போகாமல் இருந்திருக்கலாம். இதற்கு பிறகு, பிரஸ் கொண்டு நீங்கள் அழுத்தி தேய்த்து உங்கள் கைகளில் வலி வந்திருக்குமே தவிர, கறையானது போயிருக்காது. பிரஸ் கொண்டு எவ்வளவு முறை அழுத்தி தேய்க்கிறமோ, அந்த உடை கிழியும் அபாயத்தை கொடுக்கும்.
துணி ஓரத்தில் உள்ள அழுக்கு: துணி துவைப்பதுதான் இந்த உலகில் மிகவும் கடுப்பான வேலைகளில் ஒன்று. துணி துவைப்பது ஒரு போரை விட கடினமாக பார்க்கப்படுகிறது. உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு உடையில் படிந்த கறையை போக்க நீங்கள் எவ்வளவோ முறை முயற்சித்து இருப்பீர்கள். துணிகளை கையாலும், வாஷிங் மெஷினை பயன்படுத்தி துவைத்து அந்த கறை போகாமல் இருந்திருக்கலாம். இதற்கு பிறகு, பிரஸ் கொண்டு நீங்கள் அழுத்தி தேய்த்து உங்கள் கைகளில் வலி வந்திருக்குமே தவிர, கறையானது போயிருக்காது. பிரஸ் கொண்டு எவ்வளவு முறை அழுத்தி தேய்க்கிறமோ, அந்த உடை கிழியும் அபாயத்தை கொடுக்கும். இத்தகைய சூழ்நிலையில், இந்த உதவிகளின் மூலம் உங்கள் துணிகளின் ஓரத்தில் அல்லது நீண்டகாலமாக படிந்திருக்கும் கறையை ஒரு நொடியில் சுத்தம் செய்ய முடியும்.
ALSO READ: Neem Water Bath: சருமத்திற்கு பல நன்மைகளை தரும் வேப்ப இலை குளியல்.. இப்படி குளிச்சு பாருங்க!
படிகார கற்கள்:
ஷேவிங் செய்யும் போது படிகாரம் பயன்படுத்துவதை நீங்கள் பலமுறை பார்த்திருப்பீர்கள். இது உங்கள் துணிகளை சுத்தம் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். படிகாரத்தின் உதவியுடன், துணிகளின் ஓரங்களில் படிந்திருக்கும் அழுக்குகளை நீங்கள் எளிதாக சுத்தம் செய்யலாம். இதற்கு படிகாரப் பொடியின் பெரும்பகுதியை தண்ணீரில் கரைக்கவும். இப்போது இந்த கரைசலை துணிகளின் ஓரங்களில் தடவி ஒரு நாள் அப்படியே வைக்கவும். அடுத்த நாள், துணியை மிகவும் மெதுவாக தேய்த்து, பின்னர் துவைக்கவும். துணியை அழுத்தி தேய்க்கக் கூடாது. இப்படி செய்வதன் மூலம், நீண்ட நாட்களாக உங்கள் துணியில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கும்.
கோல்கேட் பேஸ்ட்:
நம் பற்களை தினந்தோறும் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் கோல்கேட் பேஸ்ட், துணிகளின் ஓரத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கலாம். உங்கள் விரலில் சிறிதளவு கோல்கேட்டை எடுத்து ஆடைகளின் ஓரத்தில் மெதுவாக தடவவும். இதற்குப் பிறகு, சுமார் ஒரு மணி நேரம் துணியை அப்படியே வைத்துவிடுங்கள். கோல்கேட் முற்றிலும் காய்ந்ததும், துணிகளைத் துவைக்கத் தயாராகுங்கள். இதற்கு வெந்நீர் எடுக்க வேண்டும், சிறிது டிடர்ஜென்ட் பவுடரையும் பயன்படுத்த வேண்டும். இந்த இரண்டையும் சேர்த்த பிறகு, துணியை மெதுவாக உங்கள் கைகளால் தேய்க்கவும். இதன் மூலம், துணியின் ஓரத்தில் ஒட்டியிருக்கும் அழுக்குகள் முற்றிலும் சுத்தம் செய்யப்பட்டு, துணி கிழியும் அபாயம் இருக்காது.
ALSO READ: Relationship Tips: நீங்கள் விரும்பும் பெண் உங்களை விரும்புகிறாரா இல்லையா..? இப்படி தெரிஞ்சுகோங்க..!
எலுமிச்சை-சோடா:
எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடாவை பயன்படுத்தியும் உங்கள் துணியின் ஓரத்தில் உள்ள அழுக்குகளை நீக்கலாம். முதலில், ஒரு பாத்திரத்தில் சிறிது சோடாவை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது எலுமிச்சையை இரண்டாக வெட்டி, அதில் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். எலுமிச்சையின் வெட்டப்பட்ட பகுதியில் சிறிது சோடாவைத் தடவி, துணிகளின் ஓரங்களில் மெதுவாகத் தேய்க்கவும். சுமார் 10-15 நிமிடங்கள் இதை மீண்டும் மீண்டும் செய்து சிறிது நேரம் விட்டு விடுங்கள். சிறிது நேரம் கழித்து தண்ணீரில் துணியைக் கழுவினால், அழுக்கு முற்றிலும் காணாமல் போய்விடும்.