5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Home Tips: வீட்டில் கண்ணாடி பாத்திரங்கள் இருக்கா? இப்படி சேஃப்டி பண்ணுங்க!

Glass Vessel: கண்ணாடி பாத்திரங்கள் எவ்வளவு அழகானதோ, அதே அளவிற்கு ஆபத்தை கொண்டு இருக்கும். இவற்றை பராமரிக்க ஒரு சிறிய தவறு செய்தால் கூட உடைந்து போகும். எனவே, கண்ணாடி பாத்திரங்களை எப்படி சரியாக பராமரிப்பது என்று தெரிந்து கொள்வது அவசியம். உங்கள் கண்ணாடி பாத்திரங்களை எந்த வித சேதமும் இல்லாமல் அழகாகவும் நல்ல நிலையில் வைத்திருக்க சில குறிப்புகளை உங்களுக்கு தருகிறோம்.

Home Tips: வீட்டில் கண்ணாடி பாத்திரங்கள் இருக்கா? இப்படி சேஃப்டி பண்ணுங்க!
கோப்பு புகைப்படம்
mukesh-kannan
Mukesh Kannan | Published: 14 Aug 2024 16:49 PM

கண்ணாடி பாத்திரம்: கண்ணாடி பாத்திரம் வீட்டை அலங்கரிக்கும் முக்கியமான பொருட்களில் ஒன்று. ஏதேனும் வீட்டு விசேஷங்களுக்கு சென்றால், கண்ணாடி பாத்திரங்களை பரிசாக கொடுத்து நாம் அவர்களின் மனதை கவருவோம். இப்படி இருக்க அனைவரது வீட்டிலும் கண்ணாடி பொருட்கள் மற்றும் கண்ணாடி பாத்திரங்கள் இல்லாமல் இருக்காது. கண்ணாடி பாத்திரங்கள் எவ்வளவு அழகானதோ, அதே அளவிற்கு ஆபத்தை கொண்டு இருக்கும். இவற்றை பராமரிக்க ஒரு சிறிய தவறு செய்தால் கூட உடைந்து போகும். எனவே, கண்ணாடி பாத்திரங்களை எப்படி சரியாக பராமரிப்பது என்று தெரிந்து கொள்வது அவசியம். உங்கள் கண்ணாடி பாத்திரங்களை எந்த வித சேதமும் இல்லாமல் அழகாகவும் நல்ல நிலையில் வைத்திருக்க சில குறிப்புகளை உங்களுக்கு தருகிறோம்.

ALSO READ: Home Tips: ஃப்ரிட்ஜில் இருந்து கெட்ட வாசனை வருகிறதா..? இதை செய்து போக்குங்க..!

தனித்தனியாக வைத்திருங்கள்:

முதலில் கண்ணாடி பாத்திரங்களை வலிமையான பாத்திரங்களுக்கு அருகில் வைக்காமல் தனித்தனியாக வைத்திருங்கள். இதன் மூலம், அவை உடைவதற்கான வாய்ப்புகள் குறைவு. தனியே வைப்பதன்மூலம், நீங்கள் மற்ற பொருட்களை எடுக்கும்போது கண்ணாடி பாத்திரங்களில் படாது, உடையவும் உடையாது.

ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்காதீர்கள்:

கண்ணாடி பாத்திரங்கள் மற்றும் உங்களின் பாதுகாப்பு கருதி அவற்றை உயரத்தில் வைக்க வேண்டிய அவசியம் என்றால், பாத்திரங்களுக்கு இடையிலும், அடியிலும் துணி அல்லது காகிதத்தை வைக்கவும். இது கண்ணாடி பாத்திரங்கள் அடிபடுவதையும், உடைப்படுவதையும் தடுக்கும். இது உங்கள் கண்ணாடி பாத்திரங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும்.

ஒன்றாக வைக்க வேண்டுமென்றால்..

கண்ணாடி பாத்திரங்களை ஒன்றன் பின் ஒன்றாக வைத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், முதலில் எப்போதும் கனமான பாத்திரங்களை கீழேயும், லேசான பாத்திரங்களை மேலேயும் வைத்திருங்கள். இவ்வாறு வைத்திருப்பதன் மூலம், கீழே உள்ள கனமான பாத்திரங்களின் மீது அழுத்தம் குறைவாக இருக்கும், இதன் காரணமாக அவை நீண்ட நேரம் நன்றாக இருக்கும் மற்றும் உடையாது. இந்த நடவடிக்கைகள் உங்கள் பாத்திரங்களை சரியாக வைத்திருக்க உதவும்.

பத்திரமான இடத்தில் வைத்திருங்கள்:

உங்கள் வீட்டு சமையலறையின் அலமாரியில் நீங்கள் கண்ணாடி பாத்திரங்களை வைத்திருக்கும் போதெல்லாம், துணி போன்ற மென்மையான ஒன்றை விரித்து அதன் மீது கீழ் வைக்கவும்.

ALSO READ: Home Tips: துணியின் ஓரத்தில் விடாப்பிடி அழுக்கா..? ஒரு நிமிடத்தில் காணாமல் செய்யும் டிப்ஸ்..!

கவனமாக கையாளுங்கள்:

நீங்கள் கண்ணாடி பாத்திரங்களை எடுக்கும்போதோ அல்லது வைக்கும்போதோ மிகவும் கவனமாக இருப்பது அவசியம். கண்ணாடி விஷயத்தில் அவசரம் கொண்டால், அது உங்கள் கைகளை கிழிக்க நேர்ந்திடும். அவற்றை பாதுகாப்பாக வைப்பதன்மூலம், உடையும் ஆபத்து குறைந்து, உங்களை நீங்கள் பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம். அதேபோல், மேலே குறிப்பிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டால் கண்ணாடி பாத்திரங்களை நீண்ட காலமாக பாதுகாக்கலாம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News