Gas Cylinder Tips: கேஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி? பாதுகாப்பான சமையல் குறிப்புகளும் இங்கே!
Gas Safety Tips: நமது அம்மா, அப்பா காலத்தில் மண்ணெண்ணெய் அடுப்பு பயன்படுத்தப்பட்டு பின்னர் கேஸ் சிலிண்டர்களுக்கு மாறினார்கள். தற்போது வரை நம் தலைமுறையினர் கேஸ் அடுப்பை பயன்படுத்தி வருகிறோம். இதன் காரணமாக அனைவரது வீட்டில் கேஸ் அடுப்பு இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்கு கேஸ் சிலிண்டர் நமக்கு உதவிகரமாக இருந்தாலும், அதை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும், அதை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும் பலருக்கும் தெரிவதில்லை. இத்தகைய பயனுள்ள டிப்ஸை உங்களுக்கு சொல்லுகிறோம்.
கேஸ் சிலிண்டர்: நமது தாத்தா, பாட்டி காலத்தில் விறகு அடுப்பு கொண்டு சமையல் செய்து வந்தார்கள். நமது அம்மா, அப்பா காலத்தில் மண்ணெண்ணெய் அடுப்பு பயன்படுத்தப்பட்டு பின்னர் கேஸ் சிலிண்டர்களுக்கு மாறினார்கள். தற்போது வரை நம் தலைமுறையினர் கேஸ் அடுப்பை பயன்படுத்தி வருகிறோம். இதன் காரணமாக அனைவரது வீட்டில் கேஸ் அடுப்பு இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்கு கேஸ் சிலிண்டர் நமக்கு உதவிகரமாக இருந்தாலும், அதை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும், அதை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும் பலருக்கும் தெரிவதில்லை. இத்தகைய பயனுள்ள டிப்ஸை உங்களுக்கு சொல்லுகிறோம்.
சிலிண்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:
- சிலிண்டரை முற்றிலும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சியில் இருந்து மட்டுமே வாங்க வேண்டும்.
- சிலிண்டர் சரியாக சீல் வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து வாங்க வேண்டும்.
- சீல் கிழிந்திருந்தால் பயன்படுத்த வேண்டாம்.
- ஒவ்வொரு முறை சிலிண்டர் வாங்கும்போது, அது சரியான எடையை கொண்டுள்ளதா என்பதை சோதித்து பார்க்க வேண்டும்.
- சிலிண்டரின் தேதியை சரிபாருங்கள். அதாவது A என்பது ஜனவரி முதல் மார்ச் வரையும், B என்பது ஏப்ரல் முதல் ஜூன் வரை, C என்பது ஜூலை முதல் செப்டம்பர் வரை, D என்பது அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஆகும். அதாவது, உங்கள் சிலிண்டரில் D-24 எனில் சிலிண்டரை 2024 ஆம் ஆண்டு டிசம்பர் வரை பயன்படுத்தலாம். இந்த தேதி காலாவதியான பிறகு, சிலிண்டரை பயன்படுத்த வேண்டாம்.
சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி..?
- சமையல் தொடங்குவதற்கு முன்பே, அனைத்து பொருட்களையும் அருகில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
- அடுப்பை எரியவிட்டு ஒவ்வொரு பொருளையும் தேடிக் கொண்டிருந்தால் எரிவாயு வீணாகும்பிரஷர் குக்கரை பயன்படுத்தினால், ஒரே சமயத்தில் அனைத்து பொருட்களையும் வேகவைத்து விடலாம். இதனால் எரிவாயு விரயம் குறையும்.
- வேக வைப்பதற்கு அதிக நேரம் தேவை என்றால் அடுப்பை சிம்மில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
- அடுப்பு சரியாக எரியவில்லை என்பதற்காக பர்னரை குத்தி பெரிது செய்தல் கூடாது.
- அடுப்பை அணைப்பதுடன், கேஸ் சிலிண்டரையும் அணைத்தால் எரிவாயு விரைவில் காலியாகாது.
பாதுகாப்பான சமையல்:
- கேஸ் சிலிண்டர் சமைக்கும்போது சமையலறையில் நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். கதவு, ஜன்னல் திறந்து வைத்து சமைக்க பழகி கொள்ளுங்கள்.
- விரைவில் தீப்பிடிக்கும் பொருட்களை சிலிண்டருக்கு அருகில் வைக்க வேண்டாம்.
- சிலிண்டர் பயன்படுத்தி முடித்த பிறகு, ரெகுலேட்டரை அணைத்து பழகி கொள்ளுங்கள்.
- சிலிண்டரை வெப்பம், ஈரப்பதம், சூரிய ஒளியில் இல்லாதப்படி பார்த்து கொள்ளுங்கள்.
- கேஸ் சிலிண்டரை குழந்தைகளுக்கு எட்டாதவாறு வைத்து கொள்ளுங்கள்.
- ரெகுலேட்டர் மற்றும் கேஸ் பைப்பை வருடத்திற்கு ஒருமுறை மாற்றி கொள்ளுங்கள். அதுவும் ஐஎஸ்ஐ சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.
ALSO READ: Mustard Seeds: உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரும் கடுகு… இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!
கேஸ் கசிவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..?
கேஸில் உள்ள ரெகுலேட்டர் பர்னர்களில் வாயு கசிவு ஏற்பட்டால், அவற்றை உடனடியாக மூடுங்கள். காற்றோட்டத்திற்காக கதவுகள், ஜன்னல்களை திறந்து வைத்து பாதுகாப்பாக கையாளுங்கள்.