Oral Cancer: இதெல்லாம் இருந்தா வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள்.. உடனே ஹாஸ்பிட்டல் போங்க..!

Mouth Cancer: அனைவருக்கும் வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு தேவை என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தோன்றிய உடனேயே சிகிச்சை தொடங்கினால், நோயாளிக்கு எளிதில் சிகிச்சை அளித்து அதை குணப்படுத்தவும் முறியும். எனவே வாய் புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் அதை தடுப்பதற்கான வழிகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Oral Cancer: இதெல்லாம் இருந்தா வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள்.. உடனே ஹாஸ்பிட்டல் போங்க..!

கோப்பு புகைப்படம்

Updated On: 

28 Oct 2024 12:38 PM

வாய் புற்றுநோய்: உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயில் பல வகைகள் இருந்தாலும், இவற்றில் வாய் புற்றுநோய் மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், அலட்சியத்தாலும் மக்கள் இந்நோய்க்கு உரிய நேரத்தில் சிகிச்சையை எடுத்து கொள்ள வில்லை. இதனால் சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. அனைவருக்கும் வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு தேவை என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தோன்றிய உடனேயே சிகிச்சை தொடங்கினால், நோயாளிக்கு எளிதில் சிகிச்சை அளித்து அதை குணப்படுத்தவும் முறியும். எனவே வாய் புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் அதை தடுப்பதற்கான வழிகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Kidney Cancer : கிட்னி கேன்சர்.. இந்த பிரச்னை எல்லாம் உங்கள் சிறுநீரகத்தை பாதிக்கும்!

இறப்பு சதவீதம் அதிகம்:

கிடைத்த புள்ளிவிவரங்களின்படி, உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.77 லட்சம் பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், சுமார் 1.77 லட்சம் பேர் இறக்கின்றனர், இது புற்றுநோயால் ஏற்படும் மொத்த இறப்புகளில் 2 சதவீதம் ஆகும்.

வாய் புற்றுநோய் என்றால் என்ன..?

வாய் புற்றுநோய் உதடு, ஈறுகள், நான்கு, கன்னங்களுக்குள், நாக்கின் கீழ், வாயின் வெளிப்புறம் மற்றும் உள் பகுதிகளில் ஏற்பாடலாம். இந்த வகை புற்றுநோயை வாய் அல்லது வாய்வழி புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. இந்த புற்றுநோய் முதல் வாயில் உள்ள செல்களின் டி.என்.ஏவை அளிக்க தொடங்குகின்றன. வாயில் புற்றுநோய் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். சுற்றுச்சூழல் காரணங்கள், சூரியனின் புற ஊதாக் கதிர்கள், உணவில் உள்ள நச்சு இரசாயனங்கள், புகையிலை, ஆல்கஹால், பென்சீன், கல்நார், ஆர்சனிக், பெரிலியம், நிக்கல் போன்றவை வாய் புற்றுநோய் ஏற்பட காரணங்களாக அமையும்.

தற்போதைய சூழ்நிலையில் சிகரெட், பீடி, சுருட்டு, புகையிலை போன்றவற்றை எந்த வடிவத்திலும் உட்கொள்பவர்களுக்கு இந்தப் புற்றுநோய் வேகமாகப் பரவும். உடலுறவு மூலம் பரவும் மனித பாப்பிலோமா வைரஸ் வாய்ப் புற்றுநோயையும் உண்டாக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே, பாதுகாப்பாக உடலுறவு மேற்கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றன. அதேபோல், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் வாய் புற்றுநோய் வரலாம் என்றும் கூறப்படுகிறது.

வாய் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?

  1. முதலில் பற்களின் தளர்வு ஏற்படும்.
  2. வாய்க்குள் கட்டி ஏற்பட்டு அது பெரிதாக வளரும்.
  3. வாயில் அடிக்கடி வலி ஏற்படும்.
  4.  காதுகளில் கீழும் அதிக வலி ஏற்படும்.
  5.  உணவை விழுங்குவதில் சிரமம்.
  6. உதடுகள் அல்லது வாயில் புண் ஏற்பட்டு பெரிதாகும். இது சிகிச்சைக்குப் பிறகும் குணமடையாது.

ALSO READ: Sleep Paralysis: இரவில் உங்களை யாரோ நெஞ்சில் அழுத்துவது போல இருக்கிறதா? இதுதான் காரணம்..!

வாய் புற்றுநோயைத் தடுப்பது எப்படி..?

  1. புகையிலை உட்கொள்வதை உடனடியாக நிறுத்துங்கள்.
  2.  மதுவும் அருந்த வேண்டாம்.
  3. அதிக சூரிய ஒளியில் வெளியே செல்லும்போது, அதற்கான சன் க்ரீம் பயன்படுத்துங்கள்
  4. வாய் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும்.
  5. ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.
  6. பதப்படுத்தப்பட்ட உணவு, துரித உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?