5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Christmas Mutton Recipe: இட்லி ஆட்டுக்கால் குழம்பு காம்போ… கமகம குழம்பு செய்வது எப்படி?

மட்டன் குழம்பு செய்முறை: பண்டிகை காலம் நெருங்கிவிட்டது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருக்கிறது. இந்தப் பண்டிகைகளுக்கு வீட்டில் உள்ளவர்களுக்கு ஆட்டுக்கால் குழம்பு செய்து அசத்துங்கள். எளிமையாக ஆட்டுக்கால் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

Christmas Mutton Recipe: இட்லி ஆட்டுக்கால் குழம்பு காம்போ… கமகம குழம்பு செய்வது எப்படி?
ஆட்டுக்கால் குழம்பு (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 16 Dec 2024 11:25 AM

இந்தியாவில் சைவம் உண்பவர்களை விட அசைவ பிரியர்களே அதிகம்.‌ அசைவத்தை விதவிதமான முறையில் சமைத்து சாப்பிட பலரும் விரும்புகின்றனர். சிலர் பண்டிகை காலங்களில் அசைவங்களை தங்களுக்கு பிடித்த முறையில் சமைத்து உண்கின்றனர். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு காலை உணவாக ஆட்டு காலில் குழம்பு வைத்து இட்லியுடன் உங்கள் வீட்டில் உள்ளவர்களை அமர்க்களப்படுத்துங்கள்.

தேவையான பொருள்கள்:

ஆட்டுக்கால், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டேபிள் ஸ்பூன், தண்ணீர் இரண்டு டம்ளர், தேவைக்கேற்ப உப்பு.

அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:

மிளகு ஒரு டீஸ்பூன், சோம்பு ஒரு டீஸ்பூன், கசகசா ஒரு டீஸ்பூன், முந்திரி 8, தேங்காய் நான்கு துண்டு

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:

எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், அன்னாசிப்பூ -1, பட்டை – 2, கிராம்பு – 4, சோம்பு அரை டீஸ்பூன், வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்), பெரிய தக்காளி – 1 (பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்), இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டேபிள் ஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் – 1 1/2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய சிறுது கொத்தமல்லி.

Also Read: Christmas chicken Recipes: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்.. சிக்கனை வைத்து இந்த ரெசிபி ட்ரை பண்ணுங்க!

செய்முறை:

முதலில் ஆட்டுக்காலை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு குக்கரில் ஆட்டுக்கால், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், 2 குவளை தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து குக்கரை மூடி ஆறு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு கடாயில் மிளகு, சோம்பு, கசகசா, முந்திரி சேர்த்து நல்ல மணம் வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அத்துடன் துருவிய தேங்காயையும் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும். இதை சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.

பின்பு வறுத்த பொருட்களை மிக்ஸியில் நீரூற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை அதனுடன் சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வதக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பொடியாக வெட்டிய தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். தக்காளி மென்மையாக வதங்கிய பின் அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து குறைவான தீயில் கிளறி விட வேண்டும்.

Also Read: Christmas Recipes: வீட்டிலேயே சுவையான பிரவுனி, மால்புவா செய்வது எப்படி?

இப்பொழுது குக்கரை திறந்து அதில் வதக்கிய வெங்காயம் தக்காளியை சேர்த்து அத்துடன் அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து நன்றாக கிளறி உப்பு பார்த்துக்கொள்ள வேண்டும். மீண்டும் குக்கரை மூடி அடுப்பில் வைத்து ஆறு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின்பு குக்கரை திறந்து ஐந்து நிமிடம் குழம்பை கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் ருசியான ஆட்டுக்கால் குழம்பு தயார்.

Latest News