5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Afternoon Sleep: பகலில் தூங்குவது நல்லதா கெட்டதா..? எவ்வளவு நேரம் தூங்கலாம்..?

Afternoon Nap Benefits: தூக்கத்தின் சமநிலை உடலுக்கு மட்டுமல்ல, முழு மூளைக்கு முக்கியமானது. தூக்கத்தின் தேவை ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமாக இருக்கும். பொதுவாக 7 முதல் 8 மணிநேரம் தூக்கம் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பல நேரங்களில் மக்கள் தங்களது வேலை, குடும்பம் மற்றும் பிற பொறுப்புகள் காரணமாக அதிகாலையில் எழுந்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

Afternoon Sleep: பகலில் தூங்குவது நல்லதா கெட்டதா..? எவ்வளவு நேரம் தூங்கலாம்..?
தூக்கம் (Image: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 08 Oct 2024 15:04 PM

மதியம் சாப்பிட்டவுடன் தூக்கம் வருவது இயற்கையான ஒன்று. மதியம் உணவு உண்ணும்போது, செரிமான அமைப்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக மூளைக்கு இரத்த ஓட்டம் குறையும். இதனால், உங்களுக்கு தூக்கம், சோர்வு போன்றவைகள் ஏற்படும். சாப்பிட்ட பிறகு, உடலில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது ஒருவருக்கு அதிக தூக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு, நீங்கள் கவலைப்பட தேவையில்லை. அந்தவகையில், மதியம் தூங்குவது உடலுக்கு நல்லதா? கெட்டதா..? மதியம் தூங்குவது உங்கள் ஆரோக்கியத்தில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Food Recipes: பேரிச்சம்பழ அல்வா செய்வது எப்படி..? எளியாத செய்யக்கூடிய சூப்பர் ரெசிபி!

தூக்கத்தின் சமநிலை உடலுக்கு மட்டுமல்ல, முழு மூளைக்கு முக்கியமானது. தூக்கத்தின் தேவை ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமாக இருக்கும். பொதுவாக 7 முதல் 8 மணிநேரம் தூக்கம் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பல நேரங்களில் மக்கள் தங்களது வேலை, குடும்பம் மற்றும் பிற பொறுப்புகள் காரணமாக அதிகாலையில் எழுந்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இவர்களுக்கு மதிய தூக்கம் அவசியமானதாக இருக்கும். அதிகரித்து வரும் வேலை, பிஸியான வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் போன்ற சூழ்நிலை உள்ளவர்களுக்கு, மதிய தூக்கம் புத்துணர்ச்சியை தருகிறது.

மதியம் தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்:

உடலுக்கு மட்டுமின்றி, மனதுக்கும் மதிய தூக்கம் ஓய்வை தரும். பகலில் சுமார் 1 மணிநேர தூக்கம் முழு உடலின் தசைகளும் ஓய்வெடுக்க உதவி செய்கிறது. மேலும், இந்த தூக்கத்தால் மனதிற்கும் ஓய்வு கிடைக்கிறது. இதையடுத்து, தூங்கி எழுந்தவுடன் அந்த மக்கள் புத்துணர்ச்சியுடன் காட்சியளிப்பார்கள்.

அதிகமாக பயணம் செய்தவர்கள், இரவில் அதிக நேரம் கண் முழித்து வேலை செய்பவர்களுக்கு தூக்கம் தடைபடும். இந்த நேரத்தில், இவர்கள் மதிய தூக்கம் சோர்வை போக்க உதவி செய்யும். அதன் காரணமாகவே, அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளை கவனிக்கும் இல்லத்தரசிகள், மதியம் சிறிது நேரம் தூங்கி பழகி கொள்கிறார்கள்.

போதுமான தூக்கம் வரவில்லை என்றால் எரிச்சல், மனநிலை மாற்றங்கள், நடத்தையில் மாற்றம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் ஏராளம். இவர்கள் மதிய நேரம் தூங்கும்போது புத்துணர்ச்சியாக இருப்பார்கள்.

மதிய தூக்கத்தின்போது என்ன செய்யக்கூடாது..?

அரை மணி நேரத்திற்கு மேல் தூங்க வேண்டாம். இதை விட அதிக நேரம் தூங்குவது உங்கள் உடலின் உயிரியல் கடிகாரத்தை மோசமாக பாதிக்கும். இரவு என்பது இயற்கையாகவே உறக்கத்திற்கானது. எனவே, இரவில் போதுமான தூக்கத்தை பெறுவது முக்கியம்.

உங்கள் பிள்ளை 3 மணிக்குப் பிறகு பள்ளியிலிருந்து வீடு திரும்பினால், அதன்பிறகு, அவர்களை தூங்க விடாமல் விளையாட விடுங்கள். இரவில் சீக்கிரம் தூங்குவதைப் பழக்கப்படுத்துங்கள். மதியம் 3 மணிக்கு மேல் தூங்கினால் இரவு குழந்தைகளின் தூக்கம் கெடும்.

ALSO READ: Green Apple Benefits: பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? தெரிஞ்சுகோங்க..!

மதியம் தூங்காமல் இருக்க என்ன செய்யலாம்..? தூங்குவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்..?

சாப்பிட்ட உடனே மதியம் தூங்குவது செரிமான செயல்முறையை பலவீனப்படுத்துகிறது. இதனால் உடல் பருமன் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். மேலும், இது வாயு மற்றும் அமிலத்தனமை பிரச்சனைகளையும் வழிவகுக்கும். சாப்பிட்ட உடனையே தூங்க செல்வது ஆரோக்கியமான பழக்கம் அல்ல, இது மதியம் அல்லது எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம்.

மதிய உணவுக்கு பிறகு சிறிது நடைப்பயிற்சி செய்து, செரிமானத்திற்கு நேரம் கொடுத்து, அதன் பிறகு தூங்க செல்லுங்கள். இதுவே ஆரோக்கியமான வழி. மதியம் தூங்க வேண்டும் என்று நினைத்தால், மணிக்கணக்கில் தூங்காமல், அதிகபட்சமாக ஒரு மணிநேரம் தூங்குவது நல்லது.

இரவில் போதுமான அளவு தூங்குங்கள். பகலில் அதிக நேரம் தூங்குவது தூக்க சுழற்சியை சீர்குலைக்கும். எனவே, பகலில் லேசான தூக்கம் நல்ல பலனைத் தரும். ஒருவர் பகலில் 1 மணிநேரத்திற்கு மேல் தூங்கக்கூடாது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News