5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Sleep Time by Age: எவ்வளவு நேரம் தூங்கனும் தெரியுமா? வயசுக்கேற்ற தூக்கம் இதுதான்.. முழு விவரம்..

இன்றைய டிஜிட்டல் உலகில் எங்கு பார்த்தாலும் ஸ்மார்ட்போன் பயன்பாடு. இதனால், இரவில் தூங்க வேண்டும் என்பதையே நம்மில் பலரும் மறந்துவிடுகின்றோம். இப்படி தினமும் போதுமான அளவு தூங்காமல் இருந்தால், பல விதமான உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். பொதுவாக, ஒருவர் தினமும் 7-8 மணிநேரம் தூங்க வேண்டும் என்று தான் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், நாம் தூங்கும் நேரமானது வயது அடிப்படையில் மாறும் என்று ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், உங்க வயதிற்கு ஏற்ப நீங்கள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். தற்போது இந்த பதிவில், வயதிற்கு ஏற்ப தூக்கம் நேரம் எவ்வளவு என்று தெரிந்துக் கொள்வோம்.

Sleep Time by Age: எவ்வளவு நேரம் தூங்கனும் தெரியுமா? வயசுக்கேற்ற தூக்கம் இதுதான்.. முழு விவரம்..
தூக்கம்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 27 Jul 2024 02:09 AM

உடலும் மனமும் சரியாக செயல்பட வேண்டுமென்றால், போதுமான அளவு தூக்கம் மிகவும் அவசியம். ஏனென்றால், நாம் தூங்கும்போது தான் தினமும் உடல் செயல்பாடுகளுக்கு தேவையான ஏராளமான செயல்முறைகளை உடல் செய்கிறது. தூக்கம் நம்மை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்வதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் தொற்று மற்றும் நோய்களை எதிர்த்து போராடுவதற்கு தேவையான சக்தி நமது உடலுக்கு கிடைக்கிறது. தினமும் போதுமான அளவு தூங்குவதால், வளர்ச்சி, மன அழுத்தம், வளர்சிதை மாற்றம், பசி மற்றும் முழுமையைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன. 

Also Read: Thiruttani: அப்படிப்போடு.. திருத்தணி முருகன் கோயில் செல்பவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!

அதுமட்டுமல்லாமல், தூக்கம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதோடு, மன அழுத்த ஹார்மோன்களைக் குறைத்து மனநலத்தை பாதுகாக்கிறது. நீண்ட நாட்களாக சரியாக தூங்காமல் இருப்பவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, உடலில் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க போதுமான தூக்கம் மிக மிக முக்கியம். இந்த நன்மைகளை கருத்தில் கொண்டு, இனியாவது சரியான நேரத்திற்கு போதுமான அளவு தூங்க முயற்சி செய்யுங்கள்.

வயதிற்கு ஏற்ப தூக்கம்:

பொதுவாக, அனைவருமே 7-8 மணி நேரம் இரவில் தூங்க வேண்டும் என்று பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்று ஒரு நபரின் தூக்க நேரமானது, அவரின் வயதை பொறுத்து மாறுபடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), நல்ல தூக்கத்திற்கு ஒரு பொதுவான நேரத்தை பரிந்துரை செய்துள்ளது.

Also Read: Chennai Crime: கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் விபரீத முடிவு.. சென்னையில் பரபரப்பு!

உங்க வயதிற்கு ஏற்ப எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

  • புதிதாகப் பிறந்த குழந்தைகள் (0-3 மாதங்கள்): 14-17 மணி நேரம்
  • குழந்தைகள் (4-12 மாதங்கள்): 12-16 மணி நேரம்
  • குழந்தைகள் (1-2 வயது): 11-14 மணி நேரம்
  • மழலை குழந்தைகள் (3-5 வயது): 10-13 மணி நேரம்
  • பள்ளி வயது குழந்தைகள் (6-12 வயது): 9-12 மணி நேரம்
  • பதின்வயதினர் (13-17 வயது): 8-10 மணி நேரம்
  • பெரியவர்கள் (18-60 வயது): 7-9 மணிநேரம் 
  • வயதானவர்கள் (61-64 வயது): 7-9 மணி நேரம்
  • 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்கள்: 7-8 மணி நேரம்

Latest News