Kidney health: சிறுநீரக பாதிப்பை தடுக்க வேண்டுமா..? அப்போ! ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் தண்ணீர் குடிங்க!
Water: உடலில் உள்ள நீரின் அளவு குறையும்போது, உடலானது பல நோய்களால் சூழ தொடங்குகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள், தினசரி சரியான அளவு தண்ணீர் குடிப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதுடன், பசியையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. உடலில் முக்கிய உறுப்பான சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கவும் நிறைய தண்ணீர் எடுத்துகொள்வது அவசியமானது. தண்ணீர் உதவியுடன் சிறுநீரக செயல்பாடு மேம்படுவதுடன், உடலில் குவிந்துள்ள நச்சுகளை அகற்றுகிறது.
தண்ணீர்: உடலுக்கு உணவு என்பது எந்த அளவிற்கு முக்கியோ, அதைவிட அதிக அளவு தண்ணீர் எடுத்துகொள்வது முக்கியம். உடலில் நீரின் அளவு எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ, உடல் அந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கும். உடலில் உள்ள நீரின் அளவு குறையும்போது, உடலானது பல நோய்களால் சூழ தொடங்குகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள், தினசரி சரியான அளவு தண்ணீர் குடிப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதுடன், பசியையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. உடலில் முக்கிய உறுப்பான சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கவும் நிறைய தண்ணீர் எடுத்துகொள்வது அவசியமானது. தண்ணீர் உதவியுடன் சிறுநீரக செயல்பாடு மேம்படுவதுடன், உடலில் குவிந்துள்ள நச்சுகளை அகற்றுகிறது.
ALSO READ: Orange Fruit Benefits: தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிடுங்க.. புற்றுநோய், ஆஸ்துமாவை அண்டவிடாது!
உடலை ஆரோக்கியமான வைத்துக்கொள்ள ஒவ்வொரு உறுப்பு சரியாக செயல்பட வேண்டும். நமது உறுப்புகள் சரியாக செயல்பட உணவு மற்றும் தண்ணீர் போதிய அளவு தினந்தோறும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும், குறிப்பாக சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்த, உடலுக்கு சரியான தண்ணீர் தேவை. இந்தநிலையில் இன்று உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது பெரும் ஆபத்து:
மக்கள் பெரும்பாலும் சாப்பிட்டு முடித்தபிறகு தண்ணீரை கடமைக்கு எடுத்துகொள்கிறார்கள். இதுவே, பின் நாளில் அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துவிடுகிறது. சிறு வயதாக இருக்கும்போது உடல் வலிமையாக தோன்றலாம், ஆனால், நீங்கள் இளமையை கடந்து குறிப்பிட்ட வயதை தொடும்போது சிறு சிறு அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். உடலில் நீர் பற்றாக்குறை இருந்தால், நீரிழப்பு ஏற்பட்டால் முதலில் சிறுநீரகம் பாதிக்கப்படும். இதனால், உடலில் கெட்ட கழிவுகள் சேர ஆரம்பித்து சிறுநீரகத்தை பாதிக்கிறது. குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் உள்ளது. இது தவிர, சிறுநீர் பாதை தொற்று (UTI) மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்றவையும் ஏற்படலாம்.
ஒரு நபர் ஒருநாளில் எத்தனை லிட்டர் தண்ணீர் எடுக்க வேண்டும்..?
குறிப்பிட்ட வயது முதலே நீங்கள் குறைந்தது 2 முதல் 4 லிட்டர் தண்ணீரை எடுத்துக்கொள்ள பழக்கம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது உங்கள் சிறுநீரகத்தை பாதுகாப்பது மட்டுமின்றி உடலுக்கு தேவையான ஆற்றல், இரத்த ஓட்டம் உள்ளிட்ட சிலவற்றையும் மேம்படுத்துகிறது. இருப்பினும், உங்கள் பாலினம், வேலை, வயது மற்றும் உடல் அளவை பொறுத்து மருத்துவரின் ஆலோசனையின்படி நீங்கள் தண்ணீர் எடுத்துகொள்வது நல்லது. சிறுநீரகத்தை பாதுகாக்க ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க நீங்கள் பழகி கொள்வது அவசியமான ஒன்று.
ALSO READ: Kidney Health : இந்த அறிகுறிகள் இருந்தால் கிட்னி பிரச்னை என்று அர்த்தம்.. இதைப்படிங்க முதல்ல!
சிறுநீரக நோய் உள்ளவர்கள் ஒருநாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்..?
சிறுநீரகங்கள் தண்ணீர் வழியாக உடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றும் பணியில் ஈடுபடுகிறது. நீங்கள் உடலில் தண்ணீரின் அளவு குறையும்போதே சிறுநீரகங்களில் பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன. உங்களுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே எவ்வளவு லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுநீரக டயாலிசிஸ் தேவைப்படுபவர்கள் குறைந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகத்தில் அழுத்தம் ஏற்பட்டு பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)