5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Daily Shaving: தினமும் ஷேவ் செய்வது நல்லதா..? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ஷேவ் செய்யலாம்?

Shaving Myths: இன்றைய கால இளைஞர்கள் தங்கள் உடல் மற்றும் வேலைக்கு ஏற்ப தாடி வைத்து, தங்களை அழகாக காட்டி கொள்கிறார்கள். பலருக்கு தினமும் காலையில் எழுந்தவுடன் தாடியை ஷேவ் செய்து கொள்கிறார். அந்தவகையில், இன்று தினந்தோரும் தாடியை ஷேவ் செய்வது நல்லதா அல்லது தீங்கு விளைவிக்குமா என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

Daily Shaving: தினமும் ஷேவ் செய்வது நல்லதா..? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ஷேவ் செய்யலாம்?
தாடி ஷேவிங் (Image: GETTY)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 26 Oct 2024 14:37 PM

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் தனது ஆளுமையை வெளிக்காட்ட வேண்டும் என்று எண்ணி, தாடிகளை வைக்கிறார்கள். அதே நேரத்தில், போலீஸ் மற்றும் ராணுவத்தில் வேலை செய்பவர்கள் ஷேவ் செய்து தங்களது முகத்தை க்ளீனாக வைத்திருக்கிறார்கள். இன்றைய கால இளைஞர்கள் தங்கள் உடல் மற்றும் வேலைக்கு ஏற்ப தாடி வைத்து, தங்களை அழகாக காட்டி கொள்கிறார்கள். பலருக்கு தினமும் காலையில் எழுந்தவுடன் தாடியை ஷேவ் செய்து கொள்கிறார். அந்தவகையில், இன்று தினந்தோரும் தாடியை ஷேவ் செய்வது நல்லதா அல்லது தீங்கு விளைவிக்குமா என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Health Tips: சாக்ஸ் இல்லாமல் ஷூ அணியும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்? இந்த பிரச்சனைகள் ஏற்படும்..!

ஷேவிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

முதலில் ஷேவிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம். ஷேவிங் சருமத்தில் சேரும் அழுக்குகளை சுத்தம் செய்கிறது. சருமம் தாடி இல்லாமல் சுத்தமாக இருக்கும்போது, சருமத்தின் உள்ளே இருந்து திறந்து சுவாசிக்கும் வாய்ப்பை தருகிறது. மேலும், சரும துளைகளை உள்ளே இருந்து திறந்து, முகப்பருக்கள் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது. எனவே, உங்கள் முக சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்புவோர் ஷேவ் செய்வது நல்லது.

தினமும் ஷேவ் செய்வது அவசியமா..?

தினந்தோறும் ஷேவிங் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. தினமும் காலையில் முகத்தில் பிளேட் படும்போது சில பாதிப்புகள் ஏற்படும். இதன் காரணமாக, சருமம் வறண்டு வறட்சியடைய தொடங்கும். இதுமட்டுமல்லாமல், முகத்தில் பிளேட் படுவதால் அரிப்பு மற்றும் எரியும் உணர்வு ஏற்படலாம். எனவே, தினமும் ஷேவிங் செய்வதை தவிர்க்க வேண்டும்.

வாரத்திற்கு எத்தனை முறை ஷேவ் செய்வது நல்லது..?

வாரத்திற்கு குறைந்தது 3 முறை ஷேவ் செய்வது நல்லது. ஏனெனில், இது சருமத்தை பராமரிப்பதுடன், எந்த தீங்கையும் விளைவிக்காது. தினமும் ஷேவிங் செய்வது தவிர்த்து டிரிம்மர் உள்ளிட்ட சாதனைகளை பயன்படுத்தலாம். இது உங்களுக்கு சரும ஆரோக்கியமாக வைக்க உதவி செய்வதுடன், முகத்திற்கு பொலிவை தரும்.

இந்த பிரச்சனை இருக்கிறதா..?

மிகவும் உணர்திறன் வாய்ந்த தோல் உள்ளவர்கள் ஷேவிங் செய்த பிறகு அரிப்பு அல்லது எரிச்சலை சந்தித்தால் தோல் மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது. சரியான ஷேவிங் க்ரீம் அல்லது ஜெல் தேர்வு செய்யாமல் போன்ற சருமத்திற்கு சேதத்தை விளைவிக்கலாம். மேலும், சரியான ஷேவிங் முறையை நீங்கள் கடைபிடிக்காவிட்டாலும் தோலில் வெட்டுக்கள் விழும் அபாயம் உள்ளது. எனவே, காயத்தை தராத வகையில் தரமான ரேசர் பயன்படுத்தி ஷேவ் செய்யுங்கள்.

தாடி வைத்திருப்பவர்கள் எப்படி முகத்தை பாதுகாப்பது..?

நீண்ட நாள்களாக தாடி வைத்திருப்பவர்களுக்கும் எந்த பாதிப்புகளும் ஏற்படாது. இருப்பினும், நீண்ட காலமாக தாடி வைத்திருப்பவர்கள் அதை தினமும் நன்கு கழுவி சுத்தம் செய்வது முக்கியம். பெரும்பாலும், தாடி வைத்திருப்பவர்களுக்கு தூசி, கிருமிகள், எண்ணெய் மற்றும் இறந்த சரும செல்கள் போன்றவை முகத்தில் குவிந்து விடும். இது தொற்று, தோல் துளைகள் அடைப்பு மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படலாம். எனவே, முகம் மற்றும் தாடி என இரண்டையும் பாதுகாக்க ஃபேஷ் வாஷ் அல்லது க்ளென்சர் கொண்டு கழுவுவது அவசியம்.

ALSO READ:Diwali Cleaning Tips for Home: தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்ய போகிறீர்களா..? இவற்றை செய்தால் வீடு பளீச் பளீச்..!

தினமும் ஷேவிங் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள்:

  • தினமும் ஷேவிங் செய்வது சருமத்தில் இருக்கும் முடியுடன் எண்ணெய்யையும் நீக்கும். இதனால், உங்கள் முகம் விரைவில் வறண்டு போகும்.
  • தினமும் பிளேட் முகத்தில் படும்போது எரிச்சல் போன்ற பிரச்சனை தரும்.
  • தினமும் ஷேவிங் செய்வதால் முகத்தில் கரடுமுரடான தோற்றத்தை தரும்.
  • தினமும் ஷேவிங் செய்வதால் சருமத்தின் பளபளப்பு குறையும்.
  • தினமும் ஷேவிங் செய்யும்போது தோலில் இருந்து வெளியே வருவதற்கு பதிலாக, உள்ளே முடி வளர தொடங்கும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News