Protein: எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு புரதம் எடுக்கலாம்? அதிக புரதம் உடலில் என்ன செய்யும்..?
Health Tips: பலர் அதிவிரைவாக உடல் எடையை குறைக்க சிலர் அதிகளவில் தினமும் புரத உணவுகளை எடுத்து கொள்கிறார்கள். இப்படி, நாம் எடுத்துகொள்ளும்போது நம் உடல் சரியாக புரதத்தை ஜீரணிக்கவில்லை என்றால் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
நமது உடலுக்கு புரதம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நமது உடலை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் மாற்ற புரதம் அவசியம். புரதங்கள் தசைகள், தோல், நொதிகள் மற்றும் ஹார்மோன்களுக்கான கட்டுமானப் பொருளாக செயல்படுகிறது. புரதத்தின் நுகர்வு உடல் திசுக்களை உருவாக்க உதவுகிறது. ஆனால் நம் உடல் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பை எவ்வாறு சேமிக்க முடியுமோ, அதேபோல் புரதத்தை சேமிக்க முடியாது. அதன்படி சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஒவ்வொருவரும் தினமும் எத்தனை கிராம் புரதத்தை உட்கொள்ள வேண்டும், அதிகளவில் புரதம் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Health Tips: 30 வயதுக்குள் மிரட்டும் இதய நோய்.. பாதுகாப்பது எப்படி?
எவ்வளவு புரதம் ஒருநாளைக்கு எடுத்துக்கொள்ளலாம்..?
தினமும் புரதம் எடுத்துக்கொள்ளுவது உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். புரதத்தை எடுத்துக்கொள்ளாமல் விட்டால் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதேநேரத்தில், அதிகப்படியான புரதம் எடுத்துக்கொள்வதும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே ஒவ்வொருவருக்கும் அவரவர் எடைக்கு ஏற்ப புரதத்தை எடுத்து கொள்வது நல்லது. உதாரணத்திற்கு, சுமார் 50 கிலோ எடையுள்ள நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் புரதத்தை உட்கொள்ள வேண்டும். இருப்பினும், புரத உட்கொள்ளல் உங்கள் வயது, உடல் எடை, உடல் தகுதி மற்றும் செயல்பாட்டு நிலை ஆகியவற்றைப் பொறுத்தது. எனவே ஒருமுறை நீங்கள் எடுத்துக்கொள்ளும் புரத அளவு குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
பலர் அதிவிரைவாக உடல் எடையை குறைக்க சிலர் அதிகளவில் தினமும் புரத உணவுகளை எடுத்து கொள்கிறார்கள். இப்படி, நாம் எடுத்துகொள்ளும்போது நம் உடல் சரியாக புரதத்தை ஜீரணிக்கவில்லை என்றால் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதாவது, நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் புரதம் சரியாக ஜீரணிக்கப்படாவிட்டால், இது மலச்சிக்கல், அஜீரணம், வாய்வு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
புரதம் உடல் எடையை குறைக்க உதவுகிறது என்றாலும், அதை அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிக்கவும் வழிவகுக்கும். சில அறிக்கைகளின்படி, அதிக புரத உணவை உண்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் அதிகம் என்று கூறப்படுகிறது. அதேபோல், அதிகப்படியான புரதம் அதிக நிறைவுற்ற கொழுப்பாக மாற்றம் பெற்று, இயற்கையான நச்சுத்தன்மை செயல்முறையைத் தடுக்கும். இதனால், நமது உடல் வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் அதிகப்படியான நைட்ரஜனை வெளியேற்றுகிறது. இது உடல் நீரிழப்பு பிரச்சனையை ஏற்படுத்தும். அதிக புரதத்தை உட்கொள்பவர்கள் அதிகளவில் உடலை நீரேற்றமாக வைத்து கொள்வது நல்லது.
ALSO READ: World Year Ender 2024: நிபா முதல் ஜிகா வரை.. உலகை உலுக்கிய டாப் 5 கொடிய நோய்கள்!
புரதம் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்:
காயம்:
உடலில் உள்ள புரதம் தசைகள் மற்றும் உறுப்புகளை உருவாக்க பெரிதும் உதவுகிறது. புரதம் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், காயங்களை விரைவில் குணமாக்கவும் உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தி:
நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உடலுக்கு புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் மிக மிக அவசியம். இவை நோயெதிர்ப்பு மண்டலத்தில் டி செல்கள், பி செல்கள் மற்றும் ஆன்டிபாடிகளை உருவாக்கி, உடலை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.