Uric Acid Control: உடலில் பல பிரச்சனை தரும் யூரிக் அமிலம்.. இதை எப்படி கட்டுப்படுத்தலாம்…?
Uric Acid: யூரிக் அமிலம் உடலில் சிறுநீரக கற்கள், கீல்வாதம், மூட்டு வலி போன்ற வலி நிறைந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும், இந்த யூரிக் அமிலம் இதய நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் கொழுப்பு கல்லீரல் போன்ற நோய்கள் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.
இன்றைய பிஸியான நவீன வாழ்க்கையில் லேசான வலியை நாம் எளிதாக கடந்து விடுகிறோம். இது எதனால் ஏற்படுகிறது, ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து யோசிக்க மறுக்கிறோம். இது நாளடைவில் பெரிய பிரச்சனைகளாக உருவெடுக்க தொடங்குகிறது. இந்த வலிகளுக்கு முக்கிய காரணம் யூரிக் அமிலமாக இருக்கலாம். யூரிக் அமிலம் ஒரு பெரிய பிரச்சனை, இது உடலில் இருந்து அகற்றுவது என்பது மிகவும் கடினமான விஷயம். உடலில் அதிகப்படியான யூரிக் அமிலம் சேரும்போது, யூரிக் அமில படிகங்களாக உருவெடுக்க தொடங்கும். இது ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது.
இந்த யூரிக் அமிலம் உடலில் சிறுநீரக கற்கள், கீல்வாதம், மூட்டு வலி போன்ற வலி நிறைந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும், இந்த யூரிக் அமிலம் இதய நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் கொழுப்பு கல்லீரல் போன்ற நோய்கள் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.
ALSO READ: IPL 2025: 5 ஐபிஎல் அணிகளுக்கு புதிய கேப்டன்கள்.. சூடுபிடிக்கப்போகும் ஏலம்..!
மூட்டு வலி:
உங்களுக்கு காரணமே இல்லாமல் மூட்டுகளில் அடிக்கடி வலியை உணர்ந்தால், நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது அல்லது. அதிக யூரிக் அமிலத்தின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று மூட்டு வலி. மூட்டுகளில் வீக்கம் அதிக யூரிக் அமிலம் குவிந்துள்ளதை குறிக்கும். நீங்கள் உங்களது மூட்டுகளை தொட்டதும்போது அதிகப்படியான வலியை கொடுக்கும்.
வாந்தி மற்றும் குமட்டல்:
உடலில் யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்களுக்கு வாந்தி அல்லது குமட்டல் பிரச்சனையை அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். மேலும், அடிக்கடி சிறுநீ கழிப்பது யூரிக் அமிலம் அதிகரித்திருப்பதை உணர்த்தலாம். சிறுநீரில் இரத்தம் அல்லது மோசமான துர்நாற்றம் வந்தாலோ அல்லது முதுகுவலி போன்ற அறிகுறிகள் இருந்தாலோ மருத்துவர்களை தொடர்பு கொள்வது நல்லது.
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவது எப்படி..?
- நமது உடலில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. யூரிக் அமிலம் அதிகரிக்காமல் இருக்கம் பியூரின்கள் அதிகம் உள்ள உணவுகளை குறைவாக உட்கொள்வது நல்லது. அந்தவகையில், ரெட் மீட், மீன் போன்ற பியூரின் நிறைந்த உணவுகளை குறைப்பது அல்லது தடுப்பது நல்லது.
- மாங்காய், புளி, தக்காளி, மாம்பழம் போன்ற புளிப்பு நிறைந்த உணவுகளையும் சாப்பிடக்கூடாது. இது உங்களது உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்க செய்யும். உங்களுக்கு புளிப்பு உணவுகள் எலுமிச்சை அல்லது நெல்லிக்காயை ஜூஸாகவோ அல்லது நேரடியாகவோ எடுத்து கொள்ளலாம்.
- இதுபோன்று அதிகம் பியூரின் உள்ள உணவுகளை தவிர்ப்பதன் மூலம், யூரிக் அமில அளவை குறைக்கலாம். அதன்படி பழங்கள், குடைமிளகாய், வெள்ளரி, கேரட், பச்சை இலைக் காய்கறிகள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
- சோடா மற்றும் கார்பனேட் செய்யப்பட்ட யூரிக் அமிலத்தை அதிகரிக்க செய்யும். இதற்கு பதிலாக யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் மூலிலை தேநீர், பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளலாம்.
- உடல் பருமன் அதிகரிக்கும்போது இடுப்பு அளவும் அதிகரிக்கும். இந்த கொழுப்பு செல்கள் அதிக யூரிக் அமிலத்தை உருவாக்கும். அதன்படி, உடல் எடையை குறைப்பதன்மூலம் யூரிக் அமிலத்தை கணிசமாக குறைக்கலாம்.
- யூரிக் அமிலத்தை குறைக்க அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தை அகற்ற உதவி செய்யும். இதற்காக நீங்கள் பிரவுன் அரிசி, முழு கோதுமை ரொட்டி மற்றும் பார்லி போன்ற முழு தானியங்களை எடுத்துக்கொள்ளலாம்.
- உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும்போது, யூரிக் அமிலமும் அதிகரிக்கும். அதன்படி, இன்சுலினை சமநிலை படுத்தும் மருத்துகளை மருத்துவர்களில் பரிந்துரை பேரில் எடுத்துக்கொள்ளபும். இது யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவும்.
- அதிகமாக தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வெளியேற்றும். மேலும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்கும். பீர் போன்ற சில மதுபானங்களில் மிக அதிக அளவு பியூரின்கள் உள்ளன. இந்த வழியில், பியூரின்கள் உடலில் அதிகரிக்க செய்து, யூரிக் அமிலத்தை அதிகரிக்கும்.
- காபி நமது உடலில் சீரம் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கிறது. உண்மையில், இது உடலில் இருந்து பியூரின்களை அகற்றுவதன் மூலம் யூரிக் அமிலத்தைக் குறைக்கும் என்சைம்களைக் கொண்டுள்ளது.