5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ghee: நீங்கள் கடையில் வாங்கும் நெய் சுத்தமானதா..? வீட்டிலேயே எப்படி கண்டறிவது?

Kitchen Tips: நெய் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், தோல் மற்றும் முடி போன்றவற்றிற்கும் பாதுகாப்பு அளிக்கிறது. நெய் இனிப்புகள் செய்யவும், பிற உணவுகள் தயாரிக்கவும் பெரிதும் உதவுகிறது. இது உணவின் சுவையை பன்மடங்கு அதிகரிப்பது மட்டுமல்லாமல், மூளை நினைவாற்றலையும் அதிகரிக்க செய்யும் என்று கூறப்படுகிறது. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் நெய் கலந்த பாலை சாப்பிட்டால் விரைவில் நல்ல தீர்வை பெறுவார்கள்.

Ghee: நீங்கள் கடையில் வாங்கும் நெய் சுத்தமானதா..? வீட்டிலேயே எப்படி கண்டறிவது?
நெய் (Image: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 09 Sep 2024 13:17 PM

சுத்தமான நெய்: இந்தியா முழுவதும் பெரும்பாலான வீடுகளில் நெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெய் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், தோல் மற்றும் முடி போன்றவற்றிற்கும் பாதுகாப்பு அளிக்கிறது. நெய் இனிப்புகள் செய்யவும், பிற உணவுகள் தயாரிக்கவும் பெரிதும் உதவுகிறது. இது உணவின் சுவையை பன்மடங்கு அதிகரிப்பது மட்டுமல்லாமல், மூளை நினைவாற்றலையும் அதிகரிக்க செய்யும் என்று கூறப்படுகிறது. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் நெய் கலந்த பாலை சாப்பிட்டால் விரைவில் நல்ல தீர்வை பெறுவார்கள். சுத்தமான நெய்யின் விலை மிக அதிகம். பல நேரங்களில் வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டுவதற்காக கலப்படம் செய்து நெய்யை விற்பனை செய்கின்றனர். கலப்பட நெய்யை உண்பதால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் வாங்கும் நெய் நல்லதா அல்லது போலியா என்பதை எப்படி கண்டறியலாம் என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Home Tips: எலிகள் வீட்டிற்குள் வராமல் இருக்கணுமா? இதை வைத்து விரட்டுங்கள்..!

நெய் கலப்படம்:

நெய்யில் காய்கறி நெய், தரமற்ற எண்ணெய், தாவர எண்ணெய், ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய், மசித்த உருளைக்கிழங்கு மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு ஆகியவை கலக்கப்படுகின்றன. இவைகள் நெய்யுடன் எளிதில் கலந்துவிடுவதால், இவற்றை பார்த்து அடையாளம் காண முடியாது.

தூய நெய்யை எப்படி அடையாளம் காண்பது..?

உண்மையான சுத்தமான நெய்யை தண்ணீர் மூலம் கண்டறியலாம். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்து அதன் மீது நெய் துளிகளை விடவும். சுத்தமான நெய் தண்ணீரில் மிதக்கும். அடியில் சென்றாலோ, தண்ணீரில் கலந்தாலோ அது போலி நெய்.

உப்பு:

சுத்தமான மற்றும் போலியான நெய்யை கண்டறிய நாம் உப்பை பயன்படுத்தலாம். இதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய்யை எடுத்து வைத்து கொள்ளவும். அதில், அரை தேக்கரண்டி உப்பு மற்றும் ஹைட்ரோகுளோரி அமிலத்தை கலக்கவும். ஒரு 20 நிமிடத்திற்கு பிறகு நெய்யின் நிறம் மாறினால் அது போலி நெய். நிறம் மாறாமல் இருந்தால், அது சுத்தமான நெய். ஏனெனில், சுத்தமான நெய்யின் நிறம் மாறாது.

ALSO READ: Home Care Tips: விரைவில் மழைக்காலம்.. முன்கூட்டியே இதையெல்லாம் செய்வது நல்லது!

உள்ளங்கை:

சிறிது நெய்யை எடுத்து உள்ளங்கையில் நன்றாக தேய்த்து கொள்ளவும். சிறிது நேரத்திற்கு பிறகும் உங்கள் கைகளில் இருந்து நெய் வாசனை வந்தால் அது சுத்தமான நெய். வேறு வாசனை அல்லது மணம் இல்லாமல் இருந்தால் அது கலப்படம் செய்யப்பட்ட நெய்.

சூடு செய்தல்:

நெய் சுத்தமானதா அல்லது போலியானதா என்பதை கண்டறிய வேறு வழியும் ஒன்று உள்ளது. ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் அளவு நெய் எடுத்து, அதை அடுப்பில் வைத்து சூடு செய்யவும். நெய் உருகும்போது அதன் நிறம் லேசாக பழுப்பு நிறமாக மாறினால், அது உண்மையானது. அதுவே, நெய் மெதுவாக உருகி அதன் நிறம் மஞ்சள் நிறமாகவே இருந்தால் அது போலி நெய்.

சுத்தமான நெய் நல்ல வாசனை தரும், கலப்பட நெய்க்கு வாசனை இருக்காது. அதே போல சுத்தமான நெய் சாப்பிட சுவையாக இருக்கும்.

Latest News