5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Dehydration Symptoms: உடலில் நீர் பற்றாக்குறை உள்ளதா என்பதை எப்படி கண்டறிவது..? இப்படி வீட்டிலேயே சோதித்து பாருங்கள்..!

Lack Of Water: தினமும் 8 கிளாஸ் அல்லது குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தாகம் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் சிறிதளவு குடிப்பது நல்லது. இவ்வாறு செய்ய தவறும்போது, உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படலாம். உடலில் நீர் குறையும்போது பல பிரச்சனைகளும் ஏற்படும்.

Dehydration Symptoms: உடலில் நீர் பற்றாக்குறை உள்ளதா என்பதை எப்படி கண்டறிவது..? இப்படி வீட்டிலேயே சோதித்து பாருங்கள்..!
நீர் பற்றாக்குறை (Image: GETTY)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 07 Oct 2024 14:27 PM

குடிநீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அது எந்த அளவிற்கு முக்கியமானது, ஏன் முக்கியமானது என்பது பற்றி நமக்கு தெரிவது இல்லை. தினமும் 8 கிளாஸ் அல்லது குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தாகம் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் சிறிதளவு குடிப்பது நல்லது. இவ்வாறு செய்ய தவறும்போது, உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படலாம். உடலில் நீர் குறையும்போது பல பிரச்சனைகளும் ஏற்படும்.

அந்தவகையில், இன்று தண்ணீர் குடிக்காததால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும், தாகம் இல்லாமலும் தண்ணீர் குடிக்கலாமா என்பதை இங்கே பார்க்கலாம்.

ALSO READ: Protein Powder: கடைகளில் வாங்கினால் அதிக செலவா? வீட்டிலேயே புரோட்டீன் பவுடரை செய்வது எப்படி..? செய்முறை இங்கே!

தண்ணீர் ஏன் முக்கியம்..?

தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிப்பது சிறந்த வழி என்றாலும், எந்த ஒரு நபரும் உடலின் தேவைக்கேற்ப தண்ணீர் குடிப்பதும் முக்கியம். உங்கள் உடலின் தேவைக்கேற்ப தண்ணீர் குடிக்கவில்லை என்றால், உடலில் பல பிரச்சனைகளை கொடுக்கும்.

உடலில் நீர் பற்றாக்குறை இருப்பதை எப்படி அறிவது..?

சிறுநீர் நிறம்:

உங்கள் உடலில் தண்ணீர் குறையும்போது சிறுநீரின் நிறம் மாறும். அதாவது, நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது சிறுநீரானது கருமையாக இருந்தால், அது நீரிழப்பை குறிக்கலாம். சிறுநீரின் நிறம் கருமையாக மாறி இருந்தால், உடலில் நீரிழப்பு நிலையும் அதிகரித்து வருகிறது என்பது அர்த்தம்.

கிள்ளி பார்த்தல்:

உங்கள் உள்ளங்கையை கீழ்நோக்கி வைத்து, மேல் கையின் தோலை லேசாக கிள்ளவும். பின்னர், அதை விட்டுவிடுங்கள். இதை செய்த பிறகு, தோல் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பினால், நீங்கள் நன்கு நீரேற்றமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதே நேரம், தோல் பழைய நிலைக்கு திரும்பவில்லை என்றால், உங்கள் உடலில் நீரிழப்பு உள்ளது என்று அர்த்தம்.

முகத்தில் கவனம்:

உடலில் தண்ணீர் இல்லாதபோது, உங்கள் மூக்கு, நெற்றி, கன்னங்களில் வறட்சி தோன்றும். இந்த அறிகுறியும் பின் நாளில் ஆபத்தை தரும்.

உங்கள் முகத்தை வெற்று நீரில் கழுவுங்கள். இதை செய்வதன் மூலம், உங்கள் முகத்தை இறுக்கமாக உணர்ந்தாலோ அல்லது முகத்தில் உடனே வறட்சி ஏற்பட்டாலோ உடலில் நீர் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம்.

முகப்பரு:

முகத்தில் முகப்பரு திடீரென அதிகரித்தால், உங்கள் உடலில் நீரிழப்பு ஏற்பட்ட அறிகுறியாக இருக்காலம். தண்ணீர் பற்றாக்குறையாக் உங்கள் முகத்தின் துளைகள் அடைக்க தொடங்கும். இது முகப்பரு ஏற்பட காரணமாகி விடுகிறது.

முகத்தில் வீக்கம்:

ஒரு நபர் சரியாக தண்ணீர் குடிக்காதபோது, அடுத்த நாள் காலை அவர் எழுந்தவுடன் முகத்தில் லேசான வீக்கம், கண்களுக்கு கீழே வீக்கம், தோல் இறுக்கமாக தோன்றும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், உங்களுக்கு நீரிழப்பு இருப்பதாக அர்த்தம்.

ALSO READ: Food Recipes: பெங்காலி ஸ்டைலில் பெப்பர் சிக்கன்.. சுருக்கென்று சூப்பர் சண்டே ஸ்பெஷல் ரெசிபி!

தண்ணீர் பற்றாக்குறையால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்:

மலச்சிக்கல் பிரச்சனை:

குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால், உடலின் உணவு சரியாக செரிமானம் ஆகாமல், வயிற்றில் பிரச்சனை ஏற்படும். இது மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை உண்டாக்கி தொல்லைகளை தரும்.

உடல் பருமன் அதிகரிப்பு:

உடலில் நீரின் அளவு குறையும்போது, உங்கள் பசியை அதிகளவில் ஏற்படுத்தும். இதன் காரணமாக நீங்கள் அதிகமாக சாப்பிட ஆரம்பிக்கிறீர்கள். எனவே, உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதால் நிரம்பிய உணர்வு ஏற்படும்.

இரத்த அழுத்தம் அதிகரிக்கும்:

நீர் பற்றாக்குறையால் இரத்தம் கெட்டியாகிறது. இதன் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால்தான் நீங்கள் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தையும் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

நீரழிவு:

உடலில் நீர்ச்சத்து குறைவதால் நீரிழப்பு பிரச்சனை ஏற்படும். இதன் காரணமாக உங்களுக்கு கடுமையான தலைவலி ஏற்படும். உடலில் தண்ணீர் இல்லாதபோது தோல் சுருங்க தொடங்கும். இது, உங்கள் வயதை விட வயதானவராக காட்டும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News