Silk Saree Care Tips: நீங்கள் வாங்கியது உண்மையான பட்டுப் புடவையா..? இவற்றை எப்படி பராமரிப்பது..?
How To Maintain Silk Saree: நமது பாட்டி காலத்தில் செய்யப்பட்ட பட்டுப் புடவைகள் அதிக எடை கொண்டதாக இருந்தது. ஆனால், தற்போது உள்ள விசைத்தறி மூலம் செய்யப்படுவதால் அதன் எடை குறைந்து கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. இப்போது, மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணின் பெயருடன் பல டிசைன்களில் புடவை உருவாக்கப்படுகிறது.
பட்டுப் புடவைகள் மிகவும் மென்மையானவை, அழகானவை மற்றும் விலை உயர்ந்தவை. பெரும்பாலான பெண்களுக்கு பட்டுப் புடவை என்றால் மிகவும் பிடித்த ஒன்று. திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் விசேஷங்களில் பட்டுப் புடவையுடன் பெண்கள் வலம் வருவார்கள். அதிக விலை கொடுத்து வாங்கும் பட்டுப் புடவைகள் சிறப்பு கவனம் செலுத்தவில்லை என்றால், அவை சேதமடையலாம். அதாவது, பீரோக்களில் நீண்ட நாட்கள் மடித்து வைப்பதன்மூலம் பட்டு சேலையின் துணி, நிறம், வடிவமைப்பு போன்றவை மங்கவோ அல்லது சேதமடையும். அந்தவகையில், உண்மையான பட்டுப் புடவை எப்படி வாங்குவது? பட்டுப் புடவைகளை எப்படி பராமரிப்பது, சுத்தம் செய்வது இதையெல்லாம் இங்கே தெரிந்து கொள்வோம்.
உண்மையான பட்டு என்பதை எப்படி கண்டறிவது..?
பட்டுப் புடவை என்று ஒரு சிலர் கடைகளில் வாங்கி, வீட்டுக்கு வந்ததும் பட்டு புடவை இல்லை என்று தெரிந்து ஏமாந்துவிடுகிறார்கள். அப்படி இல்லையென்றால், கடைகளில் இருந்து பட்டுப் புடவை வாங்கி வீட்டிற்கு வந்ததும் இது பட்டுப் புடவையா இல்லையா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
பட்டுப் புடவை வாங்கியபின், அது உண்மையான பட்டுப் புடவையா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள பட்டுப் புடவையின் ஓரத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு நூலை வெட்டி அதில் தீ வைத்து வாருங்கள். அப்போது, அந்த நூல் நின்று தீப்பிடித்து எரிந்தால் அதுதான் அசல் பட்டு என்று அர்த்தம். அதேநேரத்தில்.பட்டுப் புடவை பல நூல்களின் கலவையால் செய்யப்பட்டிருந்தால் புடவையின் நூலை வெட்டி அதில் தீயை வைக்கும்போது, அதன் நூல் நமது முடி கருகுவதுபோல், சட்டென கருகி சுருங்கிக்கொண்டே போகும். இது பல நூல்களில் செய்யப்பட்ட பட்டுப் புடவை என்று கண்டு பிடிக்கலாம்.
நமது பாட்டி காலத்தில் செய்யப்பட்ட பட்டுப் புடவைகள் அதிக எடை கொண்டதாக இருந்தது. ஆனால், தற்போது உள்ள விசைத்தறி மூலம் செய்யப்படுவதால் அதன் எடை குறைந்து கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. இப்போது, மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணின் பெயருடன் பல டிசைன்களில் புடவை உருவாக்கப்படுகிறது. உண்மையில், நீங்கள் வாங்குவது அசல் பட்டுப் புடவை என்றால் அதன் ஆயுட்காலம் 100 ஆண்டுகளுக்கும் அதிகமாக உழைக்கும்.
ALSO READ: Home Fragrance: ஈரப்பதத்தால் படுக்கையறையில் நாற்றமா..? இப்படி செய்தால் நறுமணம் வீசும்!
பட்டுப் புடவையை பராமரிப்பது எப்படி..?
- முதலில் பட்டுப் புடவைகளை மற்ற துணிகள் மற்றும் சேலைகளை போல் தண்ணீரில் ஊற வைத்தெல்லாம் துவைக்ககூடாது.
- உங்கள் பட்டுப் புடவையில் ஏதேனும் அழுக்கு மற்றும் கரைகள் இருந்தால், கடைகளில் இதற்காகவே பட்டுப் புடவைகளில் நீக்க கூடிய திரவங்களை வாங்கி பயன்படுத்தலாம்.
- ஒரு சிலர் இதை அறியாமல் பட்டுப் புடவையை டிரைவாஷ் செய்து விடுகிறார்கள். இது பட்டுப் புடவையின் பளபளப்பை கெடுத்துவிடும்.
- உங்கள் பட்டுப் புடவை பளபளப்புடன் இருக்க வேண்டுமென்றால் ஒரு வாளி தண்ணீரை எடுத்து ஒரு லிட்டர் பாலை கலந்து கொள்ளவும். அதன்பிறகு, உங்களது பட்டுப் புடவையை நன்றாக முக்கி வெயிலில் காயப்போடவும். இவ்வாறு செய்வதன்மூலம், பட்டுப் புடவை இன்னும் பளபளப்பாக இருக்கும்.
- உங்கள் பீரோக்களில் இருக்கும் பட்டுப் புடவைகளை குறைந்தது 6 மாதத்திற்கு ஒருமுறை வெயிலில் அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் காய வைக்கவும்.
- அதேபோல், மாதத்திற்கு ஒருமுறை பீரோக்கள் இருக்கும் பட்டுப் புடவையின் மடிப்பை மாற்றி மடித்து வைக்கலாம்.
- பட்டுப் புடவை அணிந்து பார்ட்டி மற்றும் விசேஷங்களுக்கு சென்றிருந்தால், வீட்டிற்கு வந்த உடனே பீரோ அல்லது அலமாரியில் வைக்காதீர்கள். இதனால், சேலை அழுக்கு, வியர்வையால் ஈரப்பதம் மற்றும் மதிப்பெண்களால் கெட்டுவிடும். முதலில் அதை சிறிது நேரம் மின்விசிறியின் கீழ் திறந்த நிலையில் வைக்கவும்.
- பீரோக்களுக்குள் வைக்கப்பட்டுள்ள உங்கள் விலையுயர்ந்த பட்டுப் புடவைகளில் பூஞ்சை மற்றும் பூச்சிகள் தாக்காமல் இருக்க வேண்டும் என்றால், சேலையின் நடுவில் வேப்ப இலைகள் மற்றும் தேவதாரு உருண்டைகளை வைத்துக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பட்டுப் புடவைகளில் நாப்தலீன் உருண்டைகளை வைக்க வேண்டாம். இவை உங்கள் பட்டுப் புடவையின் நிறத்தை மங்க செய்யும்.