5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Home Fragrance: ஈரப்பதத்தால் படுக்கையறையில் நாற்றமா..? இப்படி செய்தால் நறுமணம் வீசும்!

Home Tips: கோடை காலமாக இருந்தாலும் சரி, மழை, குளிர் என எந்த காலத்திலும் படுக்கை அறையில் ஏசி - கூலர்களை ஓட விடுகின்றனர். இது மேலும், படுக்கை அறையில் இருக்கும் காற்றை உறிஞ்சி குளிர்ச்சியை கொடுக்கிறது. அறையில் நிலையான காற்றோட்டம் இல்லாததால், அது படுக்கை அறையில் ஒரு விசித்திரமான துர்நாற்றத்தை உண்டாக்கும்.

Home Fragrance: ஈரப்பதத்தால் படுக்கையறையில் நாற்றமா..? இப்படி செய்தால் நறுமணம் வீசும்!
வீட்டு நறுமணம் (Image: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 15 Nov 2024 15:09 PM

பெரும்பாலான மக்கள் தங்களது படுக்கையறையில் காற்றோட்டம் இல்லாத வகையில் கதவை அடைத்து வைக்கின்றனர். பெரும்பாலும் ஜன்னல்களில் திரைச்சீலைகளை மூடி காற்று உள்ளே வருவதை அனுமதிப்பது கிடையாது. கோடை காலமாக இருந்தாலும் சரி, மழை, குளிர் என எந்த காலத்திலும் படுக்கை அறையில் ஏசி – கூலர்களை ஓட விடுகின்றனர். இது மேலும், படுக்கை அறையில் இருக்கும் காற்றை உறிஞ்சி குளிர்ச்சியை கொடுக்கிறது. அறையில் நிலையான காற்றோட்டம் இல்லாததால், அது படுக்கை அறையில் ஒரு விசித்திரமான துர்நாற்றத்தை உண்டாக்கும்.

இந்த துர்நாற்றத்தை போக்க, மக்கள் கடைகளில் விற்கப்படும் பிரஷ்னர்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், இது சுகாதாரத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. அந்தவகையில், இன்று படுக்கையறையில் எந்த வித வாசனையும் இருக்கக்கூடாது என்று நீங்கள் நினைத்தால், இந்த விஷயங்களை செய்யுங்கள். இது அறையில் இருக்கும் கெட்ட வாசனையை தானாக மறைய செய்யும்.

ALSO READ: Sleeping Tips: இரவில் அடிக்கடி முழிப்பு வருகிறதா? – இதை ட்ரை பண்ணுங்க!

பெட்ஷீட் சுத்தம்:

உடலில் இருந்து வெளியேறும் வியர்வையால், பெட்ஷீட் அழுக்காகி துர்நாற்றம் விசும். வியர்வை காரணமாக பெட்ஷீட்களில் நிறைய பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே, ஒவ்வொரு வாரமும் பெட்ஷீட்டை துவைப்பதும், அலசுவதும் நல்லது. இப்படி செய்வதால் அறையில் நாற்றம் போவது மட்டுமின்றி பாக்டீரியா குறைந்து, உங்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து குறையும்.

மெத்தை சுத்தம்:

கட்டிலில் இருக்கும் மெத்தை மீது தினசரி மனிதன் தனது ஓய்வை, நல்ல உறக்கத்தையும் பெறுகிறான். மனித உடல் துர்நாற்றம் காரணமாக, மெத்தை நாற்றமடிக்க ஆரம்பித்து அழுக்காகிவிடும். அந்தவகையில், மெத்தையை சுத்தம் செய்ய ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது தேயிலை மர எண்ணெய் அல்லது லாவெண்டர் எண்ணெய் சிறிதளவு தெளிக்கலாம். இதை தெளிப்பதன்மூலம், மெத்தையில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிந்துவிடும். அப்படி இல்லையென்றால், மழைக்காலத்தில் அவ்வபோது வெயில் அடிக்கும். அப்போது, சிறிதுநேரம் வெயிலில் மெத்தையை காய வைக்கலாம். இது துர்நாற்றத்தை நீக்குவது மட்டுமின்றி, பாக்டீரியாவை அழிக்கும்.

திரைச்சீலைகள்:

படுக்கறையில் உள்ள பாய்கள், திரைச்சீலைகள் போன்றவற்றை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வது நல்லது. இது ஒரு வகையான சுத்தத்தை கொடுத்து உங்கள் அறையில் இருக்கும் ஈரப்பதம் மற்றும் விசித்திரமான வாசனைகளை அகற்ற உதவும்.

ரூம்ஃப்ரெஷனர்:

அறைகளில் நறுமணம் வீச ரூம் ஃப்ரெஷனர் வீடுகளிலேயே தயாரிக்கலாம். இதற்கு, ரோஸ்மேரி, தேயிலை மரம், மல்லிகை அல்லது லாவெண்டர் எண்ணெய் ஆகிவற்றை தண்ணீரில் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும். இப்போது, மோசமான வாசனை வீசும் படுக்கை அறையில் இதை ஸ்ப்ரே செய்யவும். இது உங்கள் படுக்கையறையில் இயற்கையான வாசனையை தரும்.

கிராம்பு – இலவங்கப்பட்டை:

படுக்கை அறை வாசனையாக இருக்க கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டையை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இப்போது, அடுப்பை ஆப் செய்து இந்த தண்ணீரை ஆற வைத்து, ஆறியதும் ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி கொள்ளவும். இப்போது, படுக்கையறையில் இதை ஸ்ப்ரே செய்தால், நாற்றம் சில நிமிடஙக்ளில் மறைந்துவிடும்.

ALSO READ: Clove Benefits: கிராம்பை வாயில் வைத்து தூங்கினால் இவ்வளவு நன்மைகளா..? பல் சொத்தை ஓடும்..!

ரோஜா:

கடைகளில் விற்கப்படும் ரோஜாவை கொண்டு இயற்கையான நறுமண ஸ்ப்ரேவை தயாரிக்கலாம். இந்த ரூம் ஃப்ரெஷனர் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கிளாஸ் தண்ணீரை எடுத்து கொள்ளவும். இப்போது அடுப்பை ஆன் செய்து தண்ணீர் கொதித்தவுடன், ரோஜா இதழ்களை போடவும். பத்து நிமிடம் நன்றாக கொதித்த பிறகு அடுப்பை ஆஃப் செய்து விடுங்கள். தண்ணீர் ஆறியதும், அதை வடிகட்டி ஸ்பேரே பாட்டிலில் ஊற்றி உங்கள் தேவைக்கேற்ப படுக்கையறையில் தெளிக்கவும். இது படுக்கையறையில் உள்ள ஈரப்பத நாற்றத்தை சில நிமிடங்களில் நீக்கும்.

இது படுக்கையறை மட்டுமல்லாது, வீடுகளில் உள்ள மற்ற இடங்களில் ஸ்ப்ரே செய்து நறுமணத்தை கொண்டு வரலாம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News