5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Remedies For Cockroaches: கரப்பான் பூச்சிகள் ஏன் வீட்டிற்குள் படையெடுக்கிறது..? அவற்றை அகற்றுவது எப்படி..?

Cockroaches: கரப்பான் பூச்சிகள் இரவு நேரத்திலோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்திலோ நம் சமையலறைகளில் இருக்கும் எஞ்சிய உணவுகளையும், தரையில் கிடைக்கும் உணவுக் கழிவுகளையும் வந்து உண்ணும். இதன்மூலம், பாக்டீரியாக்கள் பரவி நம் ஆரோக்கியத்தை கெடுக்க செய்யும். மற்ற பூச்சிகளை போன்று, கரப்பான் பூச்சிகளுக்கு உயிர்வாழ தண்ணீர் மிகவும் தேவையாக உள்ளது. அதேபோல், கரப்பான் பூச்சிகளுக்கு ஈரமான சூழலே மிகவும் பிடிக்கும்.

Remedies For Cockroaches: கரப்பான் பூச்சிகள் ஏன் வீட்டிற்குள் படையெடுக்கிறது..? அவற்றை அகற்றுவது எப்படி..?
கரப்பான் பூச்சி
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 17 Sep 2024 18:08 PM

சமையலறையில் உள்ள உணவை சுற்றி அடிக்கடி கரப்பான் பூச்சி சுற்றி திரிவது நமக்கு சங்கடத்தை தரும். இந்த கரப்பான் பூச்சி உலகின் மிகவும் தனித்துவமான உயிரினமாக இருந்து வருகிறது. இவற்றை நம் வீட்டியில் இருந்து அகற்றுவது என்பது மிகவும் கடினமான விஷயம். கரப்பான் பூச்சிகள் நம் உடலின் ஆரோக்கியத்தை கெடுக்க செய்யும். இது தனது வாழ்நாளில் 75 சதவீதத்தை ஓய்வு எடுத்து கழிக்கும். மேலும் 32 டிகிரி பாரன்ஹீட் அதாவது ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உயிர்வாழ முடியும். அந்தவகையில், இன்று கரப்பான் பூச்சிகள் நம் வீட்டில் எப்படி குடியேறுகிறது, அவற்றை அகற்றுவதற்கான தீர்வுகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Health Tips: நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமா..? இந்த விஷயத்தை பாலோ பண்ணாலே போதும்!

நம் வீட்டில் கரப்பான் பூச்சிகளை ஈர்ப்பது எது..?

கரப்பான் பூச்சிகள் இரவு நேரத்திலோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்திலோ நம் சமையலறைகளில் இருக்கும் எஞ்சிய உணவுகளையும், தரையில் கிடைக்கும் உணவுக் கழிவுகளையும் வந்து உண்ணும். இதன்மூலம், பாக்டீரியாக்கள் பரவி நம் ஆரோக்கியத்தை கெடுக்க செய்யும். மற்ற பூச்சிகளை போன்று, கரப்பான் பூச்சிகளுக்கு உயிர்வாழ தண்ணீர் மிகவும் தேவையாக உள்ளது. அதேபோல், கரப்பான் பூச்சிகளுக்கு ஈரமான சூழலே மிகவும் பிடிக்கும். இதன் காரணமாகவே, இவைகள் பெரும்பாலும் ஈரப்பதம் இருக்கும் இடங்களில் வலம் வருகின்றன.

அதேபோல், கரப்பான் பூச்சிகளுக்கு இருண்ட பகுதிகளில் வாழவே அதிகம் பிடிக்கும். இத்தகைய இடங்களில் இவைகள் பாதுகாப்பாக உணருகின்றன.. இதனால் செய்தித்தாள்களுக்கு கீழ், அட்டைப்பெட்டிகள், அலமாரிகள், தரையின் கீழ் போன்ற இடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன.

இரவு உணவுகளை உண்ட பிறகு பாத்திரங்களை அப்போதே கழுவாமல் விடுவதாலும், குப்பைகளை கொட்டாமல் விடுவதால் கரப்பான் பூச்சிகளுக்கு வசதியாக அமைந்து விடுகிறது. குப்பைத் தொட்டிகளில் எஞ்சியிருக்கும் உணவை கரப்பான் பூச்சிகள் மிகவும் ஈர்க்கின்றன.

கரப்பான் பூச்சிகளை எவ்வாறு அகற்றுவது..?

  1. கரப்பான் பூச்சிகளில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள சுத்தமாக வீட்டை பராமரிப்பது மிக முக்கியம். கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாக இருந்தால், அடிக்கடி தரையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். உணவுப் பொருட்களை காற்று புகாத டப்பாவில் போட்டு அடையுங்கள். இரவு உணவுக்குப் பிறகு அழுக்குப் பாத்திரங்களை உடனே சுத்தம் செய்யுங்கள்.
  2. மூடாதப்பட்ட குப்பை தொட்டிகளை மட்டுமே பயன்படுத்துங்கள். குப்பைகளை முடிந்தவரை உடனுக்குடன் வெளியேற்றுங்கள். இதற்கு பிறகும் கரப்பான் பூச்சி தொல்லை குறையவில்லை என்றால், வீட்டு முறையில் கரப்பான் பூச்சிகளை விரட்ட எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம். இரண்டையும் கலந்து தண்ணீர் கலந்த கரைசலை தயார் செய்து கரப்பான் பூச்சிகள் மீது தெளிக்க வேண்டும். இது கரப்பான் பூச்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி அவை இறந்துவிடும்.
  3. கரப்பான் பூச்சிகள் சமையலறையில் உள்ள சிங்க் மற்றும் குளியலறை வடிகால் வழியாக வெளியே வர ஆரம்பிக்கும். இவைகளை விரட்ட நீஙக்ள் வினிகர் பயன்படுத்தலாம். சிறிது வெதுவெதுப்பான நீரில் வினிகரை சேர்த்து, இந்த கலவையை வடிகால் கீழே ஊற்றலாம். அப்போது உள்ளே இருக்கும் கரப்பான் பூச்சிகள் அழியும்.
  4. பேக்கிங் சோடாவை பயன்படுத்தி கரப்பான் பூச்சிகளை விரட்ட பயன்படுத்தலாம். இதற்கு பேக்கிங் சோடாவில் சர்க்கரை கலந்து கலவையை தயார் செய்ய வேண்டும். இப்போது கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடங்களில் வைக்கவும். இதனால் கரப்பான் பூச்சிகள் ஓடிப்போய் படிப்படியாக மறைந்துவிடும்.

ALSO READ: Benefits of Salt in Tea: டீயில் சர்க்கரைக்கு பதில் உப்பு கலந்து குடிச்சு பாருங்க.. உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்!

கரப்பான் பூச்சி பற்றிய சில உண்மைகள்:

  1. கரப்பான் பூச்சிகள் 28 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக நம்பப்படுகிறது.
  2. கரப்பான் பூச்சி தலை துண்டிக்கப்பட்ட பிறகும் ஒரு வாரம் வரை உயிர் வாழும்.
  3. கரப்பான் பூச்சிகள் மூன்று மைல் (சுமார் 4.82 கிமீ) தூரத்தை ஒரு மணி நேரத்தில் கடக்கும்.
  4. கரப்பான் பூச்சியால் 40 நிமிடங்களுக்கு மூச்சை அடக்கி வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.
  5. அதேபோல், கரப்பான் பூச்சி எதையும் சாப்பிடாமல் சுமார் ஒரு மாதம் வரை உயிர்வாழும்.

Latest News