5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rainy Season Tips: மழைக் காலத்தில் வீட்டை இப்படி தான் பராமரிக்கணும்… இதையெல்லாம் செய்ய மறக்காதீங்க!

Rainy Season Tips : மழைக்காலம் தொடங்கி விட்டாலே நாம் சில முன்னேற்பாடுகள் செய்வது அவசியம். மழைக்காலம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்.‌ மற்ற காலங்கள் போல் நினைத்தவுடன் எதையும் செய்ய முடியாது. மழைக்காலத்தில் எதையும் நன்கு திட்டமிட்டு செய்ய வேண்டும். மழைக்காலத்தை சமாளிக்க எளிய வீட்டு உபயோக டிப்ஸ்களை தெரிந்து கொள்ளுங்கள்

Rainy Season Tips: மழைக் காலத்தில் வீட்டை இப்படி தான் பராமரிக்கணும்… இதையெல்லாம் செய்ய மறக்காதீங்க!
கோப்பு படம் (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Updated On: 12 Oct 2024 22:16 PM

மழைக்கால டிப்ஸ்: மழைக்காலம் வந்துவிட்டாலே வழக்கத்திற்கு மாறாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். மழைக்காலத்தில் வேலைக்கு வெளியே செல்பவர்களுக்கு ஒரு வித கஷ்டம் என்றால் வீடுகளை பராமரிக்கும் பெண்களுக்கு பலவித கஷ்டங்கள் ஏற்படுகிறது.‌ உணவு தயாரிப்பதிலிருந்து துணியை உலர்த்துவது வரை அனைத்தும் சிரமமாகிவிடுகிறது. எனவே சில டிப்ஸ்களை தெரிந்து வைத்துக் கொண்டால் மழைக்காலத்தை ஓரளவு சமாளித்து விட முடியும். மழைக்காலங்களை சமாளிக்க கூடிய எளிமையான டிப்ஸை தெரிந்து கொள்ளுங்கள்.

மெழுகுவர்த்திகள்:

மழைக்காலத்தில் நாம் அடிக்கடி திடீர் மின்வெட்டுகளை சந்திக்க நேரிடும். இன்றைய காலத்தில் எல்லார் இல்லங்களிலும் இன்வெர்ட்டர் இருந்தாலும் தொடர் மின்வெட்டுகளால் அவையும் பயனளிக்காமல் போகும். இந்த சமயங்களில் மெழுகுவர்த்தியின் தேவைகள் இன்றியமையாதது. மெழுகுவர்த்திகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துங்கள். இப்படி குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தும் பொழுது மெழுகுவர்த்தியின் நீடித்த தன்மை அதிகரிக்கும். மெழுகுவர்த்தியை பயன்படுத்தும் பொழுது பழைய பாத்திரங்கள், அட்டைகள் மீது வையுங்கள். உருகி வடியும் மெழுகு தரையில் படாமல் இருக்கும் மேலும் மெழுகுவர்த்தியை தேவையான இடத்திற்கு மாற்றி கொள்ள முடியும்.

உப்பு:

மழை காலத்தில் உப்பு நீர் விட்டு பிசுபிசு தன்மையாக மாறிவிடும். இதே போல் உப்பு நீர் விடாமல் இருப்பதற்கு நம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய அரிசியை சிறிதளவில் எடுத்து உப்பு டப்பாவில் போட்டு வைக்கவும். அரிசி உப்பில் இருக்கக்கூடிய ஈரப்பதங்களை உறிஞ்சு விடும்.

பருப்பு:

மழை காலத்தில் பருப்புகளில் சிறு வண்டுகள் வந்துவிடும். அந்த நேரங்களில் பருப்பை சிறிதளவு நெருப்பில் நன்றாக வறுத்தெடுக்க வேண்டும். வரும்பொழுது பருப்பின் நிறம் மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சூடு ஆறிய பின்பு அதை டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளலாம். இப்படி செய்யும் பொழுது பருப்புகளில் வண்டுகள் நீண்ட காலத்திற்கு வராமல் பாதுகாக்கப்படுகிறது. கூடுதலாக அந்த டப்பாவில் பிரியாணி இலை மற்றும் சுக்கு ஆகியவற்றை போட்டு வைத்தால் பூச்சி வராமல் இருப்பதோடு பருப்பு கெட்டுப் போகாமல் இருக்கும்.

Also Read: Lip Care: ரோஜா இதழை போன்ற உதடு வேண்டுமா? இதை செய்து பாருங்கள்..

அரிசி:

மழைக்காலத்தில் அரிசியில் வண்டு வராமல் இருப்பதற்கு அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் இரண்டு காய்ந்த மிளகாய்களை போட்டு வைக்கலாம்.‌ வேப்பிலையை பயன்படுத்த நினைப்பவர்கள் கைக்குட்டையில் சிறிது வேப்ப இலையை வைத்து முடித்து அரிசி பாத்திரத்தில் போட்டு வைத்தால் வண்டுகள் வராது.

மரக்கதவுகள்:

மழைக்காலத்தில் அளவுக்கு அதிகமாக மழை பெய்து தண்ணீர் தேங்கும் போது மரக்கதவுகள் எளிதில் பாதிப்படைந்து விடும். எனவே அரிசி சாக்கினை கதவின் கால்வாசி அளவிற்கு ஒட்டி வைத்தால் மழை நீர் அதில் படாது. மழைக்காலம் முடிந்தவுடன் அந்த சாக்கை எடுத்து விடலாம்.

துணிகள் மணமணக்க:

மழைக்காலத்தில் பீரோவில் அடுக்கி வைத்திருக்கும் துணிகளில் இருந்து ஒரு வித வாடை வரும். மேலும் துணிகளில் ஒரு வித ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். ஒரு சின்ன துணியில் கைப்பிடி அளவு அரிசி மற்றும் ஜவ்வாது பொடியை கலந்து இறுக கட்டி பீரோவில் வைத்து விடுங்கள். துணியில் உள்ள ஈரப்பதத்தை அரிசி உறிந்து கொள்ளும் அதே போல் ஜவ்வாது துணிகளில் உள்ள வாடையை நீக்கி நல்ல மணத்தை கொடுக்கும்.

கொசுக்களை விரட்ட:

மழைக்காலம் வந்துவிட்டாலே கொசுக்களின் தொல்லை அதிகரித்து விடும். மாலை நேரங்களில் அகல் விளக்கில் வேப்பெண்ணையை ஊற்றி தீபம் ஏற்றினால் கொசுக்கள் வராது. இல்லையென்றால் எப்பொழுதும் பயன்படுத்தக்கூடிய எண்ணெயில் கற்பூரத்தை உடைத்துப் போட்டால் கொசுக்கள் வராது. வேப்பெண்ணை மற்றும் கற்பூர வாசனைக்கு கொசு வராது.

பூஞ்சைகளில் இருந்து பாதுகாக்க:

மழைக்காலங்களில் பாய்களில் எளிதில் பூஞ்சைகள் வைத்துவிடும். இதை தவிர்ப்பதற்கு பாய்களை சுருட்டி வைக்கும் போது அதில் செய்தித்தாளை பாய் முழுவதும் வைத்து சுற்றினால் பூஞ்சைகள் வைக்காது.

வெளியில் செல்லும்போது:

வெளியில் செல்லும்போது மறக்காமல் குடை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் ஒரு பாலிதீன் கவர், ஜிப் லாக் கவர் மற்றும் ஒரு துணியை உங்கள் பையில் வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான ஆவணங்கள் வைக்கவோ அல்லது பயன்படுத்திய குடையை வைக்கவும் பாலிதீன் கவர் பயன்படும். தொலைபேசி போன்ற மின்சாதன பொருட்களை வைப்பதற்கு ஜிப் லாக் கவர் பயன்படும். உங்கள் தலைகளை துவட்டவோ அல்லது பேருந்துகளில் வடிந்திருக்கும் மழை நீரை துடைக்கவோ துணி பயன்படும்

Also Read: Skipping Breakfast: காலை உணவை ஒரு மாதம் தவிர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா? இங்கே தெரிஞ்சுகோங்க!

Latest News