Food Recipe: அரேபியன் ஸ்டைல் சிக்கன் மந்தி பிரியாணி.. வீட்டிலேயே செய்யக்கூடிய சிம்பிள் டிஷ்! - Tamil News | How to make Arabian Style Chicken Manti Biryani easily at home; Food Recipes in tamil | TV9 Tamil

Food Recipe: அரேபியன் ஸ்டைல் சிக்கன் மந்தி பிரியாணி.. வீட்டிலேயே செய்யக்கூடிய சிம்பிள் டிஷ்!

Chicken Manti Biryani: சிக்கன் ரைஸ் முதல் பிரியாணி வரை கடைகளில் தேடி தேடி உணவுகளை சுவைக்கிறார்கள். கடைகளில் வாங்கி நாம் சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்கும் என்பது தெரியாது. அந்தவகையில், இன்று சுவையான மற்றும் ஆரோக்கியமான மந்தி பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Food Recipe: அரேபியன் ஸ்டைல் சிக்கன் மந்தி பிரியாணி.. வீட்டிலேயே செய்யக்கூடிய சிம்பிள் டிஷ்!

மந்தி (Image: freepik)

Published: 

05 Nov 2024 12:31 PM

தினந்தோறும் புதிய புதிய உணவுகளை வாங்கி சுவைப்பதில் பெரும்பாலான மக்களுக்கு அலாதி பிரியம். இதற்காக, சிக்கன் ரைஸ் முதல் பிரியாணி வரை கடைகளில் தேடி தேடி உணவுகளை சுவைக்கிறார்கள். கடைகளில் வாங்கி நாம் சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்கும் என்பது தெரியாது. இது வயிற்றில் சில பல பிரச்சனைகளை உண்டாக்கும். இதன் காரணமாக, வீடுகளில் இத்தகைய உணவுகளை செய்து சாப்பிடுவோம். இருப்பினும், இது மாதிரியான உணவுகள் கடைகளில் தயாரிக்கப்படும் உணவுகளின் சுவைக்கு தருவதில்லை. அந்தவகையில், இன்று நாம் அரேபிய உணவான மந்தியை கடைகளில் தயாரிக்கப்படும் சுவையில் எப்படி வீடுகளிலேயே தயாரிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Food Recipe: காரசாரமான காரைக்குடி சிக்கன் வறுவல்.. எளிதாகவும், சூப்பராகவும் செய்வது எப்படி?

மந்தி செய்ய தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி – அரை கிலோ
கொத்தமல்லி – 1 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
ஏலக்காய் – 10
கிராம்பு – 10
பட்டை – 4 துண்டு
பிரியாணி இலை – 3
காய்ந்த எலுமிச்சை – 3 (முழுதாக வேண்டும்)
சிக்கன் – 2 தொடை பீஸ் அல்லது முழு கோழி
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடலை எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
தக்காளி – 1
முந்திரி – 5
திராட்சை – 5
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
வெண்ணெய் – சிறிதளவு

ALSO READ: Food Recipe: சுவையான மட்டன் கோலா உருண்டை.. இந்த ஸ்டைலில் குக் செய்து கலக்குங்க..!

மந்தி பிரியாணி செய்வது எப்படி..?

  • முதலில் அரை கிலோ பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி, அதில் தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் நன்றாக ஊறவைத்து கொள்ளவும்.
  • அடுத்ததாக, அடுப்பை ஆன் செய்து கடாயை வைத்து சூடானதும் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி, ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் மிளகு, 5 ஏலக்காய், 5 கிராம்பு, 2 துண்டு பட்டை, ஒரு பிரியாணி இலை, 1 முழுதான காய்ந்த எலுமிச்சை ஆகியவற்றை ஒரு துளி கூட எண்ணெய் சேர்க்காமல் நன்றாக வதக்கி கொள்ளவும்.
  • அதன்பிறகு, தனியாக எடுத்துவைத்துள்ள மசாலா கலவையை ஆறியதும் ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக தண்ணீர் ஊற்றாமல் பொடியாக அரைக்கவும்.
  • இப்போது, நன்றாக கழுவி வைத்துள்ள இரண்டு சிக்கன் தொடை பீஸ் அல்லது முழு சிக்கனை ஒரு பாத்திரத்திற்கு நடுவில் வைத்து, அரைத்து வைத்துள்ள பொடியை அதன் மீது தூவ செய்யவும்.
  • தொடர்ந்து, அந்த சிக்கன் பீஸ் மீது பொடி நன்றாக கலக்கும்படி தேய்க்கவும். அதன்பின், இதை தனியாக வைத்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தில் 100 மிலி எண்ணெய் ஊற்றி, 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும். இதையடுத்து, எண்ணெய் சூடானதும் 5 கிராம்பு, 2 பட்டை, 5 ஏலக்காய், ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி, ஒரு டீஸ்பூன் சீரகம், 2 முழு காய்ந்த எலுமிச்சை சேர்க்கவும்.
  • இவற்றை ஒருமுறை நன்றாக கிளறியபின், 2 வெட்டி வைத்த பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக கிளறவும்.
  • தொடர்ந்து, வெங்காயம் பொன்னிறமாக வதந்தியதும், 2 ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட், 4 பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வேகவிடுங்கள்.
  • இப்போது, ஒரு தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கெட்டியான சாறாக எடுத்து கொள்ளவும். அதை அப்படியே, வெங்காய வதங்கும் கலவையில் ஊற்றி கிளறி கொள்ளவும்.
  • அடுத்ததாக, ஏற்கனவே ஊறவைத்துள்ள சிக்கனை எப்போது நேரடியாக மசாலா வதங்கும் சட்டிக்குள் இறக்கவும். ஒரு கிளாஸ் அரிசிக்கு ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சிக்கனை வேக விடவும். (தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள். )
  • சிக்கன் வெந்ததும், அவற்றை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும். அதன் தொடர்ச்சியாக ஊறவைத்த பாஸ்மதி அரிசியை தண்ணீரை வடித்து, மசாலா கலவை தண்ணீரில் மெதுவாக போடவும்.
  • தனியாக எடுத்துவைத்துள்ள சிக்கனில் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தூள் உப்பு தூவி சிக்கன் மீது நன்றாக தேய்க்கவும். அடுத்து, ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு வெண்ணெயை போட்டு சிக்கனை போட்டு இரு புறமும் நன்றாக வேகவிடவும்.
  • அடுப்பில் அரிசியும் தண்ணீரும் ஒன்றானதும், சிக்கன் துண்டுகளை அரிசி மீது வைத்து தம் போடவும்.
  • 10 நிமிடத்திற்கு தம் போட்டுள்ள தட்டை எடுத்து, அந்த மந்தி மீது வெண்ணையில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து தம் உடைத்தால் சுவையான மந்தி ரெடி.
இரவில் டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்னையா?
தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவலாமா?
ஆரோக்கியமாக வாழ தினமும் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்..!
இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி செய்த டாப் 7 சாதனைகள்..!