Basundi Sweet: பால் மட்டும் போதும் நாவில் கரையும் பாசுந்து ஸ்வீட் ரெடி..! - Tamil News | how to make basundi recipe in tamil | TV9 Tamil

Basundi Sweet: பால் மட்டும் போதும் நாவில் கரையும் பாசுந்து ஸ்வீட் ரெடி..!

Updated On: 

18 Jul 2024 23:49 PM

தென்னிந்திய மாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு ஸ்வீட் ரெசிபி தான் இந்த பாசுந்தி. இதில் பால், நட்ஸ் சேர்க்கப்பட்டிருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க, பாசுந்தி ஸ்வீட் ரெசி எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்வோம்.

Basundi Sweet: பால் மட்டும் போதும் நாவில் கரையும் பாசுந்து ஸ்வீட் ரெடி..!

பாசுந்து ஸ்வீட்

Follow Us On

ஒவ்வொரு மாநிலங்களில் ஒரு ஸ்வீட் ரெசிபி ஃபேமஸாக இருக்கும். அப்படி, தென்னிந்தியாவில் ஃபேமஸான ஒரு ஸ்வீட் ரெசிபி தான் பாசுந்தி. இது பார்ப்பதற்கு ரஸமலாய் ஸ்வீட் போலவே இருக்கும். பாசுந்தியில் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் சேர்க்கப்படுவதால் குழந்தைகளுக்கும் அடிக்கடி செய்துக் கொடுக்கலாம். ஹில்த்தியானதும் கூட. இப்போது பாசுந்தி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை பற்றி பார்ப்போம்.

Also Read: துரியன் பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

தேவையான பொருட்கள்:

  • கொழுப்பு நிறைந்த பால் – 1 லிட்டர்
  • சர்க்கரை – 1/4 கப்
  • முந்திரி – 6
  • பிஸ்தா – 10
  • பாதாம் – 10
  • குங்குமப்பூ – 1 சிட்டிகை
  • ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன்

செய்முறை

முதலில் அடி கனமான பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள பாலை ஊற்றி தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு, பொங்கி வந்ததும் குறைவான தீயில் வைத்து பால் 1/2 லிட்டராக சுண்டி வரும் வரை கொதிக்க வைக்கவும். இப்போது பாலாடை உருவாக ஆரம்பிக்கும்.

அந்த பாலாடையையும் சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக கிளறி விடவும். தீயை குறைவாக தான் வைத்திருக்க வேண்டும் மறந்து விடக்கூடாது. அடிப்பிடிக்காமல் இருக்க தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

பால் கொதித்து வருவதற்குள் எடுத்து வைத்துள்ள பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா பருப்புகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

பால் நன்கு கெட்டியானதும் சர்க்கரை கொட்டி கிளறி விடவும். ஒருவேளை இனிப்பு அதிகமாக வேண்டுமென்றால், அதற்கு தகுந்தாற்போல சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். 

பாசுந்தி வாசனை வரும் வரை நன்றாக கொதிக்க விட்டு, அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். இப்போது பொடியாக்கிய பருப்புகள், குங்குமப்பூ, ஏலக்காய் தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.

அதை ஒரு பௌலில் ஊற்றி கொஞ்சம் நேரம் ஆறவிடவும். பிறகு, ஃபிரிட்ஜில் 45 நிமிடங்கள் வைத்து குளிர்விக்கவும். 

45 நிமிடங்களுக்கு பிறகு பாசுந்தியை பரிமாறலாம். குளு குளு பாசுந்தி ரெடி! சூடாக குடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் ஃபிரிட்ஜில் வைக்க தேவையில்லை.

Also Read: Rava Coconut Burfi: வெறும் 10 நிமிடத்தில் தித்திப்பான ரவா தேங்காய் பர்பி.. வெறும் 4 பொருள் போதும்..

டிப்ஸ்:

உங்களிடம் பால் பவுடர் அல்லது கண்டென்ஸ்டு மில்க் இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம். அதை பால் கொதிக்கும்போதே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பால் பவுடர் இனிப்பாக இருக்கும் என்பதால், அதற்கு ஏற்ப சர்க்கரையை குறைத்துக் கொள்ளுங்கள்.

கொழுப்பு நிறைந்த பாக்கெட் பாலுக்கு பதிலாக எருமை பால் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பசும்பாலை விட கொழுப்பு அதிகம், அடர்த்தியாகவும் இருக்கும்.

பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
Exit mobile version