5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Food Recipe: இட்லி, தோசை போர் அடித்துவிட்டதா..? சுவையான கார பணியாரம் செய்து சாப்பிடுங்க..!

Kara Paniyaram: காலையிலும், இரவிலும் நல்ல காரசாரமான ஒரு ரெபிசியை மழைக்காலத்தில் சூடாக சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா, அப்படியான சூப்பர் ரெபிசியை உங்களுக்கு தருகிறோம். வித்தியாசமான முறையில் கார பணியாரம் மற்றும் மொறு மொறு அடை தோசை எப்படி செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

Food Recipe: இட்லி, தோசை போர் அடித்துவிட்டதா..? சுவையான கார பணியாரம் செய்து சாப்பிடுங்க..!
பணியாரம் – அடை தோசை (Image: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 07 Nov 2024 13:17 PM

வீட்டில் தினந்தோறும் இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டு போர் அடித்திருக்கும். காலையிலும், இரவிலும் நல்ல காரசாரமான ஒரு ரெபிசியை மழைக்காலத்தில் சூடாக சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா, அப்படியான சூப்பர் ரெபிசியை உங்களுக்கு தருகிறோம். வித்தியாசமான முறையில் கார பணியாரம் மற்றும் மொறு மொறு அடை தோசை எப்படி செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். ஒரு முறை இவற்றை உங்கள் குழந்தைகளுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் செய்து கொடுத்தால் தினந்தோறும் செய்து கொடுக்க சொல்லி அடம் பிடிப்பார்கள். அப்படி ஒரு மறக்க முடியாத சுவையை உங்கள் நாவில் நடனமாட செய்யும்.

ALSO READ: Food Recipe: கீரை கொண்டு சாம்பார், தயிர் குழம்பு… வித்தியாசமான முறையில் இப்படி செய்து அசத்துங்க!

கார பணியாரம்

கார பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:

  • இட்லி மாவு – 4 பெரிய கப் (மாவு நன்றாக புளித்து இருந்தால் நல்லது)
  • வெங்காயம் – 3
  • உளுத்தம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி
  • கடுகு – அரை ஸ்பூன்
  • சீரகம் – அரை ஸ்பூன்
  • சோடா உப்பு – சிறிதளவு
  • கொத்தமல்லி – 1 கையளவு
  • எண்ணெய் – அரை கப்

கார பணியாரம் செய்வது எப்படி..?

  • முதலில் எடுத்து வைத்துள்ள வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • நன்றாக புளித்த இட்லி மாவில் சிறிதளவு சோடாவை உப்பை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
  • இப்போது, அடுப்பை ஆன் செய்து ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும்.
  • அதன்பிறகு, அரை ஸ்பூன் கடுகு மற்றும் சீரகத்தை போட்டு தாளிக்கவும். இவை நன்றாக பொரிந்ததும் எடுத்துவைத்துள்ள வெள்ளை உளுத்தப்பருப்பை சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும்.
  • தொடர்ந்து, பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் போன்றவற்றை நன்றாக வதக்கி கொள்ளவும்.
  • வெங்காயமும் பொன்னிறமாக நன்றாக வெந்தவுடன், இவை அனைத்தையும் புளித்த இட்லி மாவில் கொட்டி கலக்கி கொள்ளவும்.
  • உங்களுக்கு கொத்தமல்லி சுவையும், நறுமணமும் பிடிக்கும் என்றால், ஒரு கை அளவிலான கொத்தமல்லி தழையை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துகொண்டு கலக்கலாம்.
  • மீண்டும் அடுப்பை ஆன் செய்து பணியார சட்டியை வைத்து எண்ணெய் அனைத்து இடங்களில் படுமாறு தடவவும்.
  • இப்போது, பணியார குழிகளில் எண்ணெய் சிறிது காய்ந்ததும் பணியார மாவு கலவையை குழிகளில் பாதி அல்லது முக்கால் பங்கு நிரம்பும் வரை ஊற்றவும்.
  • இப்போது, ஒரு கூர்மையானகம்பியைக் கொண்டு பணியாரம் வெந்துவிட்டதா என்பதை குத்தி பாருங்கள், அதன் தொடர்ச்சியாக திருப்பி போட்டு வேகவிடுங்கள்.
  • மீண்டும், ஒரு முறை குத்தி பார்த்து வெந்துவிட்டதா என்பதை சோதனை செய்தபின் இறக்கினால் சுவையான கார பணியாரம் ரெடி.
  • இவற்றை தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

அடை

அடை செய்ய தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி – ஒரு கப்
  • உளுத்தம் பருப்பு –  1 1/2 டேபிள் ஸ்பூன்
  • கடலை பருப்பு – அரை கப்
  • துவரம் பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • பாசி பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • வர மிளகாய் – 10
  • உப்பு – சிறிதளவு
    மிளகு – 1/4 ஸ்பூன்
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • தேங்காய்  – 4 கீத்து

ALSO READ: Food Recipe: அரேபியன் ஸ்டைல் சிக்கன் மந்தி பிரியாணி.. வீட்டிலேயே செய்யக்கூடிய சிம்பிள் டிஷ்!

சுவையான அடை செய்வது எப்படி..?

  1. முதலில் எடுத்து வைத்துள்ள பச்சரிசி, 10 வர மிளகாய் மற்றும் பருப்பு வகைகள்  அனைத்தையும் இரவு முதல் அல்லது குறைந்தது மூன்று மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.
  2. அதன்பிறகு, தண்ணீரை வடித்து அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்து வைத்து கொள்ளவும்.
  3. இப்போது, அரைத்த மாவை தனியாக எடுத்து வைத்தும் அதில் சிறிது சிறிதாக நறுக்கி வைத்த தேங்காய் கீத்து, பொடி பொடியாக வெட்டப்பட்ட கறிவேப்பிலை, மூன்று நான்காக அரைக்கப்பட்ட மிளகு, உப்பு போன்றவற்றை சேர்த்து கலக்கி கொள்ளவும்.
  4. இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றவும்
  5. உங்களுக்கு தேவையான அளவில் மெல்லியதாகவோ அல்லது தடிமனாகவோ ஊற்றி ஒரு ஸ்பூன் எண்ணெயை தெளிக்கவும்.
  6. அவ்வளவுதான், இவை வெந்ததும் சுட்டு எடுத்தால் சூவையான, சூப்பரான மொறு மொறு அடை தோசை ரெடி.
  7. அடை தோசையை தக்காளி சட்னி, சாம்பார், தேங்காய் சட்னி வைத்து சாப்பிடலாம்.

Latest News