Food Recipe: டாப் டக்கர் சூப்பர் டிஷ்! கொத்தமல்லி தோசை, சிங்கப்பூர் ஃப்ரைடு இட்லி செய்வது எப்படி?
Coriander Dosa: இன்றைய நவீன வாழ்க்கையில் இட்லி, தோசைகள் இல்லாமல் நாம் இல்லை என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். வீடுகளில் அரைத்து வைத்திருக்கும் மாவுகளை சட்டிகளில் இட்டு வேகவைத்த எடுத்தால், அவ்வளவுதான் சுவைத்துவிட்டு அடுத்த வேலைகளை பார்க்கலாம்.
தினந்தோறும் நம் வீட்டில் இட்லி அல்லது தோசையானது நம் உணவு வாழ்க்கையோடு இணைந்திருக்கும். எளிதாகவும், விரைவாகவும் செய்யக்கூடிய ரெசிபிகளில் இவைகள் முதன்மையானது. அந்தவகையில், தினந்தோறும் ஒரே மாதிரியான இட்லி, தோசைகளை செய்யாமல் சற்று வித்தியாச முறையில் செய்து ருசித்தால் எப்படி இருக்கும். அதற்காக குறிப்புகளை இங்கு தெரிந்து கொள்வோம். இட்லியும், தோசையும் நம் தாத்தா, பாட்டி காலத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகளில்தான் செய்வார்கள் என்று சொல்லி கேள்வி பட்டிருப்போம்.
ஆனால், இன்றைய நவீன வாழ்க்கையில் இவைகள் இல்லாமல் நாம் இல்லை என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். வீடுகளில் அரைத்து வைத்திருக்கும் மாவுகளை சட்டிகளில் இட்டு வேகவைத்த எடுத்தால், அவ்வளவுதான் சுவைத்துவிட்டு அடுத்த வேலைகளை பார்க்கலாம். இப்படியான சூழ்நிலையில், கொத்தமல்லி தழை தோசை மற்றும் சிங்கப்பூர் ஃப்ரைடு இட்லி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Food Recipe: மழைக்கு இதமாய் ஸ்நாக்ஸ் சாப்பிட ஆசையா? சூப்பரான காளான் சமோசா ரெசிபி இதோ!
கொத்தமல்லி தோசை
கொத்தமல்லி தோசை செய்ய தேவையான பொருட்கள்:
- பச்சரிசி – 1 கப்
- புளுங்கல் அரிசி – 1 கப்
- உளுத்தம் பருப்பு – 1/2 கப்
- கொத்தமல்லி – கைப்பிடி அளவு
- பச்சை மிளகாய் – 3
வெந்தயம் – 1 டீஸ்பூன் - உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
- கடைகளில் வாங்கி வைத்துள்ள கொத்தமல்லியை மண் இல்லாதவாறு தண்ணீரில் நன்றாக கழுவி பொடி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்
- இப்போது, எடுத்து வைத்துள்ள பச்சரிசி, புளுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து கொள்ளவும்.
- வீட்டில் இருக்கும் கிரைண்டரில் நன்றாக ஊற வைத்துள்ள அரிசிகளை கொட்டி, உளுத்தம் பருப்பு, வெந்தயத்தை சேர்த்து நன்றாகவும், மென்மையாகவும் அரைத்து கொள்ளவும்.
- அரிசி கலவையை அரைக்கும்போதே அதில் எடுத்து வைத்துள்ள கொத்தமல்லி, பச்சை மிளகாய் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.
- அடுத்ததாக, அரைத்த அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு இரவு முழுவதும் அப்படியே வைக்கவும்.
- ஒரு இரவுக்கு பிறகு, அடுப்பை ஆன் செய்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் மாவை தோசைகளாக ஊற்றி, சிறிதளவு எண்ணெயை சுற்றிலும் தெளித்து முறுகலாக முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான கொத்தமல்லி தோசை ரெடி.
சிங்கப்பூர் ஃப்ரைடு இட்லி
சிங்கப்பூர் ஃப்ரைடு இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
- இட்லி – 3
- காய்ந்த மிளகாய் – 2
- மைதா மாவு – 50 கிராம்
- கார்ன்ஃப்ளார் – 50 கிராம்
- இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
- எலுமிச்சைச் சாறு – 1/2 டீஸ்பூன்
- மிளகாய் பேஸ்ட் – 20 கிராம்
- கரம் மசாலா – 1 டீஸ்பூன்
- மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
- முந்திரி – 20 கிராம்
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
ALSO READ: Food Recipe: சூப்பர் ஃபுட் சண்டே! முட்டை 85, முட்டை பணியாரம் செய்வது எப்படி?
செய்முறை:
- முதலில் எடுத்து வைத்துள்ள இட்லிகளை தேவையான அளவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
- அடுத்ததாக, ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன்ஃப்ளாரை (சோள மாவு) மாவுகளை ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.
- இந்த மாவு கலவையில் வெட்டி வைத்துள்ள இட்லி துண்டுகளை முக்கி எடுத்து தனியே வைத்து கொள்ளவும்.
- அடுப்பை ஆன் செய்து கடாயை வைத்து சூடானதும் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து அதில், காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
- நன்றாக வந்தகியதும் முந்திரியை சேர்த்து வெந்ததும், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடுங்கள்.
- அடுத்ததாக, தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, மிளகுத்தூள் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து ஒருமுறை கிளறவும்.
- இப்போது, மிளகாய் பேஸ்டை சேர்த்து நன்கு கிளறியதும், கலவை கிரேவி பதத்துக்கு வரும்.
- இதனை தொடர்ந்து, மாவுக் கலவையில் புரட்டி தனியாக எடுத்து வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து இறக்கினால் சுவையான சிங்கப்பூர் ஃப்ரைடு இட்லி ரெடி ஆகிவிடும்.