5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Food Recipe: சுவையான மட்டன் கோலா உருண்டை.. இந்த ஸ்டைலில் குக் செய்து கலக்குங்க..!

Mutton Kola Urundai: கிராமங்களில் இன்றும் கிடா விருந்து வைத்து மக்கள் ஊருக்கே விருந்து வைத்து அசத்துவார்கள். மட்டனை பெரும்பாலானவர்கள் குழம்பாகவும், கூட்டு போன்று வைத்தே ருசிப்பார்கள். ஆனால், மட்டன் கொண்டு பல வகையான டிஷ்களை செய்து நம்மால் அசத்த முடியும். அந்த வகையில், சுவையான மட்டன் கோலா உருண்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Food Recipe: சுவையான மட்டன் கோலா உருண்டை.. இந்த ஸ்டைலில் குக் செய்து கலக்குங்க..!
மட்டன் கோலா உருண்டை
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 01 Nov 2024 12:18 PM

பெரும்பாலானோர் சிக்கன் காதலர்களா இருந்தாலும் மட்டனுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளாமே உள்ளனர், மட்டன் சாப்பிடும் மக்கள் இந்த உலகத்தில் குறைவு என்றாலும், மட்டன் ருசியில் தனி இடத்தை பிடிக்கும். மட்டன் இன்றைய காலத்தில் ஒரு கிலோ ரூ. 1000 மேல் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், கிராமங்களில் இன்றும் கிடா விருந்து வைத்து மக்கள் ஊருக்கே விருந்து வைத்து அசத்துவார்கள். மட்டனை பெரும்பாலானவர்கள் குழம்பாகவும், கூட்டு போன்று வைத்தே ருசிப்பார்கள். ஆனால், மட்டன் கொண்டு பல வகையான டிஷ்களை செய்து நம்மால் அசத்த முடியும். அந்த வகையில், சுவையான மட்டன் கோலா உருண்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ALSO READ: Diwali Special Recipes: தீபாவளி ஸ்பெஷல் மட்டன் குழம்பு.. ஈஸியா எப்படி செய்து பாருங்க..!

மட்டன் கோலா உருண்டை

மட்டன் கோலா உருண்டை செய்ய தேவையான பொருட்கள்

  • மட்டன் – 1/4 (கொத்துக்கறியாக வாங்கி கொள்ளவும்)
  •  பெரிய வெங்காயம் – 2
  • பொட்டுகடலை – 2 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2 முதல் 3
  •  மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • சோம்பு – 2 ஸ்பூன்
  •  இஞ்சி – 2 துண்டு
  • பூண்டு – 4 பற்கள்
  • மிளகாய் தூள் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • கடலை எண்ணெய் – தேவையான அளவு
  •  கொத்தமல்லி – 1 கை அளவு
  • பட்டை – 1
  • கிராம்பு 2 முதல் 3
  • ஏலக்காய் – 2

ALSO READ: குக்கரில் இந்த உணவுகளை மட்டும் சமைக்காதீங்க.. உடலுக்கு மிகவும் தீங்கு..!

மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி..?

  • முதலில் கடையில் வாங்கி வந்த கொத்துக்கறியை சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அலசி எடுத்து கொள்ளவும்.
  • அதன்பிறகு, எடுத்து வைத்துள்ள பெரிய வெங்காயம், 1 கை அளவு கொத்தமல்லியை பொடி பொடியாக நறுக்கி எடுத்து வைக்கவும்
  • இப்போது, பொட்டுக்கடலை பருப்பை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.
  • தொடர்ந்து, ஒரு மிக்ஸி ஜாரில் மசாலா பொருட்களான பட்டை, சோம்பு, கிராம்பு, மற்றும் ஏலக்காய்  ஆகிவற்றை மேலே குறிப்பிட்டுள்ள அளவை சேர்த்து அரைக்கவும்
  • அதே மிக்ஸி ஜாரில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் நன்றாக அரைக்கவும்.
  • அடுத்ததாக, அடுப்பை ஆன் செய்து மிதமான சூட்டில் அடுப்பில் கடாயை வைத்து சூடு செய்யவும்.
  • கடாய் சூடானதும் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு ஏற்றவும்.
  • எண்ணெய் சூடானதும் தண்ணீர் வடித்து வைத்துள்ள மட்டன் கொத்துக்கறி, மஞ்சள் தூள், காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  • இப்போது அரைத்து வைத்திருந்த மசாலாவையும் சேர்த்து நன்கு கிளறி சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் வரை நன்றாக வேக விடவும்.
  •  கொத்துக்கறி நன்றாக வெந்ததும் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
  • கறியில் இருந்து தண்ணீர் வெளியேறி இருந்தால் நன்றாக வெந்திருக்கிறது என்று அர்த்தம்.
  • எடுத்துவைத்துள்ள வேகவைத்த கறியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைக்கவும்.
  • இப்போது, ஒரு பாத்திரத்தில் அரைத்த கறியை கொட்டி பொடி பொடியாக வெட்டி  வைத்திருக்கும் பெரிய வெங்காயம், கொத்தமல்லி, பொட்டுக்கடலையை சேர்த்து நன்கு பிசையவும்.
  • இப்போது, கறி கலவை மாவு பதத்தில் இல்லாமல் தண்ணியாக இருந்தால், இன்னும் கொஞ்சம் பொட்டுக்கடலை மாவை சேர்த்துக் கொள்ளவும்.
  • (குறிப்பு: மட்டன் கோலா உருண்டை எண்ணெயில் பொரிக்கும்போது கறி தனி தனியாக உடையாமல் இருக்க பொட்டு கடலை மாவு உதவும்)
  • அடுத்ததாக, நன்றாக பிசைந்து வைத்துள்ள மட்டன் கறி உருண்டைகளாக நன்றாக வட்ட வடிவில் பிடித்து ஒரு தட்டில் அடுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • இப்போது, அடுப்பை ஆன் செய்து மிதமான சூட்டில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கறி உருண்டைகளை பொரித்து எடுக்கவும்.
  • கறி உருண்டை ரொம்பவும் கருகாமல் பார்த்து கொள்ளுங்கள்.
  • அதேபோல், உருண்டை வெந்துவிட்டா இல்லையா என்பதை ஒரு முறைக்கு இரண்டு முறையோ போட்டு பொன்னிறமாக எடுக்கவும்.
  • எண்ணெய்யை வடித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளுங்கள்.
  • அதிக எண்ணெயுடன் பறிமாறினால் வயிற்று பிரச்சனை உண்டாகும், எனவே ஆரோக்கியத்தை பராமரிப்பதும் நல்லது.
  • இப்போது தக்காளி கெட்ஷப் உடன் குடும்பத்தாருக்கு பரிமாறி அசத்துங்கள்.

Latest News