Food Recipes: தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி செய்வது எப்படி..? சூப்பர் ரெசிபி இதோ!
Dindigul Thalappakatti: தலப்பாக்கட்டி என்பது தலைப்பாகை கட்டி பிரியாணி செய்த ஒரு நபரின் நினைவாகவே பிரியாணிக்கு இந்த பெயர் கிடைத்தது. உலகம் முழுவதும் இந்த பிரியாணி மிகவும் பிரபலம். இந்த பிரியாணி செய்ய பயன்படுத்தப்படும் மசாலாவும் வித்தியாசமானது. அந்தவகையில், இன்று சுவையான திண்டுக்கல் தலைப்பாக்கட்டி பிரியாணி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி என்பது தமிழ்நாட்டின் திண்டுக்கல் பகுதியில் இருந்து பிரபலமான பிரியாணி ஆகும். இந்த பிரியாணி அதே பெயரில் உலகம் முழுவதும் பல பிரியாணி கடைகளை கொண்டுள்ளது. தலப்பாக்கட்டி என்பது தலைப்பாகை கட்டி பிரியாணி செய்த ஒரு நபரின் நினைவாகவே பிரியாணிக்கு இந்த பெயர் கிடைத்தது. உலகம் முழுவதும் இந்த பிரியாணி மிகவும் பிரபலம். இந்த பிரியாணி செய்ய பயன்படுத்தப்படும் மசாலாவும் வித்தியாசமானது. அந்தவகையில், இன்று சுவையான திண்டுக்கல் தலைப்பாக்கட்டி பிரியாணி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Food Recipes: புரட்டாசி சனிக்கிழமை விரதமா..? இந்த முறையில் பாயாசம் செய்து விரதம் விடுங்க!
தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி செய்வது எப்படி ….?
மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருள்கள்:
- சீரக சம்பா அரிசி – 1 1/2 கிலோ
- பெரிய வெங்காயம் – 5
- தக்காளி – 2
- இஞ்சி – 100 கிராம்
- பச்சை மிளகாய் – 4
- பூண்டு – 100 கிராம்
- பட்டை – 5
- கிராம்பு – 5
- ஏலக்காய் -5
- புதினா இலை – ஒரு கைப்பிடி
- மல்லி இலை -ஒரு கைப்பிடி
- தேங்காய் பால் -1 கப்
- ஆட்டுக்கறி – 1 கிலோ
- சின்ன வெங்காயம் – 100 கிராம்
- புளித்த தயிர் – 100 கிராம்
- கடலெண்ணெய் – 200 கிராம்
- உப்பு – தேவையான அளவு
- நெய் – ஒரு டப்பா
பிரியாணி செய்முறை:
- சீரக சம்பா அரிசியை தண்ணீரில் கழுவி வடிகட்டி மீண்டும் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளவும்.
- தக்காளி மற்றும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், புதினா இலை, இஞ்சி, மல்லி இலை ஆகிய இவை அனைத்தையும் தனித்தனியாக குறைந்த அளவு தண்ணீர் விட்டுக் கெட்டியாக மிக்ஸியில் பேஸ்ட் பதத்தில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- தொடர்ந்து மிக்ஸியில் கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- இப்பொழுது குக்கரில் மட்டனை சிறிதளவு தண்ணீர் ஊற்றி 4 முதல் 5 விசில் வரும் வரையில் வேக வைக்கவும்.
- ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி எண்ணெய் நன்றாகக் காய்ந்தவுடன் அரைத்து எடுத்து வைத்த ஏலக்காய், பட்டை, கிராம்பு ஆகியவற்றை முதலில் போடவும்.
- அதன் தொடர்ச்சியாக பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு நன்கு பொன்னிறமாக வரும் வரையில் கிளறி விடவும். இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு நன்றாக கிளறவும்.
- தக்காளி நன்றாக வெங்காயத்துடன் இணைந்த பின் அரைத்து வைத்த மசாலாக்கள் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கிளற தொடங்கவும். இதனுடன், எண்ணெய் நன்கு பிரியும் வரையில் கிளற வேண்டும்.
- எண்ணெய் பிரிந்து வந்தவுடன் மேற்கண்ட கலவையுடன் தேங்காய்ப் பாலை சேர்க்கவும்.
- தேங்காய்ப் பால் நன்றாக மசாலுடன் ஒன்றானதும், குக்கரில் வேகவைத்த மட்டனையும் அதில் சேர்க்கவும்.
- பின்னர், தயிரையும் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும்.
- மட்டனுடன் மசாலா சேர்ந்தவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது கொதிக்க விடவும்.
- கழுவி எடுத்து வைத்த சீரக சம்பா அரிசியை வேக வைத்த மசாலில் சேர்க்கவும்.
- சுமார் பத்து நிமிடங்கள் மிதமான தீயில் அடிப் பிடிக்காமல் வைத்துக் கிளறிய பின் சிறிதளவு நெய் சேர்த்து மீண்டும் கிளறவும்.
- நீங்கள் வீட்டில் உள்ள அடுப்பில் செய்திருந்தால் மீதான சூட்டில் ஒரு தோசைக்கல்லை வைத்து, பாத்திரத்தை வைக்கவும்.
- தொடர்ந்து, ஒரு மூடி வைத்து அந்த பாத்திரத்தின் மீது ஒரு சட்டியில் தண்ணீர் வைத்து தம் போடவும்.
- ஒரு 15 நிமிடங்களுக்கு பிறகு சிறிது நெய் ஊற்றி தம் உடைத்து கிளறவும்.
- தயிர் பச்சடி சேர்த்து சாப்பிட சுவையான தலைப்பாக்கட்டி மட்டன் பிரியாணி சுடச் சுட தயார்.
தயிர் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
- அரை லிட்டர் தயிர்
- பச்சை மிளகாய்
- 4 பெரிய வெங்காயம்
- கொத்தமல்லி
ALSO READ: Food Recipes: சுவைமிக்க தேங்காய் பால் ரசம் செய்ய ஆசையா..? உங்களுக்கான ரெசிபி இதோ..!
திண்டுக்கல் தலைப்பாக்கட்டி பிரியாணிக்கு தொட்டுகொள்ள தயிர் பச்சடி செய்ய, முதல் பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் நன்றாக வெட்டி கொள்ளவும். அதில், பொடி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கினால் தயிர் பச்சடி ரெடி. உங்களுக்கு வெள்ளரி பிடித்தால் அதையும் பொடி பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளலாம்.