5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali Special Recipes: தீபாவளி ஸ்பெஷல் மட்டன் குழம்பு.. ஈஸியா எப்படி செய்து பாருங்க..!

Mutton Kulambu: வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு மீன், ஆடு, கோழி, இறால் மற்றும் நண்டு என சமைத்து பரிமாறி அழகு பார்ப்பார்கள். அப்படிப்பட்ட தீபாவளி நாளில் சூப்பரான மட்டன் குழம்பு எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம். இது உங்கள் உறவினர்களை மயக்குவது மட்டுமின்றி, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் மீண்டும் மட்டன் குழம்பு செய்ய சொல்லி அடம் பிடிப்பார்கள்.

Diwali Special Recipes: தீபாவளி ஸ்பெஷல் மட்டன் குழம்பு.. ஈஸியா எப்படி செய்து பாருங்க..!
மட்டன் குழம்பு (Image: FREEPIK)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 31 Oct 2024 14:02 PM
தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும், தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை பட்டாசுகள், அசைவ விருந்துகள் என உற்சாகமாக கொண்டாடப்படும். தீப ஒளி நாளில் வட மாநிலங்களில் அசைவ உணவு எடுத்து சமைக்கவோ, சாப்பிடவோ மாட்டார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அசைவ உணவுகள் இல்லாத வீடுகளே இருக்காது என்று சொல்லலாம். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு மீன், ஆடு, கோழி, இறால் மற்றும் நண்டு என சமைத்து பரிமாறி அழகு பார்ப்பார்கள். அப்படிப்பட்ட தீபாவளி நாளில் சூப்பரான மட்டன் குழம்பு எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம். இது உங்கள் உறவினர்களை மயக்குவது மட்டுமின்றி, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் மீண்டும் மட்டன் குழம்பு செய்ய சொல்லி அடம் பிடிப்பார்கள். அப்படிப்பட்ட சுவையை தரும் இன்றைய மட்டன் குழம்பு ரெசிபி..

தீபாவளி ஸ்பெஷல் மட்டன் குழம்பு

மட்டன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

  • மட்டன் – 1 கிலோ
  • மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • தயிர் – சிறிதளவு
  • உப்பு – சிறிதளவு
  1. முதலில் கடையில் இருந்து வாங்கி வந்த 1 கிலோ மட்டனை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு கழுவி எடுத்து கொள்ளவும்.
  2. அதன்பிறகு, மட்டனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர் சேர்த்து நன்கு கலக்கி ஊறவைத்து கொள்ளவும்.

அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:

  • கடலை எண்ணெய் – 4 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 150 கிராம்
  • துருவிய தேங்காய் – சிறிதளவு
  • மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • முந்திரி – 4 முதல் 5
  • பட்டை – 1 துண்டு
  • கிராம்பு – 3
  • ஏலக்காய் – 2
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • மிளகு – 1 டீஸ்பூன்
  • சோம்பு – 1 டீஸ்பூன்

இவை அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

  • கடலைஎண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 2 (பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்)
  • தக்காளி – 2 (பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்)
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
  • குழம்பு மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு
  • கொத்தமல்லி – ஒரு கை அளவு

ALSO READ: Diwali Diabetes-friendly Food: சர்க்கரை நோயாளிகள் ஸ்வீட் சாப்பிட ஆசையா? ஆரோக்கியமான இனிப்புகளை வீட்டிலேயே செய்யலாம்!

மட்டன் குழம்பு செய்வது எப்படி..?

  1. ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு கடலை எண்ணெய் ஊற்றவும்
  2. எண்ணெய் சூடானதும் எடுத்து வைத்த மசாலா பொருட்களான பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை நன்றாக வதக்கவும்.
  3. தொடர்ந்து, பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.
  4. இப்போது, துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
  5. அதே சூட்டில் தொடர்ந்து மல்லித் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கிய பின், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
  6. எடுத்து வைத்துள்ள முந்திரியையும் போட்டு வதக்கி கொள்ளுங்கள். இப்போது இவை அனைத்தையும் ஒரு தட்டில் போட்டு ஆற விடவும்.
  7. தொடர்ந்து, மிக்ஸி ஜாரில் மாசாலா பொருட்களை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
  8. அடுப்பில் குக்கரை வைத்து, வழக்கம்போல் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  9. வெங்காயம் வெந்ததும் பொடி பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும்
  10. அதன்பின், தக்காளி நன்றாக மசிந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
  11. இப்போது, முன்பே ஊறவைத்த மட்டனை சேர்த்து கிளறியபின், தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.
  12. காரத்திற்கு ஏற்ப குழம்பு மிளகாய் தூளை சேர்த்து, சிறிது நேரத்தில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, உப்பு அளவை சரிபார்த்து கொள்ளுங்கள்.
  13. அதன்பின், குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடி வைத்து கொள்ளுங்கள்.
  14. அவ்வளவுதான் மிதமான சூட்டில் 4-5 விசில் விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சூப்பரான தீபாவளி மட்டன் குழம்பு ரெடி.

Latest News