5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Food Recipe: ஆளை தூக்கும் சுவை..! முட்டை கீமா, முட்டை மசாலா செய்வது எப்படி?

Egg Keema: முட்டை சத்துக்களின் சக்தி இல்லம் என்று அழைக்கப்படுகிறது. தினமும் 2 வேகவைத்த முட்டைகளை மட்டும் சாப்பிட்டு வந்தால், பல வகையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஏராளமான புரதச்சத்து கிடைக்கும், இது நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.

Food Recipe: ஆளை தூக்கும் சுவை..! முட்டை கீமா, முட்டை மசாலா செய்வது எப்படி?
முட்டை கீமா – முட்டை மசாலா (Image: FREEPIK)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 03 Dec 2024 16:27 PM

முட்டைகளை சாப்பிட விரும்புபவர்கள் பெரும்பாலும் ஆம்லேட், முட்டை பொரியல், வேகவைத்த முட்டைகளை காலை உணவாக எடுத்துக்கொள்வார்கள். இவைகளை எளிதாக, குறைந்த நேரத்தில் சமைத்து சாப்பிட்டு செல்லலாம். முட்டை என்பது நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் உண்ணப்படும் ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவுப்பொருள். முட்டை சத்துக்களின் சக்தி இல்லம் என்று அழைக்கப்படுகிறது. தினமும் 2 வேகவைத்த முட்டைகளை மட்டும் சாப்பிட்டு வந்தால், பல வகையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஏராளமான புரதச்சத்து கிடைக்கும், இது நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.

அந்தவகையில், இன்று முட்டைகளை பயன்படுத்தி முட்டை கீமா மற்றும் முட்டை மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ALSO READ: Food Recipe: சண்டே ஸ்பெஷல் ரெசிபி! மட்டன் 65, மட்டன் எலும்பு ரசம் செய்வது எப்படி..?

முட்டை கீமா

முட்டை கீமா செய்ய தேவையான பொருள்கள்:

  • முட்டை – 2
  • பட்டாணி – 1/2 கப்
  • பெரிய வெங்காயம் – 1
  • முழு தக்காளி – 1
  • தனி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • மல்லித்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  • கரம் மசாலா – 1 ஸ்பூன்
  • பிரிஞ்சி இலை – 1
  • பட்டை – 1
  • கிராம்பு – 2
  • அன்னாசிப்பூ – 1
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
  • எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி

முட்டை கீமா செய்வது எப்படி..?

  1.  2 முட்டைகள் மூழ்கும் அளவுக்கு ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பை ஆன் செய்து வேக வைக்கவும்.
  2. முட்டை வேகவைத்த தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததுடன் அடுப்பை ஆப் செய்யவும். (முட்டை வேக 10 நிமிடம் போதுமானது)
  3. முட்டையை சாதாரண நீரில் சிறிது நேரம் மாற்றி சூடு ஆறியதும், அதன் ஓடுகளை உரித்து கேரட் துருவுவது போல் துருவி எடுத்துக் கொள்ளவும்.
  4. அடுத்ததாக, தக்காளியை மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.
  5. இப்போது, மீண்டும் அடுப்பை ஆன் செய்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகும் வரை காத்திருக்கவும்.
  6. எண்ணெய் சூடானும் பிரியாணி மசாலாக்களான பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ போன்றவற்றை போடவும்.
  7. இவை அனைத்தும் இரண்டு முறை கிளறியபின் வெங்காயத்தை பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
  8. வெங்காயம் நன்றாக வெந்ததும் கழுவி எடுத்து வைத்துள்ள பட்டாணி சேர்த்து கிளறவும்.
  9. பட்டாணி வெந்ததும் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக கிளறவும்.
  10. பச்சை வாசனை போனதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மிளகாய் தூள், மல்லிதூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறியபின் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சிறிதுநேரம் கொதிக்க விடவும்.
  11. மசாலாக்கள் நன்றாக கலவையுடன் சேர்ந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் துருவி வைத்திருக்கும் முட்டையை சேர்த்து கிளறி, கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும். அவ்வளவுதான், சுவையான முட்டை கீமா ரெடி.

 முட்டை மசாலா

முட்டை மசாலா செய்ய தேவையான பொருட்கள் :

  • முட்டை – 5
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 2
  • பச்சை மிளகாய் – 2
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன்
  • வெங்காயத்தாள் – சிறிதளவு
  • சோம்பு – 1 ஸ்பூன்
  • கடுகு – 1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
  • கரம் மசாலா – 1 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 2 ஸ்பூன்

ALSO READ: Food Recipe: ஆரோக்கியம் தரும் அரைக்கீரை பக்கோடா.. அரை மணிநேரத்தில் செய்வது எப்படி..?

முட்டை மசாலா செய்வது எப்படி..?

  1. கடைகளில் வாங்கி வந்த முட்டைகளை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வேகவைத்து பாதியாக வெட்டி கொள்ளவும்.
  2. அடுத்ததாக, வெங்காயம், வெங்காயத்தாள், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பை ஆன் செய்து கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு போட்டு பொரிந்து வந்ததும் பொடி பொடியான நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்றாக வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமாக வெந்ததும் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
  5. மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கியபின்,  தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  6. தக்காளி நன்றாக மசிந்ததும் எண்ணெய் பிரிந்து வரும், அப்போது முட்டையை போட்டு உடையாமல் கிளறவும்.
  7. அந்தன்பிறகு தாராளமாக கொத்தமல்லி மற்றும் வெங்காயத்தாள் தூவி இறக்கினால் சுவையான ஸ்பைசி முட்டை மசாலா தயார்.

Latest News