Food Recipe: ஈசியான சூப்பர் டிஷ்! மீன் பிரியாணி, மட்டன் கீமா புலாவ் செய்வது எப்படி?
Fish Biryani: பிரியாணி அல்லது ஸ்பெஷல் ஃபுட் சாப்பிட ஆசை என்றால், அதற்கான செய்முறையை இன்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். நாம் சொல்லப்போகும் இந்த டிஷ்களிலும் பெரியளவில் மசாலாக்கள் இடம்பெறாது என்றாலும் சுவையானது மிக அருமையாக இருக்கும்.
சிக்கன், மட்டன் மற்றும் முட்டை பிரியாணியை பலமுறை சாப்பிட்டு இருப்போம். அசைவத்தை விரும்புபவர்களுக்கு சிக்கன் பிரியாணி மிகவும் பிடித்தவை. அதேசமையம், இவைகள் தவிர்த்து வித்தியாசமான பிரியாணி அல்லது ஸ்பெஷல் ஃபுட் சாப்பிட ஆசை என்றால், அதற்கான செய்முறையை இன்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். நாம் சொல்லப்போகும் இந்த டிஷ்களிலும் பெரியளவில் மசாலாக்கள் இடம்பெறாது என்றாலும் சுவையானது மிக அருமையாக இருக்கும். அந்தவகையில், இன்று மீன் பிரியாணி மற்றும் மட்டன் கீமா புலாவ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ALSO READ: Food Recipe: நாக்கில் நடனமாடும் சுவை.. மதுரை கறி தோசை, கொத்துக்கறி சப்பாத்தி செய்வது எப்படி..?
மீன் பிரியாணி:
மீன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்
- மீன் – 4 துண்டுகள்
- அரிசி – 1/2 கிலோ
- நீள வாக்கில் வெட்டப்பட்ட வெங்காயம் – 4
- தக்காளி – 3
- மிளகாய் – 2 முதல் 4
- இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
- புதினா – ஒரு கைப்பிடி அளவு
- கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு
- மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
- மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தயிர் – 1 கப்
- எண்ணெய் – தேவையான அளவு
மீன் பிரியாணி செய்வது எப்படி..?
- பாசுமதி அரிசியை நன்றாக கழுவி, 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- கடைகளில் வாங்கிய மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்துபின் தேவையான அளவில் துண்டுகளாக போட்டு கொள்ளவும்.
- இப்போது எடுத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நீள வாக்கில் பிரியாணிக்கு தேவைகேற்க வெட்டவும்.
- அதேபோன்று, மிளகாயை இரண்டாக கீறி எடுத்து வைக்கவும்.
- பிரியாணிக்கு தேவையான அடிப்படை பொருட்களை தயார் செய்ததும், அடுப்பை ஆன் செய்து குக்கரை வைக்கவும்,
- குக்கரில் எண்ணெய் ஊற்றி சிறிது காய்ந்ததும் பிரியாணி மசாலாக்களான பிரியாணி இல்லைம் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
- அடுத்ததாக வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கி பொன்னிறமாக ஆனவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கியதும் பச்சை வாசனை போனதும் தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தொடர்ந்து வதக்கவும்.
- இதற்கு அடுத்தப்படியாக மஞ்சள் தூள் சிறிதளவு, தனி மிளகாய்த்தூள், மல்லித்தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.
- போட்ட மசாலாக்கள் நன்றாக வதங்கி, அதன் பச்சை தன்மை போனதும் ஒரு கப் அளவிலான தயிர் சேர்த்து கிளறவும்.
- அடுத்ததாக, தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து ஒரு முறை கிளறியதும், தயாராக எடுத்து வைத்துள்ள மீனை சேர்த்து உடையாமல் மெதுவாக மசாலாவுடன் சேரும் வகையில் கிளறவும்.
- பாசுமதி அரிசி 1 கப்புக்கு, 2 கப் தண்ணீர் என்ற வகையில் தண்ணீர் சேர்த்து சிறிதுநேரம் வேக வைத்து, குக்கரை மூடவும்.
- குக்கரில் ஒரு விசில் வந்ததும் ஆப் செய்து 10 நிமிடங்களுக்கு பின் ஓபன் செய்தான் சுவையான மீன் பிரியாணி ரெடி.
மட்டன் கீமா புலாவ்
மட்டன் கீமா புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:
- பாசுமதி அரிசி – 2 கப்
- மட்டன் கொத்துக்கறி – 1/2 கிலோ
- பெரிய வெங்காயம் – 1
- இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
- தயிர் – 1 கப்
- நெய் – 5 டேபிள் ஸ்பூன்
- மிளகு – 1/2 டீஸ்பூன்
- லவங்கம் – 6
- ஏலக்காய் – 8
- பிஸ்தா – 6
- பாதாம் – 8
- உலர் திராட்சை – 1/2 கப்
குங்குமப்பூ – 1/2 டீஸ்பூன் - உப்பு தேவையான அளவு
ALSO READ: Food Recipe: சட்டென செய்யக்கூடிய ஃபுட் ரெசிபி! சுறா புட்டு, மீன் வடை செய்வது எப்படி..?
மட்டன் கீமா புலாவ் செய்வது எப்படி..?
- அடுப்பை ஆன் செய்து ஒரு பாத்திரத்தை வைத்து சூடானதும் 5 ஸ்பூன் நெய் சேர்க்கவும்
- நெய் கரைந்து சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- இதன் தொடர்ச்சியாக ஏலக்காய், மிளகு, லவங்கம், தயிர், இஞ்சி-பூண்டு விழுது, பாதாம் பிஸ்தா, குங்குமப்பூ, உலர் திராட்சை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அடுத்ததாக, தேவையான அளவில் உப்பு சேர்த்து, கொத்துக்கறியை போட்டு வதக்கவும்.
- கறி சிறிது வதங்கியதும் தேவையான அளவில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரிசியைச் சேர்த்து கிளறியபின் குக்கரை மூடவும்.
- 2 விசில்கள் விட்டதும் அடுப்பை ஆப் செய்யவும். இப்போதும் மட்டனும், அரிசியும் நன்றாக வெந்திருக்கும். தொடந்து, மூடியைத் திறந்து கிளறினால், சுவையான மட்டன் கீமா புலாவ் ரெடி.