Food Recipe: ஆந்திரா ஸ்டைலில் கோங்குரா சிக்கன்.. செம டேஸ்டாக செய்வது எப்படி..?

Gongura Chicken: வார இறுதி நாட்களில் வித்தியாசமான ஸ்டைலில் சிக்கன் செய்ய விரும்பினால், கோங்குரா சிக்கனை முயற்சி செய்யலாம். இந்த செய்முறை கொண்டு நீங்கள் கோங்குரா சிக்கன் மட்டும் செய்யாமல், கோங்குரா இறால், கோங்குரா மட்டன் போன்ற பல விதமான ரெசிபிகளையும் சுவைக்கலாம். அந்தவகையில், இன்று ஆந்திரா ஸ்டைலில் நாக்கில் எச்சி ஊற செய்யும் கோங்குரா சிக்கன் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

Food Recipe: ஆந்திரா ஸ்டைலில் கோங்குரா சிக்கன்.. செம டேஸ்டாக செய்வது எப்படி..?

கோங்குரா சிக்கன் (Image: freepik)

Published: 

08 Nov 2024 12:13 PM

இன்றைய காலத்தில் சிக்கன் என்பது மிகவும் பிடித்த அசைவ உணவுகளில் ஒன்றாக மாறிவிட்டது. இதன் காரணமாக, வாரத்திற்கு ஒருமுறையாவது சிக்கனை எடுத்து பல்வேறு வகையான சிக்கன் ரெசிபிகளை தயாரித்து சுவைப்போம். அந்தவகையில், வார இறுதி நாட்களில் வித்தியாசமான ஸ்டைலில் சிக்கன் செய்ய விரும்பினால், கோங்குரா சிக்கனை முயற்சி செய்யலாம். இந்த செய்முறை கொண்டு நீங்கள் கோங்குரா சிக்கன் மட்டும் செய்யாமல், கோங்குரா இறால், கோங்குரா மட்டன் போன்ற பல விதமான ரெசிபிகளையும் சுவைக்கலாம். அந்தவகையில், இன்று ஆந்திரா ஸ்டைலில் நாக்கில் எச்சி ஊற செய்யும் கோங்குரா சிக்கன் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

கோங்குரா சிக்கன்

கோங்குரா சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:

  • சிக்கன் – 1/2 கிலோ
  • கோங்குரா (புளிச்சக்கீரை) – 1 கட்டு
  • எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி – சிறு துண்டு
  • பூண்டு – 4 பல்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 2
  • பச்சை மிளகாய் – 4
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
  • சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

கோங்குரா சிக்கன் செய்வது எப்படி..?

  1. முதலில் கடையில் வாங்கிய புளிச்சக்கீரையை நன்றாக மண், சிறு சிறு கற்கள் இல்லாத அளவிற்கு நன்றாக அலசி எடுத்துக்கொள்ளுங்கள்.
  2. அதன்பிறகு, புளிச்சக்கீரைகளில் இருக்கும் காம்பை வெட்டி எடுத்துவிட்டு, தழைகளை கடாயில் போடவும்.
  3. 4 அல்லது 5 முறை நன்றாக வதக்கியபின் சிறிதளவு உப்பு சேர்க்கவும். இப்போது கீரையை சற்று ஆறவைத்து மைய மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. இப்போது, அடுப்பை ஆன் செய்து ஒரு பாத்திரத்தை வைத்து சூடாக்கவும். பாத்திரம் சூரானதும், எடுத்து வைத்துள்ள எண்ணெய் சிறிதளவு ஊற்றவும்
  5. எண்ணெய் சூடானதும் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள வெங்காயம் ஆகியவற்றை போட்டு வதக்கவும்
  6. இதன் தொடர்ச்சியாக இப்போது அரைத்து வைத்துள்ள கீரையை சேர்த்து, உப்பு இல்லையெனில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்க தொடங்கவும்.
  7. புளிச்சக்கீரை நல்ல புளிப்பாக இருக்கும் என்பதால் தயிர், எலுமிச்சை, தக்காளி போன்றவை சேர்க்க தேவை இல்லை.
  8. இப்போது இந்த கலவையை ஆறவைத்து, மொத்தமாக மிக்ஸியின் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  9. மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதேபோல் வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை நன்றாக வதக்கவும்.
  10. வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்டை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும்.
  11. அதன்பிறகு, சிறிதளவும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறியபின், கழுவி வைத்துள்ள அரைக்கிலோ சிக்கனை 5 மற்றும் 6 முறை கிளறவும்.
  12. இதனை தொடர்ந்து, தனி மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலா போன்றவைகளை சேர்க்கவும்.
  13. இறுதியாக ஒருமுறை உப்பு அளவு சரியாக இருக்கிறதா என்பதை சோதித்து பாருங்கள். அப்படி இல்லையென்றால், சுவைக்கு ஏற்ப சிறிது உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.
  14. பாத்திரத்தில் போட்ட சிக்கன் முக்கால் பதம் வெந்ததும், அரைத்து தனியாக எடுத்து வைத்துள்ள புளிச்சக்கீரை கலவை சேர்க்கரவும். தண்ணீர் அளவை பார்த்து ஊற்றுங்கள். ஏனென்றால், சிக்கனில் இருந்து சிறிது தண்ணீர் வெளியேறும்,
  15. இப்போது, நன்கு கொதித்து சிக்கனும் கீரையும் ஒன்றோடு ஒன்று சேரும். அவ்வளவுதான் சுவையான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன் ரெடி.
  16. இந்த கோங்குரா சிக்கனை சப்பாத்தி, தோசை, புரோட்டா மற்றும் சோறுடன் சேர்த்து சுவைக்கலாம்.

ALSO READ: Food Recipe: கீரை கொண்டு சாம்பார், தயிர் குழம்பு… வித்தியாசமான முறையில் இப்படி செய்து அசத்துங்க!

பின்குறிப்பு:

புளிச்சக்கீரையில் இயற்கையாகவே புளிப்பு தன்மை அதிகமாக இருக்கும். எனவே, சிக்கனுடன் தயிர், எலுமிச்சை, தக்காளி போன்றவற்றை சேர்க்க வேண்டாம். உங்களுக்கு கொத்தமல்லியின் சுவையும், நறுமணம் பிடிக்கும் என்றால் பொடி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை கடைசியாக சேர்க்கலாம். இது கூடுதல் சுவையை கொடுக்கும்.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?