5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Food Recipe: ஆரோக்கியம் தரும் அரைக்கீரை பக்கோடா.. அரை மணிநேரத்தில் செய்வது எப்படி..?

Arai Keerai Pakoda: குறைந்தது வாரத்திற்கு ஒருமுறை கீரை போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நமக்கு நன்மை தரும். எனவே, கீரைகளை எப்போதும் புறக்கணிக்காதீர்கள். இவை நம் உடலுக்கு தரும் நன்மைகள் ஏராளம். அந்தவகையில், இன்று அரைக்கீரை பக்கோடா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

Food Recipe: ஆரோக்கியம் தரும் அரைக்கீரை பக்கோடா.. அரை மணிநேரத்தில் செய்வது எப்படி..?
அரைக்கீரை பக்கோடா (Image: Freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 29 Nov 2024 12:09 PM

நாம் கவனக்குறைவாக எடுத்துக்கொள்ளும் கீரை வகைகள் பல்வேறு சத்துக்களை தனக்குள் அடக்கி வைத்துள்ளது. நவீன வாழ்க்கை முறையில் கீரைகளை மறந்துவிட்டோம் என்றே சொல்லலாம். இந்தநிலையில், குறைந்தது வாரத்திற்கு ஒருமுறை கீரை போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நமக்கு நன்மை தரும். எனவே, கீரைகளை எப்போதும் புறக்கணிக்காதீர்கள். இவை நம் உடலுக்கு தரும் நன்மைகள் ஏராளம். அந்தவகையில், இன்று கீரைகளை கொண்டு நாம் எளிதாக செய்யக்கூடிய இரண்டு சூப்பரான டிஷ்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Food Recipe: டாப் டக்கர் சூப்பர் டிஷ்! கொத்தமல்லி தோசை, சிங்கப்பூர் ஃப்ரைடு இட்லி செய்வது எப்படி?

அரைக்கீரை பக்கோடா

அரைக்கீரை பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்:

  • அரைக்கீரை – ஒரு கட்டு
  • அரிசி மாவு – 100 கிராம்
  • கடலை மாவு – 300 கிராம்
  • சமையல் சோடா – ஒரு ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 2
  • டால்டா – ஒரு டேபிள்ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • மிளகாய்த்தூள் – 1/2 டீ ஸ்பூன்
  • சீரகத்தூள் – 2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லித்தழை – சிறிதளவு
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்வது எப்படி..?

  1. கடைகளில் வாங்கிய அரை கீரையை மண் இல்லாதவாறு தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. தண்ணீரை நன்றாக உதறிய பின் கீரையை பொடி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்
  3. அடுத்ததாக, எடுத்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை ஒரே அளவில் இருக்குமாறு பொடி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
  4. இப்போது, சிறிதளவு டால்டாவை உருக செய்து, ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி இதனுடன் கடலை மாவு, அரிசி மாவைச் சேர்த்து  நன்றாக பிசைய தொடங்கவும்.
  5. தொடர்ந்து, தேவையான அளவில் எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  6. தேவையான அளவில் தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசையவும்.
  7. அடுப்பை ஆன் செய்து போண்டா வறுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும்,  மாவை பக்கோடா சைஸில் கைகளால் கிள்ளி அடுப்பில் போடுங்கள். தீயை மீடியமாக வைத்து பக்கோடாக்கள் வெந்ததும் பொன்னிறமாக எடுத்தால், சுவையான மற்றும் ஆரோக்கியமான அரைக்கீரை பக்கோடா ரெடி.

பாலக்கீரை சீஸ் பால்ஸ்

பாலக்கீரை சீஸ் பால்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:

  • பாலக்கீரை – 1 கட்டு
  • பனீர் – 30 முதல் 50 கிராம்
  • சீஸ் – 50 கிராம்
  • மைதா மாவு – 10 கிராம்
  • கார்ன்ஃப்ளார் – 20 கிராம்
  • மிளகாய்த்தூள் – காரத்திற்கு ஏற்ப
  • சீரகத்தூள் – 2 ஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு

ALSO READ: Food Recipe: சூப்பர் ஃபுட் சண்டே! முட்டை 85, முட்டை பணியாரம் செய்வது எப்படி?

செய்வது எப்படி..?

  1. கடைகளில் வாங்கிய பாலக்கீரையை எடுத்து மண் மற்றும் தூசி இல்லாதவாரு தண்ணீரில் நன்கு சுத்தம் செய்யவும்.
  2. அடுத்ததாக கழுவி வைத்துள்ள பாலக்கீரையை தண்ணீர் இன்றி நன்றாக உதறி பொடி பொடியாக வெட்டி கொள்ளவும்.
  3. அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், மைதா மாவு,  சீஸ், பனீர்,  சீரகத்தூள், மிளகாய்த்தூள், நறுக்கிய கீரை போன்றவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  4. மாவில் பிசையும்போது சீஸ் மற்றும் பனீரை துருவிக்கொண்டால் பிசைந்தால் எளிதாக இருக்கும்.
  5. சீஸ்களில் தேவையான அளவு உப்பு இருக்கும் என்பதால், தனியாக உப்பு சேர்க்க தேவையில்லை. உங்களுக்கு உப்பு குறைவாக இருக்கிறது என்று தோன்றினால், சிறிதளவு சேர்த்து கொள்ளலாம்.
  6. உருண்டை பிசையும் நேரத்தில் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக பிசைவது நல்லது.
  7. இப்போது மாவு கலவையை கைகளில் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, அதை கார்ன்ஃப்ளாரில் ஒரு முறை புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். அவ்வளவுதான் இதை தக்காளி சாஸூடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
  8.  (குறிப்பு: மாவு பிசைந்தவுடனே எண்ணெயில் பொரித்துவிடுவது நல்லது. நேரம் எடுத்தால்சீஸ் உருகிவிடும் வாய்ப்பு அதிகம். முதலில் எண்ணெய் சூடானதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து விடுங்கள். இல்லையென்றால், பால்ஸ் கருகும் வாய்ப்பு அதிகம். பால்ஸ் சிவந்ததும் எடுத்தால் சுவை சூப்பராக இருக்கும்.)

Latest News