5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

New Year Recipe: புத்தாண்டு கொண்டாட்டம்.. குட்டநாடன் மீன் குழம்பு செய்து அசத்துங்க!

Kuttanadan Fish Curry: பண்டிகை காலங்களில் ஆடு, கோழி ஆகியவற்றை சமைத்து போரடித்து விட்டதா? இந்த புத்தாண்டுக்கு மீன் வைத்து புதியதொரு டிஷ் செய்து பாருங்கள். காரசாரமான கமகமக்கும் கேரள ஸ்டைல் குட்டநாடன் மீன் குழம்பை இந்த பண்டிகைக்கு செய்து அசத்துங்கள்

New Year Recipe: புத்தாண்டு கொண்டாட்டம்.. குட்டநாடன் மீன் குழம்பு செய்து அசத்துங்க!
குட்டநாடன் மீன் குழம்பு (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 17 Dec 2024 06:31 AM

ஆந்திரா உணவு வகைகளைப் போல சில கேரளா உணவு வகைகளும் காரசாரமாக இருக்கும். அதிலும் குறிப்பாக கேரளா மீன் குழம்பு, கேரளா பீப் ஆகியவை மிகவும் பிரபலமானது. அதில் குட்டநாடன் மீன் குழம்பு மிகவும் புகழ்பெற்ற ஒரு கேரள உணவாகும். இதில் குடம்புளி சேர்க்கப்படுவதால் காரமாகவும் ருசியாகவும் இருக்கும்.இந்த புத்தாண்டுக்கு குட்டநாடன் மீன் குழம்பு வைத்து உங்கள்‌ அன்பானவர்களை அசத்துங்கள்! குட்டநாடன் மீன் குழம்பு எப்படி வைப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருள்கள்:

மீன் ஒரு கிலோ, புளி‌ (குடம்புளி) 4 துண்டுகள், தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை சிறிதளவு, நறுக்கிய சின்ன வெங்காயம் 10, நறுக்கிய பூண்டு 7, நறுக்கிய இஞ்சி 1, உப்பு தேவைக்கேற்ப, நறுக்கிய பச்சை மிளகாய் 2, காஷ்மீரி மிளகாய் தூள் 2 டேபிள் ஸ்பூன், மல்லித்தூள் ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்

Also Read: Christmas Mutton Recipe: இட்லி ஆட்டுக்கால் குழம்பு காம்போ… கமகம குழம்பு செய்வது எப்படி?

செய்முறை:

முதலில் மீனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் புளியை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும். கடாய்க்கு பதில் மண்சட்டியில் செய்தால் அதன் ருசி இன்னும் அதிகரிக்கும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம் ஆகியவை சேர்த்து பத்து நொடிகள் தாளிக்க வேண்டும். பிறகு கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

இது வதங்கும் நேரத்தில் மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த்தூள் ஆகியவற்றை நான்கு டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக செய்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை கடாயில் ஊற்றி குறைவான தீயில் எண்ணெய் பிரியும் வரை கிளரி கொடுக்க வேண்டும்.

பிறகு ஊற வைத்த புளியை நன்றாக பிசைந்து அந்த தண்ணீரை கடாயில் ஊற்ற வேண்டும். புளிப்புச் சுவை குறைவாக தேவைப்படுபவர்கள் அரை கப் தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

Also Read: Christmas chicken Recipes: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்.. சிக்கனை வைத்து இந்த ரெசிபி ட்ரை பண்ணுங்க!

பின் அதில் கழுவி வைத்திருக்கும் மீன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் 20 நிமிடம்  வரைநன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்பு கடாயை அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு 30 நிமிடங்கள் மூடி வைத்து பின் பரிமாறினால் சுவையான கமகமக்கும் குட்டநாடன் மீன் குழம்பு தயார்

Latest News