5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ருசி மட்டுமல்ல.. ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் மாம்பழ ஜூஸ்!

Mango Juice Recipe : தித்திக்கும் மாம்பழ ஜூஸ் எப்படி செய்வது என்று இப்பதிவில் பார்ப்போம்.

ருசி மட்டுமல்ல.. ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் மாம்பழ ஜூஸ்!
மாம்பழம்
Follow Us
tamil-tv9
Tamil TV9 | Updated On: 10 May 2024 13:45 PM

அடிக்கிற இந்த வெயிலுக்கு ஜில்லுன்னு எதாவது குடிச்சா நல்லாருக்கும் என்றுதான் அடிக்கடி தோன்றும். சாப்பாடா! சுத்தமா சாப்பிடவே பிடிக்கவில்லை, தாகம்தான் அதிகமாக இருக்கிறது என்ற பதிலைத்தான் இப்பொழுது நிறையபேரிடம் கேட்டிருப்போம்.

அப்படி சொல்கிறவர்களுக்கு நாங்கள் சொல்வதைப் போல குளுகுளுவென ஒரு மாம்பழ ஜூஸை போட்டு நீட்டுங்கள், மனமும் வயிறும் நிறைந்து சந்தோசத்தை அள்ளித்தருவார்கள்.

மாம்பழ ஜூஸ்

தேவையான பொருட்கள்:

மாம்பழம் – 7லிருந்து 8 வரை
சர்க்கரை – தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு

செய்முறை:

  1. மாம்பழத்தை நன்கு கழுவி தோலை நீக்கி, சதையை மட்டும் தனியாக எடுத்துவைத்துக் கொள்ளுங்கள்.
  2. பிறகு ஒரு மிக்சர் ஜாரில் எடுத்துவைத்திருக்கும் மாம்பழச் சதை, சர்க்கரை, ஐஸ்கட்டி மற்றும் தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  3. கடைசியாக ஜூஸை டம்ளருக்கு மாற்றி ஹாயாக குளுகுளுவென்று ஆற அமர ரசித்துப் பருகவும்.

பயன்கள்

பொட்டாசியம் நார்ச்சத்து நிறைந்த மாம்பழத்தை சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம் சீராகும். நரம்புத் தளர்வை நீக்கி நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். அதிக வெப்பத்தை உண்டாக்கும் பழமாதலால் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மைகொண்டது என சில ஆய்வுகள் கூறுகின்றன.

Also Read : தோல் பராமரிப்பு: சருமத்தை பாதுகாக்கும் இயற்கை வழிகள்

Latest News