ஆரோக்கியமான சிறுதானிய தோசையை இப்படி செய்து பாருங்க! - Tamil News | | TV9 Tamil

ஆரோக்கியமான சிறுதானிய தோசையை இப்படி செய்து பாருங்க!

Updated On: 

13 May 2024 16:35 PM

ஆரோக்கியமான சிறுதானிய தோசை எப்படி செய்வது என்நு பார்க்கலாம்.

1 / 6காலை

காலை உணவு என்றாலே பெரும்பாலானார் வீடுகளில் இட்லி, தோசை, உப்மா தான் பரிமாறப்படுகிறது. இட்லி, தோசைகளில் கார்போஹைட்ரைடு தான் நிறைந்துள்ளது. எனவே, வழக்கமான நாம் சாப்பிடும் தோசையை ஊட்டச்சத்து நிறைந்த தோசையாக தயாரிக்க முடியும்.

2 / 6

கேழ்வரகு, பாசு பயரை கொண்டு எப்படி சுவையான தோசை செய்வது என்று தான் இப்போது பார்க்கலாம். இதற்கு ஒரு பாசி பயிறு, ஒரு கப் கேழ்வரகு, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் வெந்தயம், தேவையான அளவு உப்பு, காய்ந்த மிளகாய் இரண்டு, கால் கப் தேங்காய் துருவல், ஒரு கொத்து கறிவேப்பிலையை எடுத்து கொள்ள வேண்டும்

3 / 6

முதலில், ஒரு கேழ்வரகு, ஒரு கப் பாசி பயறு ஆகியவற்றை நன்கு கழுவி இரவு முழுவதும் ஒரு பாத்தில் ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் காலை இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும் .

4 / 6

இதனுடன் துருவிய கால் கப் தேங்காய், அரை ஸ்பூன் சீரகம், இரண்டு காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு, ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒரு கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்ந்து மையாக அரைத்து கொள்ள வேண்டும்.

5 / 6

இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும். இந்த மாவு தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். தேவைப்பால் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது, இதை வழக்கம் போல் தோசையாக ஊற்றி அதன் மீது சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

6 / 6

ஒரு நிமிடம் மூடி போட் வேக வைத்தால் சுவையான சிறுதானிய தோனை ரெடி. இந்த சிறுதானிய தோசையுடன் தேங்காய் சட்னி, கார சட்னியை வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். எனவே, தினமும் அரசி மாவு தோசை சாப்பிடுவதற்கு பதிலாக இதுபோன்று சிறுதானிய தோசையை சாப்பிடலாம். இது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. குறிப்பாக, உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இது நல்ல சாய்ஸ்.

Follow Us On
இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version