Soup Recipe: மழைக்காலத்தில் இதம் தரும் சூப் ரெசிபி.. நண்டு, காளான் வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி..?

Healthy Foods: மழைக்காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது நமக்கும், நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மையை தரும். அந்தவகையில், இன்று பருவ மழை காலத்தில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள சுவையான, ஆரோக்கியமான சூப் செய்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம். இன்று காளான் வாழைத்தண்டு சூப், நண்டு சூப் செய்வதை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

Soup Recipe: மழைக்காலத்தில் இதம் தரும் சூப் ரெசிபி.. நண்டு, காளான் வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி..?

சூப் ரெசிபி (Image: freepik)

Published: 

12 Nov 2024 11:34 AM

கோடைக்காலம் முடிந்ததில் இருந்து பருவ மழை எப்போது பெய்கிறது என்று யாராலும் கணிக்க முடியவில்லை. பகல் முழுவதும் வெயில் வெளுத்து வாங்கும் சூழலில், இரவு முழுவதும் மழை அடித்து வெளுத்து வாங்குகிறது. இந்த திடீர் திடீர் கால நிலை மாற்றத்தால் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட தொடங்குகிறது. இதனால், இந்த பருவ நிலை மாற்றத்தின்போது உடல் நிலையிலும், ஆரோக்கியத்திலும் பராமரிப்பது முக்கியம். இதுபோன்ற சூழ்நிலையில், ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது நமக்கும், நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மையை தரும். அந்தவகையில், இன்று பருவ மழை காலத்தில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள சுவையான, ஆரோக்கியமான சூப் செய்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம். இன்று காளான் வாழைத்தண்டு சூப், நண்டு சூப் செய்வதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ: Food Recipe: ஆந்திரா ஸ்டைலில் கோங்குரா சிக்கன்.. செம டேஸ்டாக செய்வது எப்படி..?

காளான் வாழைத்தண்டு சூப்

காளான் வாழைத்தண்டு சூப் தேவையான பொருட்கள்:

  • வாழைத்தண்டு – 1 கப் (பொடி பொடியாக நறுக்கிய சிறு சிறு துண்டுகள்)
  • காளான் – 1 கப் (பொடி பொடியாக நறுக்கிய சிறு சிறு துண்டுகள்)
  • வெங்காயம் – 10 (சின்ன வெங்காயம்)
  • இஞ்சி – சிறு துண்டு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • கான்பிளார் மாவு – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் -1
  • வெள்ளைப்பூண்டு – 4
  • மிளகு மற்றும் சீரகப்பொடி – ஒரு தேக்கரண்டி
  • மல்லித்தழை – கைப்பிடி அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு
  • மல்லி பொடி – 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலா பொடி- 1/2 டீஸ்பூன்

காளான் வாழைத்தண்டு செய்வது எப்படி..?

  1. ஒரு உரல் அல்லது மிக்ஸி ஜாரில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் போன்றவற்றை போட்டு கொரகொரவென அரைத்து கொள்ளவும்.
  2. இப்போது, அடுப்பை ஆன் செய்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாகும் வரை காத்திருக்கவும்.
  3. எண்ணெய் சூடானதும், எடுத்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  4. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் கொரகொரப்பான கலவையை சேர்த்து சிறிது வதக்கவும்.
  5. இஞ்சி, பூண்டு விழுதின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதங்கியதும், பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள காளான் மற்றும் வாழைத்தண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  6. இப்போது, 3 முதல் 5 நிமிடங்கள் வதங்கியதும் சிறிது கரம் மசாலா பொடி, மல்லி பொடி, சீரகப்பொடி ஆகியவற்றை அரை டீஸ்பூன் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  7. அதன்பின், தண்ணீரை தேவையாள அளவை ஊற்றி, நன்றாக கொதிக்க விடவும்.
  8. தண்ணீர் ஊற்றியபின் சூப்பிற்கும், உங்களுக்கு தேவையான உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.
  9. தண்ணீர் கலவையுடன் கலந்தபின் ஒரு சோள மாவு என்று சொல்லப்படும் கான்பிளார் மாவு சிறிதளவு தண்ணீருடன் கலந்து சேர்க்கவும். கெட்டியான சூப் குடிக்க பிடிக்கும் நபர்களுக்கு இது நிச்சயம் பிடிக்கும்.
  10. கடைசியாக சூப் தயாரானதும் அரை முதல் ஒரு ஸ்பூன் அளவிற்கு மிளகு மற்றும் சீரகத்தூள் சேர்த்து அடுப்பை ஆப் செய்யும்.
  11. உங்களுக்கு கொத்தமல்லி தழையின் சுவை பிடிக்கும் என்றால், பொடி பொடியாக நறுக்கிய மல்லித்தழைகளை தேவையான அளவில் தூவினால் சுவையான காளான், வாழைத்தண்டு சூப் சூப்பராக ரெடி.

ALSO READ: Food Recipe: இட்லி, தோசை போர் அடித்துவிட்டதா..? சுவையான கார பணியாரம் செய்து சாப்பிடுங்க..!

நண்டு சூப்:

நண்டு சூப் செய்ய தேவையான பொருட்கள்:

  • நண்டு – 2
  • சின்ன வெங்காயம் – 10
  • பூண்டு- 6 பல்
  • இஞ்சி – 1 துண்டு
  • மிளகு – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • தக்காளி – 1
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • மிளகாய் – 1
  • மல்லி தூள் – 1/2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

நண்டு சூப் செய்வது எப்படி..?

  1. ஒரு மிக்ஸி ஜார் அல்லது உரலில் மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்
  2. இப்போது, எடுத்து வைத்துள்ள 2 நண்டுகளின் கால்களையும் சுத்தம் செய்து சேர்த்து அதனை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. இப்போது ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அரைத்து வைத்துள்ள மிளகு, சீரக கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. மஞ்சள் தூள், மல்லி தூள், பச்சை மிளகாய், உப்பு என அனைத்தையும் சேர்த்து கொதிக்க விடவும்.
  5. இப்போது, தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி அந்த கலவையில் சேர்க்கவும்.
  6. அதன்பின், சுத்தமாக கழுவி வைத்துள்ள நண்டு சேர்த்து தொடர்ந்து கிளறவும்.
  7. அரைத்து வைத்துள்ள நண்டு கால்களை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று விசில் விடவும்.
  8. அவ்வளவுதான், கடைசியாக கொத்தமல்லி தழைகளை சேர்த்து பரிமாறினால் சுவையான நண்டு சூப் ரெடி.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?