Food Recipe: மழைக்கு இதமாய் ஸ்நாக்ஸ் சாப்பிட ஆசையா? சூப்பரான காளான் சமோசா ரெசிபி இதோ!
Mushroom Samosa: காளானில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை நுகர்வு பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்து போராடவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக இயங்கவும் உதவி செய்யும். அந்தவகையில், இன்று காளானை கொண்டு தயாரிக்கப்படும் சமோசா ரெசிபியை தெரிந்து கொள்வோம்.
ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு காய்கறி கிடைக்கிறது என்றாலும், காளான் அதிகளவில் மழைக்காலத்திலேயே வளரும். காளானில் அதிக அளவு நார்ச்சத்து, செலினியம், பொட்டாசியம், வைட்டமின் டி மற்றும் புரதம் உள்ளது. இவை உடலை பலப்படுத்தி, நோய்களை எதிர்த்து போராடும் திறனை வழங்கும். காளானில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை நுகர்வு பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்து போராடவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக இயங்கவும் உதவி செய்யும். அந்தவகையில், இன்று காளானை கொண்டு தயாரிக்கப்படும் சமோசா ரெசிபியை தெரிந்து கொள்வோம்.
காளான் சமோசா:
காளான் சமோசா செய்ய தேவையான பொருட்கள்:
- மைதா மாவு – 1 1/2 கப்
- எண்ணெய் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
மசாலாக்கு தேவையான பொருட்கள்:
- பெரிய வெங்காயம் – 1 (பொடி பொடியாக நறுக்கியது)
- காளான் – 250 கிராம் (பொடி பொடியாக வெட்டி கொள்ளவும்)
- பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
- கொத்தமல்லி – ஒரு கை அளவு (பொடி பொடியாக வெட்டி கொள்ளவும்)
இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு - கரம் மசாலா – 1 டீஸ்பூன்
- சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- எலுமிச்சை சாறு – 250 மிலி
காளான் சமோசா செய்வது எப்படி..?
- முதலில் வாங்கிய காளானை நன்றாக மண் இல்லாதவாறு கழுவி சுத்தம் செய்து, பொடி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- இப்போது, ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள மைதா மாவு, தேவையான அளவில் உப்பு சேர்த்து, எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
- அடுப்பை ஆன் செய்து கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அஹில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
- அதன்பிறகு, வெங்காயத்துடன் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கி வைத்துள்ள காளான், பச்சை மிளகாய், சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
- அதனுடன் உங்களுக்கு தேவையான அளவில் உப்பு சேர்த்து, காளான் வதங்கும் வரை நன்றாக கிளறவும்.
- காளான் வெந்ததும் பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை பழ சாற்றை ஊற்றி கிளறியபின், பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைத்து கொள்ளவும்.
- பிசைந்து வைத்துள்ள மாவினை சாமோசாவிற்கு தேவையான அளவில் உருண்டையாக பிடித்து கொள்ளவும்.
- அந்த உருண்டையை வட்டமாக தேய்த்து, முக்கோண வடிவில் ஒரு டீஸ்பூன் காளான் மசாலா கலவையை வைத்து சமோசா போல் மடித்து கொள்ளவும்.
- இறுதியாக பெரிய கடாயை அடுப்பில் வைத்து சமோசா பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தயாராக வைத்துள்ள சமோசாவை போட்டு வறுத்து எடுக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான காளான் சமோசா ரெடி.
ALSO READ: Food Recipe: ஈசியான சூப்பர் டிஷ்! மீன் பிரியாணி, மட்டன் கீமா புலாவ் செய்வது எப்படி?
சாக்லேட் சமோசா
சாக்லேட் சமோசா செய்ய தேவையான பொருட்கள்:
- மைதா மாவு – 1 கப்
- துருவிய சாக்லேட் – 1/2 கப்
- சாக்லேட் சிரப் – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- மிக்ஸ்டு நட்ஸ் – 1/2 கப் (பொடியாக நறுக்கிய கொள்ளவும்)
- எண்ணெய் – தேவையான அளவு
சாக்லேட் சமோசா செய்வது எப்படி..?
- காளான் சமோசாவிற்கு செய்தது போல் மைதா மாவில் உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து தனியாக எடுத்து கொள்ளவும்.
- அடுத்ததாக, உன்னொரு பாத்திரத்தில் வெட்டி வைத்துள்ள நட்ஸ், துருவிய சாக்லேட் ஆகியவற்றை கலந்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
- பிசைந்து வைத்துள்ள மைதா கலவையை வழக்கம்போல் முக்கோண வடிவில் வெட்டி வைத்து கொள்ளவும்
- அதனுடன் தயார் செய்து வைத்துள்ள சாக்லேட் கலவை உள்ளே வைத்து, நன்றாக மூடி, எண்ணெயில் நன்றாகவும், கருகாமல் பொன்னிறமாக எடுக்கவும்.
- அதன்பிறகு, இறக்கி வைத்துள்ள சமோசா மீது சாக்லேட் சிரப் ஊற்றி பரிமாறினால் சுவை சூப்பராக இருக்கும்.
- குறிப்பு: சமோசா கலவை நன்றாக மூடி இருக்கிறதா என்பதை சோதனை செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால், ஓட்டை வழியாக சாக்லேட் உருகி வெளியே வந்துவிடும்.