Food Recipe: சண்டே ஸ்பெஷல் ரெசிபி! மட்டன் 65, மட்டன் எலும்பு ரசம் செய்வது எப்படி..?
Mutton 65: நீண்ட நாட்களுக்கு பிறகு மட்டன் சாப்பிடும் எண்ணம் இருந்தால், இன்று மட்டன் 65 மற்றும் மட்டன் எலும்பு ரசம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு வீட்டுக்கு விருந்தாளிகளை அழைத்திருந்தால், இந்த ரெசிபியை முயற்சிக்கவும்.
நீங்கள் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களாக இருந்தால், நீண்ட நாட்களுக்கு பிறகு மட்டன் சாப்பிடும் எண்ணம் இருந்தால், இன்று மட்டன் 65 மற்றும் மட்டன் எலும்பு ரசம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த செய்முறையில் மட்டனுடன் தக்காளி, வெங்காயம் மற்றும் ஏராளமான மசாலா பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மட்டன் ரெசிபி சமைக்கும் முறையில் அதன் மசாலாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நீங்கள் அதிக விரும்பிகளாக இருந்தால், இந்த செய்முறை உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். உங்களுக்கு வீட்டுக்கு விருந்தாளிகளை அழைத்திருந்தால், இந்த ரெசிபியை முயற்சிக்கவும். வாருங்கள் இவற்றை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ALSO READ: Food Recipe: ஆரோக்கியம் தரும் அரைக்கீரை பக்கோடா.. அரை மணிநேரத்தில் செய்வது எப்படி..?
மட்டன் 65
மட்டன் 65 செய்ய தேவையான பொருட்கள்:
- எலும்பு இல்லாத மட்டன் – அரை கிலோ
- கடலை மாவு – 5 டேபிள் ஸ்பூன்
- கார்ன்ஃபிளார் மாவு – 4 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்
- சோம்பு பொடி – அரை டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – சிறிதளவு
- தனி மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
- சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
- எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
- கடைகளில் வாங்கி வந்த மட்டன் துண்டுகளை தண்ணீரில் நன்றாகக் கழுவி, குக்கரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை மணிநேரம் வேகவைக்கவும்.
- குக்கரில் ஆவி முழுவதும் வெளியேறியதும் தண்ணீரை ஒரு கிளாஸில் வடிக்கட்டி பெப்பர் தூள் சேர்த்து சூப்பாக குடிக்கலாவும்.
- அடுத்ததாக, வேகவைத்த கறியை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில், கார்ன்ஃபிளார் மாவு, கடலை மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோம்பு பொடி , சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து கெட்டியாக கலக்கி எடுத்து கொள்ளவும்.
- இப்போது, அடுப்பை ஆன் செய்து வாணலி சூடானதும் பொரிக்க தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
- எண்ணெய் சூடானதும் அடுப்பை மீடியமாக வைத்து மட்டன் போட்டு கலக்கி வைத்துள்ள கலவையை தனித்தனியாக போடவும்.
- மாவு கலவை நன்றாக மொறுமொறுப்பாகும்வரை காத்திருந்து வெளியே எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மட்டன் 65 ரெடி.
- இந்த மட்டன் 65 வெங்காயம் மற்றும் லெமன் துண்டுகளுடன் உங்களது விருந்தாளிகளுக்கு பரிமாறியும், நீங்களும் சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருங்கள்.
- (குறிப்பு: மட்டனை அதிக நேரம் பொரித்தால் கல் அல்லது ரப்பர்போல் ஆகிவிடும். எனவே, அதிக நேரம் வேகவைக்கமால் சிறிதுநேரத்தில் எடுப்பது நல்லது. மேலும், அதிக நேரம் மட்டன் வேகும்போது, அதிக எண்ணெயையும் உறிஞ்சும்.)
மட்டன் எலும்பு ரசம்
மட்டன் எலும்பு ரசம் செய்ய தேவையான பொருட்கள்:
- மட்டன் எலும்பு – அரை கிலோ
- சின்ன வெங்காயம் – 10
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 11 ஸ்பூன்
- எண்ணெய் – சிறிதளவு
- மிளகு – 1 ½ ஸ்பூன்
- சீரகம் – அரை ஸ்பூன்
- பூண்டு – 4
- மல்லி – 1 ஸ்பூன்
- கருவேப்பிலை – 1 கொத்து
- தக்காளி – 1
- மஞ்சள் பொடி – அரை ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
ALSO READ: கிறிஸ்துமஸ் மார்பிள் கேக் வீட்டிலேயே செய்யலாம்… இதோ ரெசிபி!
மட்டன் எலும்பு ரசம் செய்வது எப்படி..?
- முதலில் அடுப்பை ஆன் செய்து, அதில் குக்கரை வைக்கவும்.
- குக்கர் சூடானதும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து மேலே குறிப்பிட்டுள்ள அளவிலான சீரகம், மிளகு, பூண்டு, கருவேப்பிலை, முழு மல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஒரு தட்டில் தனியாக எடுத்து கொள்ளவும்.
- இப்போது, அதே குக்கரில் உள்ள எண்ணெய்யில் இரண்டாக கீறிய பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
- தொடர்ந்து பிசைந்து தக்காளி போட்டு மசிந்ததும், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
- கடையில் வாங்கி நன்றாக கழுவி எடுத்து வைத்துள்ள ஆட்டின் எலும்பு மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- அடுத்ததாக, சிறிதளவு மஞ்சள் பொடி ஒரு கிளறு கிளறிய பின், தேவையான அளவு தண்ணீரை சேர்த்து குக்கரை மூடவும்.
- குக்கரில் தொடர்ந்து 7 விசில் விட்டு ஆஃப் செய்யவும்.
- குக்கரில் ஆட்டு எலும்பு வேகும் நேரத்திற்குள் மிளகு, சீரகம் கலவையை மிக்ஸியில் அரைத்துகொள்ளவும்.
- விசில் அடங்கியதும் குக்கரை திறந்து அடிப்பில் வைத்து மிளகு, சீரக கலவையை சேர்த்து நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்தால், மழைக்கு இதமாகவும், சளிக்கு தீர்வை தரும் மட்டன் எலும்பு ரசம் ரெடி.