5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cooking Tips: தோசை கல்லில் தோசை ஒட்டுதா..? கவலை வேண்டாம்! இதை ட்ரை பண்ணுங்க!

Dosa: முறுகலாக தோசை வர மாவு எப்படி காரணமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு கல்லும் முறுகலான தோசைக்கு பழகி இருக்க வேண்டும். அப்படி பழகவில்லை எனில், நாம் எவ்வளவு நைஸாக தோசை ஊற்றினாலும், அது தோசை கல்லில் ஒட்டிக்கொண்டு ஒழுங்காக வராது. இந்த சூழலில் தோசை கல்லில் தோசை ஒட்டாமல் முறுகலாக வர இதோ சில டிப்ஸ்கள்..

Cooking Tips: தோசை கல்லில் தோசை ஒட்டுதா..? கவலை வேண்டாம்! இதை ட்ரை பண்ணுங்க!
கோப்பு புகைப்படம்
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 25 Jul 2024 10:33 AM

முறுகலான தோசை: நாட்டில் பெரும்பாலானோருக்கு தோசை என்றால் அவ்வளவு பிரியம். கடைகளில் சென்று சாப்பிட என்ன வேண்டும் என்று கேட்டால் கூட தோசை என்றே பதில் வரும். கல் தோசை, மசாலா தோசை என எத்தனை வகை இருந்தாலும் முறுகலான ஒரு நைஸ் தோசைதான் எல்லாருடைய ஃபேவரைட். கடைகளில் சுடும் தோசை போல் வீடுகளில் நாம் சுடும் தோசை முறுகலாக வரவில்லை என கவலை படுகின்றனர். அப்படி முறுகலாக தோசை வர மாவு எப்படி காரணமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு கல்லும் முறுகலான தோசைக்கு பழகி இருக்க வேண்டும். அப்படி பழகவில்லை எனில், நாம் எவ்வளவு நைஸாக தோசை ஊற்றினாலும், அது தோசை கல்லில் ஒட்டிக்கொண்டு ஒழுங்காக வராது. இந்த சூழலில் தோசை கல்லில் தோசை ஒட்டாமல் முறுகலாக வர இதோ சில டிப்ஸ்கள்..

Also read: Health tips: வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்.. இந்த பிரச்சனைகளை தரும்!

முதல் டிப்ஸ்:

முதலில் வெள்ளை நிற காட்டன் துணியை எடுத்துக்கொள்ளவும். அதில், ஒரு எலுமிச்சை சைசில் புளியை வைத்து மடித்து கொள்ளவும். அதன் பிறகு தோசை சுடுவதற்கு எந்த எண்ணெயை பயன்படுத்துவோ, அந்த எண்ணெயில் புளியுடன் மடித்து வைத்திருந்த துணியை முக்கி வைத்து கொள்ளவும். அதன்பிறகு தோசை கல்லை மிதமான சூட்டில் வைத்துகொண்டு, முக்கி வைத்திருந்த அந்த புளியுடன் கூடிய துணியை தோசை கல் முழுவதும் தேய்க்க வேண்டும்.

தொடர்ந்து, தேய்த்த அந்த எண்ணெய் காய்ந்தவுடன் சிறிதளவு பெரிய வெங்காயத்தை குறுக்கே வெட்டி, அதில் பாதியை தோசை கல் முழுவதும் தேய்க்க வேண்டும். இவற்றை எல்லாம் செய்து முடித்தவுடன் ஒரு கரண்டி மாவு எடுத்து தோசை கல்லில் மெதுவாக வட்டமாக ஊற்றியபின், சிறியதளவு எண்ணெயை மேலே தெளித்து விட வேண்டும். சுடு ஏற ஏற தோசை கல்லில் உள்ள தோசை மேலே தூக்கும். அதன்பிறகு தோசை கரண்டி மூலம் தோசை திருப்பி போட்டு வெந்தவுடன் எடுத்தால், கடை ஸ்டைலில் முறுகலான தோசை ரெடி.

இரண்டாவது டிப்ஸ்:

ஏற்கனவே தோசை கல்லில் ஒட்டி இருக்கும் பழைய தோசை மாவு ஒட்டியவற்றை சுரண்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் அடுப்பை எரியவிட்டு அதில் சிறிது நேரம் தோசை கல்லை சூடு ஏற்ற வேண்டும். தோசை கல் நன்றாக சூடானதும், அதில் பாதி கிளாஸ் அளவு தண்ணீரை தெளித்து விட வேண்டும். சூடு பறக்க பறக்க தண்ணீர் கொதிக்கும். அப்போது, ஒரு சுத்தமான துண்டை வைத்து தோசை கல் முழுவதும் அழுத்தி துடைக்க வேண்டும்.

தொடர்ந்து, வழக்கம்போல் தோசை கல் மீது எண்ணெயை முழுவதும் தேய்த்தபின், மீண்டும் தோசை கல் சூடானதும் மீண்டும் ஒரு கை அளவு தண்ணீரை கல்லின் மீது தெளித்து ஒரு துணியால் தேய்க்க வேண்டும். இப்போது தோசை மாவு எடுத்து உங்களுக்கு எப்படி தோசை வேண்டுமோ, அதுபோல் தோசை ஊற்றி எடுத்தால் தோசையானது தோசை கல்லில் ஒட்டாமல் சூப்பராக வரும்.

Also read: Turmeric: மஞ்சள் மகிமை.. வீட்டு கிச்சனில் இருக்கும் சூப்பர் மருந்து.. இவ்வளவு விஷயம் இருக்கா?

Latest News