Christmas Cake Recipe: நாக்கில் சுவையை நடனமாட செய்யும் ரவை கேக்.. கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக செய்வது எப்படி..?
Semolina Cake Recipe: கிறிஸ்துமஸ் முன்னிட்டு கடைகளில் வாங்கும் கேக்குகளை விட வீட்டிலேயே சுவையான கேக்குகளை செய்து அசத்தலாம். அந்தவகையில், இன்று விரைவாக ரவையில் எப்படி ஒரு கிறிஸ்துமஸ் கேக் செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
நீங்கள் கிறிஸ்துமஸ் பார்ட்டியை ஸ்பெஷலாகவும், சுவையாகவும் மாற்ற விரும்பினால், இந்த கிறிஸ்துமஸ் கேக் செய்முறை உங்களுக்கு பெரிதும் உதவும். ஒவ்வொரு ஆண்டு நீண்டநாள் காத்திருப்புக்கு பிறகு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தகைய நல்ல நாளில் குடும்பத்திருடன் அமர்ந்து சுவையான உணவுகளை சாப்பிடுவோம். அப்படி இருக்க, கடைகளில் வாங்கும் கேக்குகளை விட வீட்டிலேயே சுவையான கேக்குகளை செய்து அசத்தலாம். அந்தவகையில், இன்று விரைவாக ரவையில் எப்படி ஒரு கிறிஸ்துமஸ் கேக் செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
ALSO READ: New Year Recipe: புத்தாண்டு கொண்டாட்டம்.. குட்டநாடன் மீன் குழம்பு செய்து அசத்துங்க!
ரவை கேக்
ரவை கேக் செய்ய தேவையான பொருட்கள்:
- ரவை – 1 1/2 கப்
- பால் – 3/4 கப்
- நெய் அல்லது வெண்ணெய் – தேவையான அளவு
- தயிர் – 1/2 கப்
- சர்க்கரை – 3/4 கப்
- பேக்கிங் சோடா – 1/4 டீ ஸ்பூன்
- பேக்கிங் பவுடர் – 1/2 டீ ஸ்பூன்
- டூட்டி புரூட்டி – விரும்பிய அளவு
- உப்பு – சிறிதளவு
ALSO READ: Christmas Mutton Recipe: இட்லி ஆட்டுக்கால் குழம்பு காம்போ… கமகம குழம்பு செய்வது எப்படி?
ரவை கேக் செய்வது எப்படி..?
- முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் ரவை, நெய் அல்லது வெண்ணெய், தயிர், சர்க்கரை, பால், உப்பு ஆகியவற்றை மேலே குறிப்பிட்ட அளவில் கொட்டி நன்கு கலந்து கொள்ளவும்.
- இவை அனைத்தையும் நன்றாக கலந்தபின், 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை அப்படியே மூடி வைக்கவும்.
- தொடர்ந்து, ஒரு குக்கரை எடுத்து 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி, உள்ளே குக்கர் ஸ்டாண்ட் அல்லது ஒரு சிறிய பாத்திரை கவிழ்ந்து, ஊற்றிய நீரை கொதிக்க விடவும்.
- சுமார் 15 நிமிடங்கள் கடந்தபின், கலக்கி வைத்த ரவை கலவையில், இப்போது பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், டூட்டி-புரூட்டி கலந்து, நெய் அல்லது வெண்ணெய் தடவிய ட்ரேயில் சமமாக ஊற்றி குக்கருக்கு நடுவில் வைக்கவும்.
- ரவை கேக் தயாரிக்கும்போது விசில், கேஸ் கெட் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
- அதேநேரத்தில் குக்கருக்கு உள்ளே வைக்கப்பட்டிருக்கும் ட்ரே குக்கரின் பக்கவாட்டில் படாமல் பார்த்து கொள்ளுங்கள்.
- இப்போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் காத்திருந்து குக்கரைத் திறக்கவும்.
- ஒரு சுத்தமான ஸ்பூனின் பின்புறத்தை உள்ளே விட்டு ரவை ஒட்டாமல் வந்தால், அவ்வளவுதான் சுவையான ரவை கேக் ரெடி.
- இப்போது, மிகுந்த கவனத்துடன் ட்ரேவை வெளியே எடுத்து சூடு ஆறியதும் வேறு ஒரு சமதளமான தட்டில் மாற்றி குடும்பத்தினருடன் சுவைக்கலாம்.