Food Recipe: கீரை கொண்டு சாம்பார், தயிர் குழம்பு… வித்தியாசமான முறையில் இப்படி செய்து அசத்துங்க! - Tamil News | How to make sambar and curd gravy with spinach; Food Recipe in tamil | TV9 Tamil

Food Recipe: கீரை கொண்டு சாம்பார், தயிர் குழம்பு… வித்தியாசமான முறையில் இப்படி செய்து அசத்துங்க!

Spinach Sambar: கீரை உடலுக்கு தேவையான சத்துக்களை தருவது மட்டுமின்றி, அதிகப்படியான ஆற்றலை தருகிறது. அந்தவகையில், எல்லாருக்கும் பிடிக்கும் வகையிலும், விரும்பி சாப்பிடும் வகையில் கீரை சாம்பார் எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்து கொள்வோம். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

Food Recipe: கீரை கொண்டு சாம்பார், தயிர் குழம்பு... வித்தியாசமான முறையில் இப்படி செய்து அசத்துங்க!

கீரை சாம்பார் (Image: freepik)

Published: 

06 Nov 2024 12:42 PM

சிறுவயது முதல் கீரை வகைகளை கடைந்தும், பொரியலாக அடிக்கடி சாப்பிட்டு இருப்போம். ஆனால், தற்போது பெரும்பாலான வீடுகளில் கீரையை சமைக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது. இதனால், சிறியவர்கள் சிறுவயது முதல் கீரையை சேர்த்துக்கொள்ளாத காரணத்தினால் நோய் எதிர்ப்பு சக்தியையும், இரும்புச்சத்தையும் உடலுக்கு தேவையான அளவில் பெறுவது கிடையாது. இது அவர்களை பலவீனமடைய செய்யும். எந்தவகை கீரையாக இருந்தாலும் வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்வது மிக மிக முக்கியம்.

இது உடலுக்கு தேவையான சத்துக்களை தருவது மட்டுமின்றி, அதிகப்படியான ஆற்றலை தருகிறது. அந்தவகையில், எல்லாருக்கும் பிடிக்கும் வகையிலும், விரும்பி சாப்பிடும் வகையில் கீரை சாம்பார் எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்து கொள்வோம். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ALSO READ: Food Recipe: அரேபியன் ஸ்டைல் சிக்கன் மந்தி பிரியாணி.. வீட்டிலேயே செய்யக்கூடிய சிம்பிள் டிஷ்!

கீரை சாம்பார்

கீரை சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:

  • கீரை – 1 கப் (உங்களுக்கு எந்த கீரை கிடைக்கிறதோ பொடியாக நறுக்கு கொள்ளவும்)
  • துவரம் பருப்பு – 1/2 கப்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • சாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
  • வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • புளி – லெமன் சைஸ்

சாம்பார் தாளிக்க தேவையான பொருட்கள்:

  • எண்ணெய் – சிறிதளவு
  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – சிறிதளவு
  • சின்ன வெங்காயம் – 4 அல்லது 5
  • தக்காளி – 1 ( பொடி பொடியாக நறுக்கியது)

ALSO READ: Food Recipe: சுவையான மட்டன் கோலா உருண்டை.. இந்த ஸ்டைலில் குக் செய்து கலக்குங்க..!

கீரை சாம்பார் செய்வது எப்படி..?

  1. முதலில் கீரை சாம்பார் செய்ய எடுத்துவைத்துள்ள அரை கப் துவரம் பருப்பை நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்து கொள்ளவும்.
  2. தொடர்ந்து, கழுவி வைத்துள்ள துவரம் பருப்பை குக்கரில் போட்டு அத்துடன் 2 கப் தண்ணீரும், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக குழையவிட்டு வேகவைத்து எடுக்கவும்.
  3. அதன்பிறகு, லெமன் சைஸில் எடுத்துவைத்துள்ள புளியை தண்ணீரில் ஊற வைத்து நன்றாக கரைத்து எடுத்து வைக்கவும். புளித்தண்ணீர் 2 கப் அளவிற்கு இருக்கும் அளவிற்கு தயார் செய்து எடுத்து வைக்கவும்.
  4. இப்போது, ஒரு கடாயில் சிறிதளவு எண்ணை விட்டு, காய்ந்ததும் சிறிது கடுகு போடவும்.
  5. கடுகு நன்றாக பொரிந்து வெடித்து வந்ததும், அதில் சிறிதளவு வெந்தயம், பெருங்காயம் தூள் சிறுது சேர்க்கவும்
  6. பெருங்காயத் தூளின் பச்சை வாசனை போனதும் வெட்டி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு நன்றாக தாளிக்கவும்.
  7. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  8. தக்காளி வதங்கி மசிந்தவுடன் வேக வைத்த துவரம் பருப்பு சேர்த்து மீண்டும் நன்றாக கிளறவும்.
  9. இப்போது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  10. பருப்பு தண்ணீர் ஒரு கொதி வந்தவுடன், கரைத்து எடுத்து வைத்துள்ள புளித்தண்ணீரில் சாம்பாருக்கு தேவையான அளவில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
  11. இப்போது, இப்போது பருப்பு தண்ணீரில் புளி கரைசலை சேர்க்கவும். சில நிமிடங்களுக்கு பிறகு கொதி வந்தவுடன் அதில் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள கீரையை போட்டு கிளறவும்.
  12. அடுப்பை சிம்மில் வைத்து பாத்திரத்தில் மூடி வைத்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி கொள்ளுங்கள்.
  13. இப்போது, இறக்கி வைத்துள்ள கீரை சாம்பாரில் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியை சேர்த்தால் போது சுவையான கீரை சாம்பார் ரெடி.

கீரை தயிர் குழம்பு செய்வது எப்படி..?

  1. ஏதேனும் ஒரு கீரையை வாங்கி, நன்றாக கழுவியபின் பொடி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
  2. அதன்பிறகு, வெங்காயம், பச்சை பிளகாய், பூண்டு, இஞ்சி, தக்காளி எல்லாவற்றையும் பொடி பொடியாக நறுக்கவும்.
  3. இப்போது, ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  4. வெங்காயம், இஞ்சி சேர்த்து சிவக்க வதக்கி, தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
    5. கடைசியாக வெட்டி வைத்துள்ள கீரை சேர்த்து வதக்கியபின், சிறிது நேரம் கழித்து தயிர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்தால் கீரை தயிர் குழம்பு ரெடி.
குழந்தையை பொறுப்பான நபராக வளர்க்க எளிய டிப்ஸ்!
மன்னிப்பு கேட்கக்கூடாத 10 நிகழ்வுகள் என்னென்ன தெரியுமா?
கல்லீரல் பிரச்சனையா? இந்த அறிகுறிகளை கவனிங்க!
தேங்காயில் இருக்கும் மருத்துவ நன்மைகள்..