Food Recipe: காரசாரமான காரைக்குடி சிக்கன் வறுவல்.. எளிதாகவும், சூப்பராகவும் செய்வது எப்படி?

Karaikudi Chicken Roast: இன்று காரசாரமான காரைக்குடி சிக்கன் வறுவல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். இந்த சிக்கன் வறுவல் உங்களுக்கு தனி சுவையை தருவது மட்டுமின்றி, மீண்டும் மீண்டும் சுவைக்க ஆசையை தூண்டும். எந்த தாமதமும் இல்லாமல், இதை எப்படி செய்வது என்று குறித்து கொள்ளுங்கள்.

Food Recipe: காரசாரமான காரைக்குடி சிக்கன் வறுவல்.. எளிதாகவும், சூப்பராகவும் செய்வது எப்படி?

காரைக்குடி சிக்கன் வறுவல் (Image: freepik)

Published: 

02 Nov 2024 10:12 AM

ஐப்பசி மாதம் தொடங்கியது முதலே நம் அனைவரும் அசைவ உணவுகளை வெளுத்து வாங்கி கொண்டு இருக்கிறோம். எப்போதும்போல் சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, சிக்கன் கிரேவி போன்று வழக்கமான டிஷ்களை செய்யாமல், புதிதாக ஏதாவது சிக்கன் கொண்டு புதிய டிஷை செய்ய விருப்பமா..? அந்தவகையில், இன்று காரசாரமான காரைக்குடி சிக்கன் வறுவல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். இந்த சிக்கன் வறுவல் உங்களுக்கு தனி சுவையை தருவது மட்டுமின்றி, மீண்டும் மீண்டும் சுவைக்க ஆசையை தூண்டும். எந்த தாமதமும் இல்லாமல், இதை எப்படி செய்வது என்று குறித்து கொள்ளுங்கள்.

ALSO READ: Food Recipe: சுவையான மட்டன் கோலா உருண்டை.. இந்த ஸ்டைலில் குக் செய்து கலக்குங்க..!

காரைக்குடி சிக்கன் வறுவல்

காரைக்குடி சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:

  • சிக்கன் –  1 கிலோ
  • பெரிய வெங்காயம் – 4
  • தக்காளி – 4
  • மிளகாய் தூள் – காரத்திற்கு ஏற்ப
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • மிளகு பொடி
  • கறிவேப்பிலை – 2 கொத்து
  • இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • கடலை எண்ணெய் – தேவையான அளவு
  • சோம்பு –  சிறிதளவு

சிக்கன் வறுவல் செய்ய தேவையான மசாலா பொருட்களை அரைத்து எடுத்து கொள்ளவும்.

  • மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • வர மிளகாய் – 6
  • கறிவேப்பிலை –  தாராளமாக
  • முழு மல்லி – 4 டேபிள் ஸ்பூன்
  • பட்டை – ஒரு துண்டு
  • ஏலக்காய் – 4
  • கிராம்பு – 5
  • மராத்தி மொக்கு – சிறிதளவு (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்)
  • ஜாதிக்காய் – சிறிய துண்டு
  • தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்

ALSO READ: Diwali Special Recipes: தீபாவளி ஸ்பெஷல் மட்டன் குழம்பு.. ஈஸியா எப்படி செய்து பாருங்க..!

காரைக்குடி சிக்கன் செய்வது எப்படி..?

  1. முதலில் கடையில் வாங்கி வந்த 1 கிலோ சிக்கனை நன்றாக கழுவி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் ஒரு முறை கழுவவும்.
  2. சிக்கனை நன்றாக சுத்தம் செய்த பிறகு மஞ்சள் தூள் சிறிதளவும், உப்பு, தயிர் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக கிளறிய பின் ஊற வைக்கவும்.
  3. இப்போது அடுப்பை ஆன் செய்து ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
  4. எண்ணெய் சூடானதும் மிளகு, சீரகம், வர மிளகாய், மல்லி, ஏலக்காய், கிராம்பு மராத்தி மொக்கு ஜாதிக்காய் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும்
  5. அதன்பிறகு, எடுத்து வைத்துள்ள கறிவேப்பிலையை தாராளமாக சேர்த்து வறுக்கவும்.
  6. இறுதியாக, இந்த கலவையில் 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவலையும் சேர்த்து லேசாக வதக்கி தனியாக தட்டில் கொட்டி ஆற விடவும்.
  7. சூடு நன்றாக ஆறியதும் இந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு மசாலாவாக அரைக்கவும். உங்களது தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு மைய அரைத்து எடுத்து கொள்ளுங்கள். இப்போது, சிக்கன் மசாலா ரெடி.
  8. அடுத்ததாக, சிக்கன் வறுவல் செய்ய ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  9. தொடர்ந்து, கறிவேப்பிலையுடன் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  10. வெங்காயம் பொன்னிறமாக நன்றாக வதங்கியவுடன் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
  11. உங்களுக்கு பச்சை மிளகாய் சுவை பிடிக்கும் என்றால், பச்சை 2 சேர்த்து கொள்ளுங்கள்.
  12. இப்போது தக்காளி நன்றாக மசிந்து வதங்கியதும் மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
  13. பச்சை வாசம் போனதும், ஏற்கனவே ஊற வைத்த சிக்கனை சேர்த்து ஒரு முறைக்கு இரண்டு முறை கிளறிய பின் மூடி போட்டு மூடவும்.
  14. தண்ணீர் சேர்க்க வேண்டாம், தண்ணீர் சேர்த்தால் கிரேவி பதத்திற்கு வந்துவிடும்.
  15. சிக்கன் வேக வேக அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் வதக்கி வைத்திருந்த மசாலாவுடன் கலந்து சிக்கன் நன்றாக வேக உதவி செய்யும்.
  16. சிக்கன் சூட்டில் நன்றாக வெந்ததும், நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருந்த மசாலா கலவையை சேர்த்து நன்றாக கலந்து கொதிக்கவிடவும்.
  17. மசாலாவின் பச்சை வாசம் போய், மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்து வாசனையை தரும்.
  18. இப்போது, ஒரு கை அளவிலான கறிவேப்பிலை, மிளகு பொடி, கொத்தமல்லி தழை சேர்த்து ஒரு முறை கிளறிய பின் இறக்கினால், காரைக்குடி சிக்கன் வருவல் ரெடி.
  19. அரைக்கும் மசாலாவில் முடிந்த அளவு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளுங்கள். அரைக்க கடினமாக இருந்தால் தண்ணீரை சிறிதளவு ஊற்றி கொள்ளுங்கள். இல்லையெனில், சிக்கன் வறுவலாக இல்லாமல் கிரேவியாக வந்துவிடும்.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?