Food Recipes: மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் ஸ்டப்டு கேப்சிகம்.. இதை எளிதாக செய்வது எப்படி..? - Tamil News | how to make stuffed capsicum at home in a simple way; food recipes in tamil | TV9 Tamil

Food Recipes: மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் ஸ்டப்டு கேப்சிகம்.. இதை எளிதாக செய்வது எப்படி..?

Updated On: 

21 Sep 2024 22:00 PM

Stuffed Capsicum: குடை மிளகாயில் உடலுக்கு நன்மை தரக்கூடிய பல ஊட்டச்சத்துகள் உள்ளன. நம் ஊர்களில் குடை மிளகாய் சிக்கன் ரைஸ், சில்லி சிக்கன் மற்றும் சிக்கன் நூடுல்ஸ் போன்றவை தயாரிக்கும்போதே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கும் குடை மிளகாய்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை கிடைக்கும். இந்த குடை மிளகாய் சீசன்களுக்கு மட்டும் கிடைக்காமல் ஆண்டு முழுவதும் கடைகளில் கிடைக்கும்.

Food Recipes: மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் ஸ்டப்டு கேப்சிகம்.. இதை எளிதாக செய்வது எப்படி..?

ஸ்டப்டு கேப்சிகம் (Image: freepik)

Follow Us On

கேப்சிகம் என்று அழைக்கப்படும் குடை மிளகாய் என்ற பெயரை கேட்டவுடனே சிலர் முகத்தை சுழிக்க தொடங்குகிறார்கள். குடை மிளகாயில் உடலுக்கு நன்மை தரக்கூடிய பல ஊட்டச்சத்துகள் உள்ளன. நம் ஊர்களில் குடை மிளகாய் சிக்கன் ரைஸ், சில்லி சிக்கன் மற்றும் சிக்கன் நூடுல்ஸ் போன்றவை தயாரிக்கும்போதே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கும் குடை மிளகாய்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை கிடைக்கும். இந்த குடை மிளகாய் சீசன்களுக்கு மட்டும் கிடைக்காமல் ஆண்டு முழுவதும் கடைகளில் கிடைக்கும்.

ALSO READ: Food Recipes: குழம்பு என்ன வைப்பது என்று யோசனையா..? ஆந்திரா ஸ்டைலில் இப்படி பருப்புப்பொடி செய்து அசத்துங்க!

அந்தவகையில் இன்று குடை மிளகாயை கொண்டு வீட்டிலேயே சுவையாக சமைக்கும் ஒரு உணவை பற்றி இங்கு தெரிந்து கொள்ள போகிறோம். இந்த செய்முறையே முயற்சித்த பிறகு நீங்கள் குடை மிளகாயை வெறுக்க மாட்டீர்கள். இதை ஒருமுறை நீங்கள் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த உணவை மீண்டும் மீண்டும் கேட்டு தொந்தரவு செய்வார்கள். இதில் சிறப்புக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த உணவு உங்கள் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன உணவு என்றால் ஸ்டஃப்டு கேப்சிகம் செய்யும் முறையை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

ஸ்டஃப்டு கேப்சிகம் செய்யும் முறை:

  • ஸ்டப்டு கேப்சிகம் செய்ய முதலில் நீங்கள் 4 முதல் 5 நடுத்தர அளவிலான குடை மிளகாயை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளுங்கள். அதன்பின், குடை மிளகாயை வெட்டி அதற்குள் இருக்கும் விதைகளை வெளியே எடுத்து கொள்ளுங்கள்.
  • தொடர்ந்து 2 பெரிய அளவிலான உருளைக்கிழங்கை நன்றாக கழுவி, சுடு தண்ணீரில் வேகவைத்து மசித்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு பெரிய வெங்காயம், 2 பெரிய அளவிலான தக்காளி, 2 பச்சை மிளகாய் மற்றும் சிறிய அளவிலான இஞ்சி மற்றும் 4 பல் பூண்டுகளை எடுத்து அதை பொடி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
  • ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடானதும் வெட்டி வைத்த வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி பொன்னிறம் ஆனதும் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை போட்டு சேர்த்து வதக்கவும்.
  • அதன்பின் வதக்கிய காய்கறிகளில் மசித்த உருளைக்கிழங்கு, அரை கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, 4 கிராம்பு, அரை டீஸ்பூன் கரம் மசாலா, ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி தூள், சிறிதளவில் மஞ்சள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.
  • இதை தனியாக எடுத்து வைத்தபின் வெட்டி தயாராக உள்ள குடை மிளகாய் உள்ளே இவற்றை அடைக்கவும். தொடர்ந்து, ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  • அதன்பின், குடை மிளகாயை அந்த பாத்திரத்தில் வைத்து மூடியை போட்டு மூடி வைக்கவும்.
  • இதை வெளியே எடுத்தவுடன் பரிமாற சூடான ஸ்டஃப்டு கேப்சிகம் ரெடியாகிவிடும்.

ALSO READ: Food Recipes: ஹோட்டல் ஸ்டைலில் பன்னீர் அமிர்தசாரி.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க..!

குடைமிளகாயின் நன்மைகள்:

  • குடை மிளகாய் என்பது ஒரு வகை மிளகாய் வகையாகும். இதில், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, நார்ச்சத்து, புரதம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், நியாசின் ஆகியவை இதில் ஏராளமாக காணப்படுகின்றன.
  • குடை மிளகாய் சர்க்கரை அளவை கட்டுப்படுவதோடு அதை குறைக்கவும் உதவுகிறது. இதை உட்கொள்வதன் மூலம் வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கும்.
  • குடை மிளகாயில் ஏராளமான நார்ச்சத்துகள் உள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் தாராளமாக குடை மிளகாயை எடுத்துக்கொள்ளலாம். இது உங்கள் தொப்பை கொழுப்பு மற்றும் உடலின் பிற பகுதிகளில் உள்ள கலோரிகளை மிக வேகமாக எரிக்கிறது. இதனால் உங்கள் எடை மிக வேகமாக குறைகிறது.
  • குடை மிளகாயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளது. இது உங்கள் மூட்டுவலி, வீக்கம் மற்றும் மூட்டு வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
  • குடை மிளகாயில் உள்ள வைட்டமின் ஏ தோல், கண்கள் மற்றும் பற்களை ஆரோக்கியமான வைத்திருக்க உதவுகிறது. அதே நேரத்தில், இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே உங்கள் முடி மற்றும் எலும்புகளுக்கு நல்லது.
தினசரி காலையில் பாதாம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
தென்னிந்தியாவின் மாஸ் நடிகை தான் இந்த சிறுமி
கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த மீன் வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்..
பல வகையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பனீர்..!
Exit mobile version