5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Food Recipe: வித்தியாசமான ஸ்வீட் சாப்பிட ஆசையா? இதோ! பலாப்பழ பாயாசம், கேரட் பிர்னி ரெசிபி..

Jackfruit Payasam: இன்று புதுவிதமான வகையில் இரண்டு ஸ்வீட் ரெசிபிகள் உங்களுக்கு சொல்லி தர இருக்கிறோம். இது நிச்சயம் உங்களுக்கும், உங்களது வீட்டார்களுக்கும் நாவில் நீரை ஊற செய்யும். அந்தவகையில், இன்று பலாப்பழ பாயாசம், கேரட் பிர்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

Food Recipe: வித்தியாசமான ஸ்வீட் சாப்பிட ஆசையா? இதோ! பலாப்பழ பாயாசம், கேரட் பிர்னி ரெசிபி..
பலாப்பழ பாயாசம் – கேரட் பிர்னி (Image:freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 15 Nov 2024 12:29 PM

என்னதான் விதவிதமான உணவுகளை கடைகளிலும், வீடுகளிலும் சாப்பிட்டு மகிழ்ந்தாலும், சில சுவையான உணவுகள் நம் வீட்டில் செய்வது மூலமே கிடைக்கும். அதிலும், குறிப்பாக ஆரோக்கியமான வீடுகளில் செய்யும் புதுவிதமான ஸ்வீட் ரெசிபிகளுக்கு பலரும் அடிமை என்றே சொல்லலாம். இப்போது, பெரும்பாலான வீடுகளில் இதுபோன்ற ஸ்வீட் ரெசிபிகள் செய்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால், இந்த கவலை இனிமேல் வேண்டும். இன்று புதுவிதமான வகையில் இரண்டு ஸ்வீட் ரெசிபிகள் உங்களுக்கு சொல்லி தர இருக்கிறோம். இது நிச்சயம் உங்களுக்கும், உங்களது வீட்டார்களுக்கும் நாவில் நீரை ஊற செய்யும். அந்தவகையில், இன்று பலாப்பழ பாயாசம், கேரட் பிர்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ALSO READ: Food Recipe: வெஜ் பிரியர்களுக்கு ஸ்பெஷல் டிஸ்! சூப்பர் டூப்பரான பனீர் பிரியாணி செய்முறை இதோ!

பலாப்பழ பாயாசம்

பலாப்பழ பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:

  • பலாப்பழங்கள் – 15
  • வெல்லம் – 1/4 கப்
  • நெய் – சிறிதளவு
  • தேங்காய் துண்டுகள்
  • முந்திரி – 10
  • தேங்காய் பால்
  • ஏலக்காய் தூள் – சிறிதளவு

பலாப்பழ பாயாசம் செய்வது எப்படி..?

  1. முதலில் எடுத்துவைத்துள்ள 15 பலாப்பழத்தில் இருக்கும் கொட்டைகளை நீக்கி கொள்ளவும்
  2. அதன்பிறகு, அனைத்து பலாப்பழத்தை இரண்டாக கீறி, ஒரு குக்கரில் போடவும்
  3. குக்கரில் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
  4. அடுத்ததாக, வெந்து இருக்கும் பலாப்பழங்களை, மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  5. இப்பொழுது அரைத்த பலாப்பழ பேஸ்டின் ஒரு கப்புக்கு முக்கால் கப் அளவிலான வெல்லம் எடுத்து கொள்ளுங்கள்.
  6. முக்கால் கப் வெல்லத்தை ஒரு பால் பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்கு காய்ச்சி கொள்ளுங்கள்.
  7. வெல்லம் பாகு பதத்திற்கு வந்ததும், நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பலாப்பழ பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  8. இப்போது, பலாப்பழ பேஸ்ட் மற்றும் வெல்லத்தில் இருக்கும் தண்ணீர் வற்றி கெட்டியாக உருவெடுக்கும் நேரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து மீண்டும் மீண்டும் கிளறவும்.
  9. இரண்டும் ஒன்றாக சேர்ந்து கெட்டியாக இறுகி அல்வா பதத்திற்கு வரும் வரை மீண்டும் ஒருமுறை நெய் சேர்க்கவும்.
  10. தொடர்ந்து, ஒரு பெரிய கடாயில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து, அது சூடானதும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள தேங்காய் சேர்க்கவும்.
  11. அவை பொன்னிறமாக வரும் வரை வறுத்தெடுத்து எடுத்து கொண்டபின், அதே கடாயில் இருக்கும் நெய்யில் 10 முந்திரிகளையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
  12. அதன்பிறகு, அடுப்பை ஆப் செய்யாமல் அதே கடாயில் தேங்காய் பால் சேர்த்துக்கொள்ள வேண்டும். தேங்காய் பால் கெட்டியாகும் நேரத்தில் பலாப்பழ மற்றும் வெல்ல கலவையை சேர்க்கவும்.
  13.  தேங்காய் பாலும், பலாப்பழ பேஸ்ட்டும் சேர்த்து நன்கு கலக்கும்படி கிளறி கொடுங்கள்.
  14. இந்த கலவை சூடாகும் வரை இருந்தாலே போதுமானது, கொதிக்க கூடாது.
  15. அதன்பிறகு நெய்யில் வறுத்து வைத்திருக்கும் தேங்காய் துண்டுகல், முந்திரி பாயாசத்தில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  16. அவ்வளவுதான் கடைசியாக சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கினால் சூப்பரான பலாப்பழ பாயாசம் ரெடி.

ALSO READ: Food Recipe: விதவிதமான புது ரெசிபி.. வாழைப்பூ, வெள்ளரிக்காய் சட்னி செய்வது எப்படி..?

கேரட் பிர்னி

கேரட் பிர்னி செய்ய தேவையான பொருட்கள்:

  • பாஸ்மதி அரிசி – 1/4 கப்
  • ஜவ்வரிசி – 1/4 கப்
  • நெய் – தேவையான அளவு
  • உலர் திராட்சை – 10
  • முந்திரி – 15
  • கேரட் – 1
  • பால் – 1 லிட்டர்
  • சர்க்கரை –  1 கப்

கேரட் பிர்னி செய்வது எப்படி..?

  1. முதலில் ஒரு கால் கப் பாஸ்மதி அரிசி மற்றும் கால் கப் ஜவ்வரிசியை தனித்தனியாக ஊறவைத்து தனித்தனியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. அடுத்ததாக, அடுப்பை ஆன் செய்து 2 ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும்  10 முதல் 15 முந்திரி, 10 உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
  3. இப்போது, ஒரு முழு கேரட்டை நன்கு கழுவி துருவி எடுத்து, அந்த துருவலை நெய்யுடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
    கேரட் நன்றாக வதங்கியதும் ஒரு லிட்டர் பாலையும் கடாயில் சேர்த்து ஒரு சேர கொதிக்க விடுங்கள்.
  4. மிதமான தீயாக குறைத்துகொண்டு, அதில், பாஸ்மதி மற்றும் ஜவ்வரிசி கலவையை சேர்க்கவும்.
  5. 10 நிமிடம் தொடர்ந்து கிளறும்போது அரிசி நன்றாக வெந்து விடும்.
  6. அதன் பிறகு, எடுத்து வைத்துள்ள ஒரு கப் வெள்ளை சர்க்கரையை அதே கடாயில் சேர்க்கவும்
  7. வெள்ளை சர்க்கரை நன்றாக கரைந்ததும் ஆப் செய்தால் சுவையான கேரட் பிர்னி ரெடி.

Latest News