5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Food Recipe: ஊர் ஸ்பெஷல் ரெசிபி! திருநெல்வேலி சொதி, காரைக்கால் கட்டுச்சோறு செய்வது எப்படி?

karaikal kattu soru: தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் அனைத்து பகுதிகளிலும் ஏதாவது ஒரு உணவு வகைகள் மிகவும் பிரபலமானவை. அந்தவகையில், இன்று திருநெல்வேலி ஸ்பெஷல் சொதி மற்றும் காரைக்குடி ஸ்டைல் கட்டுச்சோறு போன்றவற்றிற்கான ரெசிபியை இங்கே தெரிந்து கொள்வோம். 

Food Recipe: ஊர் ஸ்பெஷல் ரெசிபி! திருநெல்வேலி சொதி, காரைக்கால் கட்டுச்சோறு செய்வது எப்படி?
திருநெல்வேலி சொதி மற்றும் காரைக்குடி கட்டுச்சோறு
mukesh-kannan
Mukesh Kannan | Published: 04 Dec 2024 10:05 AM

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒவ்வொரு விஷயங்கள் பிரபலமானவை. அதேநேரத்தில், அனைத்து ஊர்களிலும் அனைத்து பகுதிகளிலும் ஏதாவது ஒரு உணவு வகைகள் மிகவும் பிரபலமானவை. இந்த ஊர்களுக்கு சென்றால், இந்த உணவை எப்படியாவது சுவைத்திட வேண்டும் என்று ஆசை கொள்வார்கள். அந்தவகையில், இன்று இரண்டு மாவட்டங்களில் பிரபலமான உணவுகளை எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த ஒருமுறை உங்கள் வீட்டில் செய்து கொடுத்தால், மீண்டும் மீண்டும் செய்து கொடுக்க சொல்லி அடம்பிடிப்பார்கள். இந்தநிலையில், திருநெல்வேலி ஸ்பெஷல் சொதி மற்றும் காரைக்குடி ஸ்டைல் கட்டுச்சோறு போன்றவற்றிற்கான ரெசிபியை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Food Recipe: சண்டே ஸ்பெஷல் ரெசிபி! மட்டன் 65, மட்டன் எலும்பு ரசம் செய்வது எப்படி..?

திருநெல்வேலி ஸ்பெஷல் சொதி

திருநெல்வேலி ஸ்பெஷல் சொதி செய்ய தேவையான பொருட்கள்:

  • பாசிப்பருப்பு – 50 கிராம்
  • உருளைக்கிழங்கு – 1
  • முருங்கைக்காய் – 2
  • பீன்ஸ் – 6
  • கேரட் – 1
  • பச்சை மிளகாய் -2
  • இஞ்சி – சிறு துண்டு
  • பூண்டு – 2 பல்
  • எலுமிச்சை -சிறிய துண்டு
  • தேங்காய் பால் – அரை மூடியில் துருவி எடுத்து கொள்ளவும்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – 1 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 8 முதல் 12
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து

திருநெல்வேலி சொதி செய்வது எப்படி..?

  1. முதலில் அடுப்பை ஆன் செய்து கடாயை வைக்கவும். கடாய் சூடானதும் அதில் பாசிப்பருப்பை போட்டு நன்றாக வாசம் வரும் வரை வறுக்கவும்.
  2. தொடர்ந்து, பாசிப்பருப்பு கருகாமல் வறுத்தபின், ஒரு குக்கரில் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். அதில், இரண்டாக கீறிய பச்சை மிளகாய், பூண்டு பல் சேர்த்து வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
  3. உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், பீன்ஸ், கேரட், முருங்கைக்காய் சின்ன வெங்காயம் என எடுத்து வைத்துள்ள காய்கறிகளை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும். இஞ்சி மற்றும் எலுமிச்சை பழத்தை நசுக்கி தனித்தனியாக சாறாக எடுத்துக்கொள்ளவும்.
  4. அடுத்ததாக, அரை மூடி தேங்காயை நன்றாக துருவி சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து பிழிந்து தேங்காய் பாலாக எடுத்து கொள்ளவும். இதையே மூன்று முறை செய்து தேங்காய் பாலை தயார் செய்து கொள்ளுங்கள்.
  5. இப்போது, மீண்டும் அடுப்பை ஆன் செய்து ஒரு கனமான பாத்திரத்தை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது அளவு கடுகு, கறிவேப்பிலை போட்டு பொரிய விடவும்.
  6. தொடர்ந்து, இவை இரண்டும் நன்றாக பொரிந்ததும் நீள வாக்கில் வெட்டி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  7. வெங்காயம் நன்றாக பொன்னிறமானதும், வெட்டி தயாராக வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
  8. காய்கறி சிறிது வெந்ததும் பிழிந்து வைத்துள்ள தேங்காய் பால், இஞ்சி சாறு சேர்த்து மிதமான சூட்டில் வேகவிடவும். அதேநேரத்தில், உப்பு சரியான அளவில் சேர்த்து கொள்ளுங்கள்.
  9. தேங்காய் பாலுடன் காய்கறிகள் வெந்ததும் வறுத்த வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும், கெட்டி தேங்காய் பாலை எலுமிச்சை சாறுடன் சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பை ஆப் செய்யவும்.
  10. அவ்வளவுதான் சுவையான திருநெல்வேலி ஸ்பெஷல் சொதி தயார்..!

காரைக்கால் கட்டுச்சோறு

கட்டுச்சோறு செய்ய தேவையான பொருட்கள்:

  • சாப்பாடு அரிசி – 1 கப்
  • கடலைப்பருப்பு- 1 ஸ்பூன்
  • தேங்காய் பால் – 1 கப்
  • தனி மிளகாய் தூள் -1 ஸ்பூன்
  • எண்ணெய் -1 ஸ்பூன்
  • கடுகு -1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 2
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • பூண்டு – 5 பல்
  • பெரிய வெங்காயம் -1
  • மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  • மிளகு தூள்-1 ஸ்பூன்
  • சீரகத்தூள்-1 ஸ்பூன்
  • புளி தண்ணீர் – 1 கப் (நன்றாக கரைத்தது)
  • உப்பு – தேவையான அளவு

ALSO READ: Food Recipe: ஆளை தூக்கும் சுவை..! முட்டை கீமா, முட்டை மசாலா செய்வது எப்படி?

கட்டுச்சோறு செய்வது எப்படி?

  • முதலில் அடுப்பை ஆன் செய்து ஒரு பெரிய கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  • அடுத்ததாக, மேலே குறிப்பிட்டுள்ள அளவில் கடுகு, கருவேப்பிலை, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய்,  பூண்டு ஆகியவற்றை கல்லில் குடித்து கடாயில் சேர்க்கவும்.
  • இவை அனைத்தும் நன்றாக பொரிந்து வந்ததும், பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கி எடுக்கவும்.
  • இத்துடன், சிறிதளவும் மஞ்சள் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கிளறவும்.
  • மசாலா வாசனை போனதும், நன்றாக கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர் மற்றும்  தேங்காய்ப் பால் சேர்த்து மெல்ல கிளறவும்
  • இப்போது, உப்பு சரியான அளவில் சேர்த்து, நன்றாக கொதி வந்ததும் ஊறவைத்த அரிசியை சேர்க்கவும்.
  • அரிசியை சேர்த்து கிளறியபின் மூடி போட்டு வேகவைத்து எடுத்தால், சுவையான காரைக்குடி கட்டுச்சோறு ரெடி.

Latest News