5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

உஷார்.. சத்தமில்லாமல் கொல்லும் சோஷியல் மீடியா.. மீள்வது எப்படி? மருத்துவர் சொல்லும் அறிவுரைகள்!

இன்றைய உலகில் நவீன தொழில்நுட்பம் எந்த அளவுக்கு நன்மைகளை தருகிறதோ அதே அளவுக்கு தீமைகளும் கொண்டு சேர்க்கின்றன. குறிப்பாக சமூக வலைத்தளங்களின் வீச்சு என்பது அசாத்திய வளர்ச்சியை கொண்டுள்ளது. அந்த அசாத்திய வளர்ச்சியின் விளைவாக பாதகமான விளைவுகளும் ஏற்படுகின்றன. தனிநபரின் உளவியலிலும் மன ஆரோக்கியத்திலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மனச்சோர்வை தருகிறது. பதட்டத்தை உண்டாக்குகிறது. இதன் காரணமாகவே அதிக அளவில் சமூக வலைதளத்தை பயன்படுத்த தூண்டுகிறது.

உஷார்.. சத்தமில்லாமல் கொல்லும் சோஷியல் மீடியா.. மீள்வது எப்படி? மருத்துவர் சொல்லும் அறிவுரைகள்!
மாதிரிப்படம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 Jun 2024 14:23 PM

சமூக வலைதளங்களின் தாக்கம்: இன்றைய உலகில் நவீன தொழில்நுட்பம் எந்த அளவுக்கு நன்மைகளை தருகிறதோ அதே அளவுக்கு தீமைகளும் கொண்டு சேர்க்கின்றன. குறிப்பாக சமூக வலைத்தளங்களின் வீச்சு என்பது அசாத்திய வளர்ச்சியை கொண்டுள்ளது. அந்த அசாத்திய வளர்ச்சியின் விளைவாக பாதகமான விளைவுகளும் ஏற்படுகின்றன. தனிநபரின் உளவியலிலும் மன ஆரோக்கியத்திலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மனச்சோர்வை தருகிறது. பதட்டத்தை உண்டாக்குகிறது. இதன் காரணமாகவே அதிக அளவில் சமூக வலைதளத்தை பயன்படுத்த தூண்டுகிறது. சமூக வலைதளங்களுக்கு அடிமையாவதால் நிஜ வாழ்க்கை உறவுகளைக் காட்டிலும் ஆன்லைன் ப்ரொபைல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்படலாம். இது, அர்த்தமற்ற தொடர்புகளுக்கும் மோசமான உறவுகளுக்கும் வழிவகுக்க கூடும். இணைய உலகில் தொடுக்கப்படும் தனிநபர் தாக்குதல் ஒருவரின் நம்பிக்கையை சீர்குலைத்து சுயமரியாதையில் சேதத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமற்ற, எட்ட முடியாத தன்மைதான் அழகு என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பிம்பம் ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்.

ஒரு கட்டத்தில் இணையத்துக்கு அடிமையாவது உயிரைப் பறிக்கும் அளவுக்கு கூட ஆபத்தை ஏற்படுத்தலாம். சமீபத்தில் கூட, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அவரை பற்றி கேலி செய்யும் விதமாக மீம்ஸ் வெளியிட்ட காரணத்தால் அந்த முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த முதியவர் பிரதாப் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் லோஹாவத் என்ற கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இவர் தள்ளுவண்டி மூலம் குப்பைகளையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் சேமித்து அவற்றை விற்பனை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.  இந்த நிலையில், அவர் குப்பைகளை சேகரிப்பது போன்று கேலி செய்யும் விதமாக வீடியோக்கள், மீம்ஸ் வெளியாகி வைரலானதை அடுத்து, அவர் மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு சம்பவமும் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. அதாவது, அண்டை மாநிலமான கர்நாடகாவில் பிரபல கன்னட நகர் தர்ஷன் தனது தோழி பவித்ரா கவுடானை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமியை அடித்துக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த அளவுக்கு சமூக வலைதளங்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

Also Read: தினமும் உடல் வலி பிரச்னையா? இதை மட்டும் செய்யுங்க போதும்!

மருத்துவர் சொல்வது என்ன?

இந்த நிலையில், மனநல மருத்துவர் சித்ரா இதுகுறித்து நம் கேள்விகளுக்க பதிலளித்துள்ளார். சமூக வலைதளங்களால் ஏற்படும் தாக்கம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதலளித்த மருத்துவர் சித்ரா, ”மற்றவர்களை கேலி செய்து மீம்ஸ் போன்றவற்றை வெளியிடுவது  பிரபலமாகவும்,  சமூக வலைதள கணக்கிற்கு லைக்ஸ் குவிப்பதற்காக மட்டுமே. நெகடிவ் விஷயங்களை முன்னிறுத்தி கவனம் ஈர்ப்பதற்காக இதுபோன்ற வீடியோக்களை பதிவிடுகிறார்கள். பொதுவாகவே தற்போது மக்கள் அதிகளவில் நெகடிவ் வீடியோக்களை பார்க்கின்றனர். இதனை தெரிந்த கொண்டவர்கள் சமூக வலைதளத்தில் நெகடிவ் வீடியோக்களை பதிவிட்டும், மற்றவர்களை ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

சமூக வலைதள கணக்கு வைத்திருக்கும் பெரும்பாலானோருக்கு சமூக பொறுப்பு என்பது கிடையாது. ஒருவரை பற்றி பேசும்போது, விமர்சிக்கும்போது அதனின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதே யோசித்து அனைவரும் சமூக வலைதளத்தில் வீடியோக்கள் போன்றவற்றை பதிவிட வேண்டும். மற்றவர்களை கேலி செய்து வீடியோ பதிவிடுபவர்களுக்கு மற்றவர்களை பற்றி யோசிக்க மாட்டார்கள்.

அவர்களது மனநிலை அப்படி தான் இருக்கும். எனவே, இதுபோன்ற நெகடிவ் வீடியோக்கள், மீம்ஸ்களை பார்க்கும் மக்கள் இதனை தனிப்பட்ட முறையில் எடுத்து கொள்ள வேண்டாம். பொதுவாக அவர்கள் அப்படி தான் செய்வார்கள் என நினைத்துக் கொள்ளுங்கள். வெளி உலகத்தை மாற்ற முடியாது.  நாம் தான் நம்முடைய எண்ணங்களையும், சிந்தனைகளையும் மாற்ற வேண்டும் என்பதே அசைக்க முடியாத உண்மை. எனவே, இதுபோன்ற நெகடிவ் வீடியோக்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற நெகடிவ் வீடியோக்களால் ஒருவரின் தரம் எதுவும் குறைந்துபோவது இல்லை. எனவே, இதுபோன்ற வீடியோக்களை பார்ப்பதை தவிர்க்கவும்,  அதனை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

சமூக வலைதளங்களில் நெகட்டிவ்வாக வீடியோ பதிவிடும் அவர்கள் மீது தொழில்நுட்ப ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். அனைத்து சோஷியல் மீடியா தளங்களிலும் சென்சார் வைக்க வேண்டும். நெகட்டிவாக வீடியோ பதிவிடும் அக்கவுண்டுகளை முடக்கும் நடவடிக்கை நடைமுறையில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் தான் நெகட்டிவ்வாக வீடியோ பதிவிடும் நபர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும். நெகட்டிவாக வீடியோ பதிவிடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தேவை. மொபைல் போன்களை தாண்டி நல்ல விஷயங்கள் இருக்கு என்பதை தெரியாத நபர்கள் தான் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகிகி உள்ளனர். வேலை இருப்பவர்கள் யாரும் சமூக வலைதளங்களில் அடிமையாகஇருப்பது கிடையாது. வேலை இல்லாமல் இருப்பவர்களும், தன்னம்பிக்கையை இழந்தவர்களும் தான் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி உள்ளனர்.

ஏதோ ஒரு விஷயத்தை மறக்கவே சமூக வலைதளங்களுக்கு பெரும்பாலான இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். ஆனால் இதில் அவர்களுக்கு சந்தோஷம் கிடைக்கும் என்றால் கிடையாது. சமூக வலைதளங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் மன உளைச்சலுக்கு தான் செல்வார்கள். தன்னம்பிக்கையோடு இருப்பவர்கள் யாரும் சமூக வலைதளங்களுக்கு அடிமையாக இருக்க மாட்டார்கள். எனவே, அனைவரும் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். அதே நேரத்தில் குழந்தைகளுக்கு மொபைல் போனை கையில் கொடுப்பதற்கு பதில் பயனுள்ள விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்” என்றார் மருத்துவர்.

Also Read: ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3 சிலிண்டர் இலவசம், குடும்ப பெண்களுக்கு ரூ.1500 மாதம் வழங்கப்படும் – மகாராஷ்டிரா அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு