Food Recipe: இரத்த சோகைக்கு தீர்வு தரும் நெல்லிக்காய் ஜாம்.. அரை மணிநேரத்தில் இப்படி தயார் செய்யலாம்!
Gooseberry Jam: நெல்லிக்காய் புளிப்பு, கசப்பு மற்றும் துவர்ப்பு தன்மை கொண்டதாக இருப்பதால், இதை தினமும் சாப்பிடுவது பல வகைகளில் நன்மை தரும். இத்தகைய சூழ்நிலையில், நெல்லிக்காய் புளிப்பு மற்றும் கசப்பு என்று நினைப்பவர்கள் இந்த முறையில் செய்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் நிச்சயம்.
நெல்லிக்காய் ஆரோக்கியத்திற்கு அமிர்தமாக கருதப்படுகிறது. இதை உட்கொள்வது ஒரு நபரை பல நோய்களிலிருந்து விலக்கி வைக்கும். இது முடி வளர்ச்சிக்கும் கூட நன்மை பயக்கும். நெல்லிக்காய் புளிப்பு, கசப்பு மற்றும் துவர்ப்பு தன்மை கொண்டதாக இருப்பதால், இதை தினமும் சாப்பிடுவது பல வகைகளில் நன்மை தரும். இத்தகைய சூழ்நிலையில், நெல்லிக்காய் புளிப்பு மற்றும் கசப்பு என்று நினைப்பவர்கள் இந்த முறையில் செய்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் நிச்சயம். இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் இதை தினந்தோறும் எடுத்து கொண்டால், இந்த பிரச்சனை விரைவில் சரியாகும்.
ALSO READ: Food Recipe: ஈசியான சூப்பர் டிஷ்! மீன் பிரியாணி, மட்டன் கீமா புலாவ் செய்வது எப்படி?
நெல்லிக்காய் ஜாம்
நெல்லிக்காய் ஜாம் செய்ய தேவையான பொருட்கள்:
- நெல்லிக்காய் – 1 கிலோ
- வெல்லம் – 1.25 கிலோ
- சுக்கு – 25 கிராம்
- ஏலக்காய் – 10 கிராம்
நெல்லிக்காய் ஜாம் செய்வது எப்படி..?
- கடைகளில் வாங்கிய 1 கிலோ நெல்லிக்காயை நன்றாக கழுவி சுத்தம் செய்தபின் தேவையான அளவு தண்ணீர் குக்கர் அல்லது பாத்திரத்தில் நன்றாக வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
- தொடர்ந்து, நெல்லிக்காயின் சூடு ஆறியதும் சதை பகுதியை தனியாகவும், அதன் கொட்டைகளை நீக்கியும் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
- அடுத்ததாக, வாங்கி வைத்துள்ள மண்ட வெல்லத்தை பொடி பொடியாகவோ அல்லது துருவலாக்கியோ நீரில் போட்டு பாகுபோல் காய்ச்சி எடுத்து கொள்ளவும்.
- இப்போது கொட்டைகளை எடுத்த நெல்லிக்காயை மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அடித்து, அதை கொதிக்கும் வெல்லப்பாகில் சேர்த்து தொடர்ந்து அடி பிடிக்காமல் கிளறி கொண்டே இருக்கவும்.
- 10 நிமிடங்களுக்கு பிறகு பாகில் நெல்லிக்காய் நன்றாக கரைந்ததும் தட்டி வைத்துள்ள சுக்கு மற்றும் ஏலக்காயை கொட்டி ஆப் செய்து கிளறவும்.
- அவ்வளவுதான் சுவையான நெல்லிக்காய் ஜாம் தயார்.
- மறக்க வேண்டாம் இதை எப்போதும் சூடாக சாப்பிட வேண்டாம்.
- ஒரு கண்ணாடி ஜாடியில் எடுத்து வைத்து ஆற வைத்து எடுத்து கொள்ளவும்.
- இதையடுத்து, தினமும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி சாப்பிடலாம்.
- ஒருமுறை இப்படி ஜாம் தயாரித்து வைத்து கை படாமல் ஆறுமாதம் வரை பயன்படுத்தி சுவைக்கலாம்.
நெல்லிக்காய் ரசம்
நெல்லிக்காய் ரசம் செய்ய தேவையான பொருட்கள்:
- நெல்லிக்காய் – 2
- தக்காளி – 2
- பச்சை மிளகாய் – 2
- பூண்டு – 4 பல்
- கருப்புக்கொள்ளு – சிறிதளவு
- மிளகு – சிறிதளவு
- சீரகம் – சிறிதளவு
- திப்பிலி – சிறிதளவு
- கடுகு எண்ணெய் – தேவையான அளவு
- கடுகு – தாளிக்கும் அளவு போதுமானது
- மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
- பெருங்காயம் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
ALSO READ: Food Recipe: நாக்கில் நடனமாடும் சுவை.. மதுரை கறி தோசை, கொத்துக்கறி சப்பாத்தி செய்வது எப்படி..?
நெல்லிக்காய் ரசம் செய்வது எப்படி..?
- முதலில் எடுத்து வைத்துள்ள நெல்லிக்காய் மற்றும் தக்காளியை கொட்டைகளை நீக்கி அரைத்து எடுத்து வைக்கவும்.
- தொடர்ந்து, மேலே குறிப்பிட்டுள்ள அளவிலான பச்சைமிளகாய் மற்றும் பூண்டை ஒன்றாக மிக்ஸி அல்லது இடிக்கும் கல்லில் இடித்து எடுத்துக் கொள்ளவும்.
- இப்போது, அடுப்பை ஆன் செய்து ஒரு பாத்திரத்தை வைத்து கடுகு எண்ணைய் ஊற்றி கடுகு போட்டு பொறிந்ததும் கருப்புக்கொள்ளு மற்றும் மிளகு, சீரகம், திப்பிலியை சேர்த்து நன்றாக மணம் வரை வறுக்கவும்.
- அடுத்ததாக, கறிவேப்பிலை தட்டி வைத்துள்ள பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.
- பச்சை வாசனை போனதும் மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துள்ள நெல்லிக்காய் மற்றும் தக்காளி பேஸ்டை போட்டு வதக்கவும்.
- மிளகு, சீரகம், திப்பிலி மற்றும் கருப்புக்கொள்ளு பொடி, மஞ்சள்தூள் பெருங்காயம் போன்றவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கிளறவும்.
- இவை நன்றாக வதங்கியதும் உப்பு மற்றும் தண்ணீரை தேவையான அளவில் சேர்த்து நுரை பொங்கி வரும் வரை காத்திருந்து, அதன்பின் கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான நெல்லிக்காய் ரசம் ரெடி.
நெல்லிக்காய் நன்மைகள்:
நெல்லிக்காயை தொடர்ந்து உட்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். நெல்லிக்காயை தொடர்ந்து உட்கொள்வதால் முடி உடர்த்தியாகவும், பளபளப்பாகவும் மாறும். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முடியை வேர்களில் இருந்து வலுப்படுத்தி, முடி உதிர்வதை தடுக்கும்.