5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Conjunctivitis: மழைக்காலத்தில் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ..! கண்களை பாதிக்காமல் தடுப்பது எப்படி?

Madras Eye: ஒவ்வாமை அல்லது தொற்று காரணமாக கண்ணின் ஒரு பகுதியான கான்ஜூன்டிவா வீக்கமடையும்போது மெட்ராஸ் ஐ நோய் ஏற்படுகிறது. கான்ஜூன்டிவா என்பது ஒரு வெளிப்படையான மெல்லிய திசு ஆகும். இது கண்களின் வெள்ளை பகுதியின் வெளிப்புற மேற்பரப்பையும், கண் இமைகளின் உள் மேற்பரப்பையும் உள்ளடக்கியது.

Conjunctivitis: மழைக்காலத்தில் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ..! கண்களை பாதிக்காமல் தடுப்பது எப்படி?
மெட்ராஸ் ஐ (Image: GETTY)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 08 Nov 2024 17:30 PM

கான்ஜூன்க்டிவிடிஸ் என்பது ஒரு கண் தொற்றுநோயாகும். இது தமிழ்நாட்டில் மெட்ராஸ் ஐ என்றும் பிற மாநிலங்களில் பிங்க் ஐ என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு நபருக்கு இந்த பிரச்சனை ஏற்படும்போது கண்கள் சிவந்து வீக்கமடையும். இதில் இருந்து வெளிப்படும் தண்ணீர் மூலம் இது பிறருக்கும் பரவும். ஒவ்வாமை அல்லது தொற்று காரணமாக கண்ணின் ஒரு பகுதியான கான்ஜூன்டிவா வீக்கமடையும்போது இந்த நோய் ஏற்படுகிறது. கான்ஜூன்டிவா என்பது ஒரு வெளிப்படையான மெல்லிய திசு ஆகும். இது கண்களின் வெள்ளை பகுதியின் வெளிப்புற மேற்பரப்பையும், கண் இமைகளின் உள் மேற்பரப்பையும் உள்ளடக்கியது. இதுதான் கண் இமைகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.

முதலில் ஒரு கண்ணில் இந்த பிரச்சனை தோன்றி, பின் மற்றொரு கண்ணுக்கும் பரவலாம். இந்த மெட்ராஸ் ஐ பிரச்சனை பெரும்பாலும் சிறுவர்களுக்கு ஏற்படும். மேலும், இளம் வயதினருக்கும், பெரியவர்களுக்கும் அவ்வப்போது பாதிப்பை தரும்.

ALSO READ: Pregnant: நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் தவிப்பா..? இந்த முறை 7 வழிமுறைகள் பலன் தரும்..!

மெட்ராஸ் ஐ எதனால் ஏற்படுகிறது..?

மெட்ராஸ் ஐ பொதுவாக 4 வகைப்படும். அவை வைரஸ் மெட்ராஸ் ஐ, பாக்டீரியா மெட்ராஸ் ஐ, ஒவ்வாமை மெட்ராஸ் ஐ, இரசாயன மெட்ராஸ் ஐ, பாப்பில்லரி மெட்ராஸ் ஐ.

பாக்டீரியல் மெட்ராஸ் ஐ:

பாக்டீரியல் கான்ஜூன்க்டிவிடிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இதனால் பாதிப்பு ஏற்படும்போது கண்கள் சிவந்து நீர் வடிய தொடங்கும். தொடர்ந்து, கண்களில் அரிப்பு ஏற்படும். இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நபரிடம் நேரசியாக தொடர்பு கொள்வதன் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்துவதன் மூலமாகவோ பாதிப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும், இதற்கு ஆண்டிபயாடிக் கண் சொட்டு மருந்துகள் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வைரஸ் மெட்ராஸ் ஐ:

வைரஸ் மெட்ராஸ் பொதுவான வகை வைரஸால் ஏற்படுகிறது. இந்த தொற்றானது வைரஸால் மாசுபட்ட மேற்பரப்புகளை தொடுவதன்மூலம், பாதிக்கப்பட்ட நபரை தொடர்பு கொள்வதன்மூலம் ஏற்படுகிறது. இதற்கு என்று குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் கிடையாது. பொதுவாக 1 முதல் 3 வாரங்களுக்குள் தானாகவே சரியாகிவிடும்.

ஒவ்வாமை மெட்ராஸ் ஐ:

ஒவ்வாமை மெட்ராஸ் ஐ பெரும்பாலும் செல்லப்பிராணிகளின் தோல் அல்லது பூச்சிகளின் மூலம் ஒவ்வாமை மெட்ராஸ் ஐ ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் கடுமையான கண்களில் அரிப்பு, சிவத்தல் போன்றவை ஏற்படும். இதற்கு ஆண்டிஹிஸ்டமைன் கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.

இரசாயன மெட்ராஸ் ஐ:

இரசாயன மெட்ராஸ் ஐ எரிச்சலூட்டும் அல்லது இரசாயனங்களால் ஏற்படுகிறது. அதாவது, நீச்சல் குளத்தின் குளோரின் தண்ணீர், தரை கிளீனர்களில் இருந்து வெளிப்படும் புகை கண்களில் படும்போது இவை ஏற்படுகிறது. இப்படியான சூழ்நிலையில், கண்களை உடனடியாக தண்ணீரில் கழுவி, மருத்துவரை அணுக வேண்டும். இரசாயங்கள் கண்களுக்கு அதிக தீங்கை விளைவிக்கும்.

பாப்பில்லரி மெட்ராஸ் ஐ:

பாப்பில்லரி மெட்ராஸ் ஐ என்பது பெரும்பாலும் காண்டாக்ட் லென்ஸ்கள், கண் ப்ரோஸ்தெடிக்ஸ் போன்றவற்றை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. காண்டாக்ட் லென்ஸ் அணியும்போது கண்களில் அரிப்பு, சிவத்தல் மற்றும் உருத்தல் இருந்தால் உடனே அகற்றவது நல்லது.

ALSO READ: Stomach Pain: சாப்பிட்ட உடனே வயிற்று வலியா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!

மெட்ராஸ் ஐ வராமல் தடுக்க என்ன செய்யலாம்..?

  • வெளியே சென்று வந்தவுடன், பாதிக்கப்பட்ட நபரை தொட்டவுடன் உடனடியாக கைகளை கழுவுவது மெட்ராஸ் ஐ வராமல் தடுக்கலாம்.
  • கண்கள் சிவக்கும்போது கண்களை தொடுதல் அல்லது தேய்த்தல் போன்றவை செய்யாமல், ஒரு காட்டன் துணியில் ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்யுங்கள்.
  • வீட்டில் யாருக்காவது மெட்ராஸ் ஐ பாதிப்புகள் இருந்தால், அவர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள். குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பள்ளிகளுக்கும், வெளியேவும் செல்ல அனுமதிக்காதீர்கள்.
  • ஒரு கண்ணில் பாதிப்பு இல்லையென்றால், இரண்டு கண்களுக்கும் ஒரே கண் சொட்டு மருந்து பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News