5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நாய் கடி சம்பவங்களை தவிர்ப்பது எப்படி? டாக்டரிடம் போகும் முன்பு இதை செய்யுங்கள்

குழந்தைகளை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

நாய் கடி சம்பவங்களை தவிர்ப்பது எப்படி? டாக்டரிடம் போகும் முன்பு இதை செய்யுங்கள்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 08 May 2024 13:02 PM

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் நாய் கடியால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் அப்படி தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 வயது சிறுமியை நாய் கடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும், குழந்தைகளை நாய் கடித்தால் முதற்கட்டமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

நாய்கள் கடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

தெரு நாய்கள் உங்களை பார்த்து குரைத்தால் ஓடக் வேண்டாம்.  அப்படி ஓடினால் நாய்கள் உங்களை வெளி நபர்கள் என்று நினைத்து கடிக்க முயற்சிக்கும். நாய்கள் உங்களை கடிக்க வந்தால் கத்த வேண்டாம். ஏனென்றால் அது நாயின் அட்ரினலின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

நாய் கடிக்க வந்தால் கத்தாமல் தரையில் அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும். மேலும், நாய்களுடன் நேரடி கண் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம். நாய்களை திரும்பி பார்க்காமல், நீங்கள் சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும். வயிறு மற்றும் கழுத்து போன்ற உங்கள் முக்கிய உறுப்புகளைப் பாதுகாக்க ஒரு பை அல்லது ஒரு பொருளைப் பயன்படுத்தவும்.

மேலும், நாய் உங்களை கடிக்க வந்தால் குச்சியை வைத்து தாக்க வேண்டாம். அதற்கு பதிலாக நாய்களுக்கு பிஸ்கட்களை போடலாம். வெறித்தனமாகவோ, பசியாகவோ, மன உளைச்சலுக்கு ஆளாகவோ அல்லது கவலையாகவோ இருப்பதால் தான் நாய்கள் கத்தவோ, மற்றவர்களை கடிக்கவும் செய்கிறது. இதனால், நாய்களுக்கு உணவுகள் கொடுக்க வேண்டும்.

Also Read : 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு..எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ!

நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகள் அல்லது முதியோர்களை நாய் கடித்தால், நாய் கடித்த பகுதியை நன்கு கழுவ வேண்டும். சிறிய கடியாக இருந்தாலும் உடலில் பதிந்து இருக்கும். எனவே, தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். ரத்தம் வந்தால் கடிப்பட்ட இடத்தின் மீது கை வைத்து மென்மையாக அழுத்த வேண்டும்.

இதை செய்தாலே ரத்தம் நின்று விடும். உடனே, ஆண்டிபயாடிக் மருந்துகளை கடிப்பட்ட இடத்தில் போடலாம். அடுத்து, மருத்துவரின் உங்கள் குழந்தைகள் அழைத்து சென்று, நாய் எப்படி கடித்தது என்பதை சரியாக விவரிக்க வேண்டும். அப்போது தான் மருத்துவர் உரிய சிகிச்சை அளிப்பார்.

பின்பற்ற வேண்டியவை:

வீட்டில் வளர்க்கும் நாய்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டும். அதன்படி, மனிதர்களை போன்று நாய்களுக்கு ஒருசில விஷயங்கள் பிடிக்காது.

எனவே, நாய் உரிமையாளரிடன் நாய்க்கு என்ன செய்தால் பிடிக்காது என்ற விவரங்களை கேட்டபின் நாய்களை கொஞ்சலாம். நாய்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளக் கூடாது.

வாலை பிடித்து இழுப்பது, அதை மிரட்டுவது, கோபத்தை ஏற்படுத்துவது போன்றவற்றை செய்யக்கூடாது. அதற்கு பிடித்தமாறி நடந்து கொள்ள வேண்டும். நாய் சாப்பிடும்போதும், தூங்கும்போது குழந்தைகளை பக்கத்தில் அமர வைக்க வேண்டாம். நாய்களின் உடல்மொழிகள் குறித் சொல்லித் தர வேண்டும்.

Also Read : சில்லறை பிரச்னைக்கு தீர்வு… அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ வசதி அறிமுகம்.. எவ்வாறு செயல்படும்?

Latest News