Cancer Symptoms: புற்றுநோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் இவைதான்.. எப்போதும் புறக்கணிக்காதீர்கள்!

Health Tips: புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்னவாக இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்வது முக்கியம். அந்தவகையில், இன்று புற்றுநோயின் முதன்மை அறிகுறிகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Cancer Symptoms: புற்றுநோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் இவைதான்.. எப்போதும் புறக்கணிக்காதீர்கள்!

புற்றுநோய் (Image: GETTY)

Published: 

27 Nov 2024 18:31 PM

உலகம் முழுவதும் புற்றுநோய் மிகவும் கொடிய நோயாக பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சிலர் புற்றுநோயை எதிர்கொண்டு மரணித்த கதையை கேள்வி பட்டிருக்கிறோம். அதையும் கடந்து சிலர் அந்த புற்றுநோயை முறியடித்து மறு ஜென்மம் எடுத்து வாழ்ந்தும் வருகின்றனர். பல நேரங்களில் சிலரால் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிய முடியவில்லை. இதனால், கடுமையான சூழ்நிலையை சந்திக்க வேண்டியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்னவாக இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்வது முக்கியம். அந்தவகையில், இன்று புற்றுநோயின் முதன்மை அறிகுறிகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Diabetes: சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? வராமல் தடுப்பது எப்படி..?

கர்ப்பப்பை மற்றும் கருப்பை புற்றுநோய்:

வயிற்றில் வீக்கம், கனம் என அடிக்கடி உங்களுக்கு ஏற்பட்டால், இது கருப்பை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். எந்தவொரு பெண்ணுக்கும் தனது மாதவிடாய் தாமதமாகவோ அல்லது அடிக்கடி பிரச்சனைகளை எதிர்கொண்டால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது. இதை எளிதாக விடுவது ஆபத்தானது. இவையும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.

பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகும் இரத்தப்போக்கு ஏற்பட்டால், இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. இவை கருப்பை மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.

மார்பக புற்றுநோய்:

ஆணோ, பெண்ணோ ஒருவரின் மார்பகத்தில் மாற்றங்கள், வீக்கம், கட்டி, முலைக்காம்பு நிறம் மாறுதல், ஒரு மார்பகத்தின் அளவு மற்றொன்றிலிருந்து வேறுபட்டதாக இருத்தல் போன்றவை இருந்தால், இவை மார்பக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.

இரத்த புற்றுநோய்:

தொடை பகுதிகளில் அல்லது உடலில் நிறைய இடங்களில் நீல நிற திட்டுகள் காணப்பட்டால், இவை இரத்த புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.

வாய் புற்றுநோய்:

உங்களுக்கு நீண்ட நாட்களாக வாய் புண்கள் அல்லது கொப்புளங்கள் இருந்தாலோ அல்லது இவை மீண்டும் மீண்டும் ஏற்பட்டாலோ வாய் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். அந்தவகையில், அதிகளவில் புகைபிடிப்பவர்களுக்கு வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

லுகேமியா புற்றுநோய்:

உங்களுக்கு அடிக்கடி காய்ச்சல் அல்லது தொற்றுநோய் பிரச்சனைகள் உண்டானால், இவை லுகேமியா புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.

வயிற்று அல்லது தொண்டை புற்றுநோய்:

உணவு, தண்ணீர் அல்லது வேறு ஏதேனும் உணவு பொருட்களை விழுங்குவதில் சிக்கல் ஏற்பட்டால், வயிறு மற்றும் தொண்டை புற்றுநோயாக இருக்கலாம். அதாவது, உணவை விழுங்குவதில் சிரமம், பசியின்மை, இரத்த வாந்தி, உடல் எடை குறைவு, வாந்தி இவை அனைத்தும் வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள் ஆகும்.

மூளை கட்டி:

தொடர்ந்து தலைவலி இருந்தால், இந்த வலி உங்களுக்கு அடிக்கடி வந்தால் இது மூளை கட்டி புற்றுநோயாக இருக்கலாம்.

ALSO READ: குளிர்காலத்தில் ஏற்படும் வாய்ப்புண்… வீட்டிலேயே சரிசெய்வது எப்படி?

நுரையீரல் புற்றுநோய்:

ஒருவருக்கு இருமல் நீண்ட நாட்களாக இருந்தால், உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது. அதேநேரத்தில், ஒருவருக்கு வறட்டு இருமல் இருந்தால், இது நுரையீரல் புற்றுநோய் அல்லது காசநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

புரோஸ்டேட் புற்றுநோய்:

மலச்சிக்கல் மற்றும் மலம் தொடர்பான பிரச்சனைகள் அடிக்கடி ஏற்பட்டால், இவை பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.

புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள், திடீர் எடை அதிகரிப்பு அல்லது இழப்பு போன்றவை, சில சமயங்களில் பசியின்மை, முடி உதிர்தல், இவை அனைத்தும் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.

சில புற்றுநோய்கள் மிகவும் தீவிரமானவை. எனவே, இவற்றை வராமல் பார்த்து கொள்வது முக்கியம். புற்றுநோய் வராமல் தடுக்க சிகரெட் புகைப்பிடித்தல், மது அருந்துதல், பான் மசாலா, கடைகளில் வாங்கும் உணவுகள் போன்றவற்றைப் பயன்படுத்தவே கூடாது. அதற்கு பதிலாக, ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துகொள்வது நல்லது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

ஹீமோகுலோபின் அதிகரிக்க இந்த 7 ஜூஸ் ட்ரை பண்ணுங்க..
இந்த பிரச்சனை இருப்பவர்கள் கத்திரிக்காயை நிச்சயம் சாப்பிடக்கூடாது.
நடிகை சோபிதா துலிபாலாவின் சினிமா பயணம்..!
எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...